Wednesday 26 November 2014

கார்த்திகை மாத திருவோண திருமஞ்சனம்

இன்று மாலை (27.11.2014)இளங்காடு ஸ்ரீ கண்ணன் திருக்கோயிலில் கார்த்திகை மாத திருவோண திருமஞ்சனம் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவருக்கு நடைபெறும்.



  • வியாழக்கிழமை தோறும் நெய் தீபமிட(48 வியாழக்கிழமைக்கு) ரூ 240/-மட்டும்(48*5) 
  • நெய் தீபம் ஏற்ற ரூ.5 மட்டும்/-
  • அஷ்டோத்தர சங்கல்பம் ரூ.10 /- மட்டும்(கற்கண்டு & துளசியுடன்)
  • சகஸ்ரநாம சங்கல்பம் ரூ.25 /-மட்டும்(கற்கண்டு,திருதுழாய் மற்றும் திராட்சையுடன்) 
  • திருமஞ்சன சங்கல்பம் ரூ.125/- மட்டும்(அபிஷேக தேன் மற்றும் ஏலக்காய் மாலையுடன்)
  • ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் சிறப்பு திருமஞ்சனம் ரூ.500 /-மட்டும்(நெய்வேத்யம் உள்பட)



# நெய்தீபம் ஸ்ரீலக்ஷ்மி ஹயக்ரீவர் சன்னதி முன்பாகவே ஏற்றப்படும்.

மேலும் தகவல் பெற:

ஜெய.கோபிகிருஷ்ணன்

9500264545



அகரத்தில் ஓர் இராமாயணம்


இராமாயண கதை முழுதும்
'அ' என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால் வடிவமைக்கப் பட்டுள்ளது.
" இதுவே தமிழின் சிறப்பு.."
++++++++++++++++++++++++++++++
அனந்தனே
அசுரர்களை
அழித்து,
அன்பர்களுக்கு
அருள
அயோத்தி
அரசனாக
அவதரித்தான்.
அப்போது
அரிக்கு
அரணாக
அரசனின்
அம்சமாக
அனுமனும்
அவதரித்ததாக
அறிகிறோம்.
அன்று
அஞ்சனை
அவனிக்கு
அளித்த
அன்பளிப்பு
அல்லவா
அனுமன்?
அவனே
அறிவழகன்,
அன்பழகன்,
அன்பர்களை
அரவணைத்து
அருளும்
அருட்செல்வன்!
அயோத்தி
அடலேறு,
அம்மிதிலை
அரசவையில்
அரசனின்
அரியவில்லை
அடக்கி,
அன்பும்
அடக்கமும்
அங்கங்களாக
அமைந்த
அழகியை
அடைந்தான் .
அரியணையில்
அமரும்
அருகதை
அண்ணனாகிய
அனந்தராமனுக்கே!
அப்படியிருக்க
அந்தோ !
அக்கைகேயி
அசூயையால்
அயோத்தி
அரசனுக்கும்
அடங்காமல்
அநியாயமாக
அவனை
அரண்யத்துக்கு
அனுப்பினாள்.
அங்கேயும்
அபாயம்!
அரக்கர்களின்
அரசன் ,
அன்னையின்
அழகால்
அறிவிழந்து
அபலையை
அபகரித்தான்
அங்கேயும்
அபாயம்!
அரக்கர்களின்
அரசன் ,
அன்னையின்
அழகால்
அறிவிழந்து
அபலையை
அபகரித்தான்
அந்த
அடியார்களில்
அருகதையுள்ள
அன்பனை
அரசனாக
அரியணையில்
அமர்த்தினர்.
அடுத்து
அன்னைக்காக
அவ்வானரர்
அனைவரும்
அவனியில்
அங்குமிங்கும்
அலைந்தனர்,
அலசினர்.
அனுமன்,
அலைகடலை
அலட்சியமாக
அடியெடுத்து
அளந்து
அக்கரையை
அடைந்தான்.
அசோகமரத்தின்
அடியில் ,
அரக்கிகள்
அயர்ந்திருக்க
அன்னையை
அடிபணிந்து
அண்ணலின்
அடையாளமாகிய
அக்கணையாழியை
அவளிடம்
அளித்தான்
அன்னை
அனுபவித்த
அளவற்ற
அவதிகள்
அநேகமாக
அணைந்தன.
அன்னையின்
அன்பையும்
அருளாசியையும்
அக்கணமே
அடைந்தான்
அனுமன்.
அடுத்து,
அரக்கர்களை
அலறடித்து ,
அவர்களின்
அரண்களை ,
அகந்தைகளை
அடியோடு
அக்கினியால்
அழித்த
அனுமனின்
அட்டகாசம் ,
அசாத்தியமான
அதிசாகசம்.
அனந்தராமன்
அலைகடலின்
அதிபதியை
அடக்கி ,
அதிசயமான
அணையை
அமைத்து,
அக்கரையை
அடைந்தான்.
அரக்கன்
அத்தசமுகனை
அமரில்
அயனின்
அஸ்திரத்தால்
அழித்தான்.
அக்கினியில்
அயராமல்
அர்பணித்த
அன்னை
அவள்
அதி
அற்புதமாய்
அண்ணலை
அடைந்தாள்.
அன்னையுடன்
அயோத்தியை
அடைந்து
அரியணையில்
அமர்ந்து
அருளினான்
அண்ணல் .
அனந்தராமனின்
அவதார
அருங்கதை
அகரத்திலேய
அடுக்கடுக்காக
அமைந்ததும்
அனுமனின்
அருளாலே.

