Thursday 26 December 2013

அனுமனின் 108 நாமங்கள்

Name Meaning
Anjaneya Son of Anjana
Anjanagarbhasambhoota Born of Anjani
Ashokavanikachhetre Destroyer of Ashoka Orchard
Akshahantre Slayer of Aksha
Balarka Sadrushanana Like the Rising Sun
Bheemasenasahayakrute Helper of Bheema
Batnasiddhikara Granter of Strength
Bhakthavatsala Protector of Devotees
Bajrangbali With strength of daamod
Bhavishya Chaturanana Aware of Future Happenings
Chanchaladwala Glittering Tail Suspended Above The Head.
Chiranjeevini Immortal
Chaturbahave Four-Armed
Dashabahave Ten-Armed
Danta Peaceful
Dheera Courageous
Deenabandhave Defender of the Oppressed
Daithyakulantaka Destroyer of Demons
Daityakarya Vidhyataka Destroyer of All Demons' Activities
Dhruddavrata Determined Meditator
Dashagreevakulantaka Slayer of the Ten-Headed Ravana Race
Gandharvavidya Tatvangna Exponent in the Art of Celestials
Gandhamadhana Shailastha Resident of Gandhamadhana
Hanumanta One with Puffy Cheeks
Indrajit Prahitamoghabrahmastra Vinivaraka Remover of the Effect of Indrajit's Brahmastra
Jambavatpreeti Vardhana Winner of Jambavan's Love
JaiKapeesh Hailing Monkey
Kapeeshwara Lord of Monkeys
Kabalikruta One who swallowed the Sun
Kapisenanayaka Head of the Monkey Army
Kumarabrahmacharine Youthful Bachelor
Kesarinandan Son of Kesari
Kesarisuta Son of Kesari
Kalanemi Pramathana Slayer of Kalanemi
Harimarkatamarkata Lord of the Monkeys
Karagrahavimoktre One who Frees from Imprisonment
Kalanabha Organizer of Time
Kanchanabha Golden-Hued Body
Kamaroopine Altering Form at Will
Lankineebhanjana Slayer of Lankini
Lakshmanapranadatre Reviver of Lakshmana's Life
Lankapuravidahaka The One Who Burnt Lanka
Lokapujya Worshipped by the Universe
Maruti Son of Marut (wind god)
Mahadhyuta Most Radiant
Mahakaya One with colossal body
Manojavaya Swiftness like Wind
Mahatmane Supreme Being
Mahavira Most Courageous
Marutatmaja Adored Like Gems
Mahabala Parakrama Of Great Strength
Mahatejase Most Radiant
Maharavanamardana Slayer of the Famous Ravana
Mahatapase Great Meditator
Navavyakruti Pandita Skilful Scholar
Parthadhwajagrasamvasine Having Principal Place on Arjuna's Flag
Pragnya Scholar
Prasannatmane Cheerful
Pratapavate Known for Valour
Paravidhyaparihara Destroyer of Enemies Wisdom
Parashaurya Vinashana Destroyer of Enemy's Valour
Parijata Tarumoolastha Dweller under the Parijata Tree
Prabhave Popular Lord
Paramantra Nirakartre Acceptor of Rama's Mantra Only
Pingalaksha Pink-Eyed
Pavanputra Son of Wind god
Panchavaktra Five-Faced
Parayantra Prabhedaka Destroyer of Enemies' Missions
Ramasugreeva Sandhatre Mediator between Rama and Sugreeva
Ramakathalolaya Crazy of listening Rama's Story
Ratnakundala Deeptimate Wearing Gem-Studded Earrings
Rudraveerya Samudbhava Born of Shiva
Ramachudamaniprada Deliverer of Rama's Ring
Ramabhakta Devoted to Rama
Ramadhuta Ambassador of Rama
Rakshovidhwansakaraka Slayer of Demons
Sankatamochanan Reliever of sorrows
Sitadevi Mudrapradayaka Deliverer of the Ring of Sita
Sarvamayavibhanjana Destroyer of All Illusions
Sarvabandha Vimoktre Detacher of all Relationship
Sarvagraha Nivashinay Killer of all Evil Effects of Planets
Sarvaduhkhahara Reliever of all Agonies
Sarvalolkacharine Wanderer of all Places
Sarvamantra Swaroopavate Possessor of all Hymns
Sarvatantra Sawaroopine Shape of all Hymns
Sarvayantratmaka Dweller in all Yantras
Sarvarogahara Reliever of all Ailments
Sarvavidhyasampath Pradayaka Granter of Knowledge and Wisdom
Shrunkalabandhamochaka Reliever from a Chain of Distresses
Sitashoka Nivarana Destroyer of Sita's Sorrow
Shrimate Honored
Simhikaprana Bhanjana Slayer of Simhika
Sugreeva Sachiva Minister of Sugreeva
Shoora Gallant
Surarchita Worshipped by Celestials
Sphatikabha Spotless, Crystal-Clear
Sanjeevananagahatre Carrier of Sanjeevi Mount
Shuchaye Pure, Chaste
Shanta Very Composed and Calm
Shatakanttamadapahate Destroyer of Shatakantta's Arrogance
Sitanveshana Pandita Skilful in finding Sita's Whereabouts
Sharapanjarabhedaka Destroyer of the Nest made of Arrows
Sitaramapadaseva Always engaged in Rama's Service
Sagarotharaka Leapt Across the Ocean
Tatvagyanaprada Granter of Wisdom
Vanara Monkey
Vibheeshanapriyakara Beloved of Vibheeshana
Vajrakaya Hard Like Metal
Vardhimainakapujita Worshipped by Mynaka
Vagmine Spokesman
Vijitendriya Controller of the Senses
Vajranakha Strong-Nailed
Vagadheeksha Lord of Spokesmen
Yogine Yogi (Saint)

Tuesday 17 December 2013

பஞ்ச ஸம்ஸ்காரம்

                              ஒருவன் ஒரு ஆசார்யனிடத்தில் பஞ்ச ஸம்ஸ்காரம் பெறுவதன் மூலமாக ஸ்ரீவைஷ்ணவன் ஆகிறான். ஸம்ஸ்காரம் என்றால் தயார் செய்தல் என்று பொருள். ஒரு செயல் செய்யத் தகுதி இல்லாத ஒன்றை ஸம்ஸ்காரத்தின் மூலமாக தகுதி உள்ளதாக மாற்றுவர்.
 
பெரிய நம்பி ராமாநுஜருக்கு பஞ்ச ஸம்ஸ்காரம் செய்தல்
நாம் பஞ்ச ஸம்ஸ்காரத்தை “தாப: புண்ட்ர: ததா நாம: மந்த்ரோ யாகச் ச பஞ்சம:” என்கிற ப்ரமாணத்தைக் கொண்டு அறிகிறோம். பஞ்ச ஸம்ஸ்காரத்தின் பொழுது நடக்கும் ஐந்து செயல்களாவன:
  • தாபம் - சூடேற்றப்பட்ட சங்கு மற்றும் சக்கரத்தால் தோள்களில் பெறும் முத்திரை
  • புண்ட்ரம் - உடம்பில் பன்னிரு திருமண் மற்றும் ஸ்ரீசூர்ணம் சாற்றுதல்
  • நாமம் – எம்பெருமான் மற்றும் ஆசார்யனிடம் உள்ள தொடர்பை வெளியிடும் ஆசார்யன் இடும் தாஸ்ய நாமம் (ராமாநுஜ தாஸன், ஸ்ரீநிவாஸ தாஸன், ஸ்ரீவைஷ்ணவ தாஸன்)
  • மந்