Monday 17 November 2014

ஸ்ரீ கண்ணன் அறக்கட்டளையின் திருநாங்கூர் திவ்யதேச யாத்திரை

நேற்று ஸ்ரீ கண்ணன் அறக்கட்டளையின் மூலம் திருநாங்கூர் திவ்யதேச யாத்திரை மேற்கொண்டோம்.
கீழ்கண்ட சேத்திரங்களை கண்டோம்.
1.வைத்திஸ்வரன் கோயில்
2. மணிமாடக்கோவில் - நாராயணப்பெருமாள் - பத்ரி 
3. அரிமேயவிண்ணகரம் - குடமாடு கூத்தர் - கோவர்த்தனகிரி 
4. வைகுந்தவிண்ணகரம் - ஸ்ரீவைகுண்டம் (பரமபதம்) 
5. வெண்புருடோத்தமம் - அயோத்தி 
6. செம்பொன்செய் கோயில் - அழகிய மணவாளன்- உறையூர்
7. திருவெள்ளக்குளம் - அண்ணன்கோயில் - திருப்பதி
8. திருதெற்றியம்பலம் - பள்ளிகொண்ட பெருமாள் - ஸ்ரீரங்கம்
9. திருத்தேவனார்த் தொலை - கீழச்சாலை - திருவடந்தை
10. திருக்காவளம்பாடி - கோபாலகிருஷ்ணன் ருக்மணியுடன் - துவாரகை
11. திருமணிக்கூடம் - வரதராஜப்பெருமாள் - கச்சி
12. பார்த்தன்பள்ளி - பார்த்தசாரதி - குருசேஷ்த்திரம் 
13.திருவாலி
14.திருநகரி
15.தலைச்சங்கநாண்மதியம்
16.கீழப்பெரும்பள்ளம்
17.திருவெண்காடு
18.திருக்கடையூர் அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர்
19.திருக்கடையூர் அமிர்தநாராயணன்
20.மாயவரம் பரிமளரங்கன்
21.மன்மதீஸ்வரர் மாயவரம்
22.கோவிந்தபுரம்
23.திருபுவனம் சரபேஸ்வரர்
24.திருநாகேஸ்வரம்
25.திருவின்னகர்

இவ்யாத்திரையில்
எங்களுக்கு உற்ற துணையாய் இருந்தவர் ஸ்ரீமான்.மாதவபட்டாச்சாரியார்,

திருவெள்ளக்குளம்
மற்றும் சுரேஷ் திருவெள்ளக்குளம். 

அவர்களுக்கு 

எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

Saturday 1 November 2014

நித்யபடி திருவாராதன திட்டத்தில் இணைந்தோர் பட்டியல் 31.10.2014 வரை



வ.எண்
பெயர்
ஊர்
தேதி
அலைபேசி எண்
1.        
சிவசங்கர்
சென்னை
04/02/15

2.        
மாதவன்
இளங்காடு
08/02/15

3.        
ஆதேஷ்
இளங்காடு
16/02/15

4.        
ஸ்ரீகுரு
இளங்காடு
23/02/15

5.        
சக்திஅப்பாவு
இளங்காடு
07/03/15

6.        
ஹரிஹரன்
இளங்காடு
23/04/15

7.        
புனிதன்
இளங்காடு
02/05/15

8.        
சடகோபன்
இளங்காடு
23/05/15

9.        
இளங்கோ
தஞ்சாவூர்
26/05/15

10.    
மஹாலெட்சுமி
இளங்காடு
26/06/15

11.    
சிவானி
இளங்காடு
29/07/15

12.    
கவிநயா
இளங்காடு
10/08/15

13.    
சரவணன்
இளங்காடு
23/08/15

14.    
விஜயலக்ஷ்மி
இளங்காடு
03/09/15

15.    
போதிதர்மன்
இளங்காடு
18/09/15

16.    
தமிழ்வேந்தன்
இளங்காடு
25/10/15

17.    
அதியமான்
இளங்காடு
24/11/15

18.    
ஸ்ரீனிவாசன்
சென்னை
30/11/15

19.    
தாட்சாயினி
இளங்காடு


20.    
நாராயணசாமி ஐயர்
திருக்காட்டுப்பள்ளி


21.    
மெய்யழகன்
இளங்காடு


22.    
துரைமுருகன்
இளங்காடு


23.    
கார்குழலி
ஓமன்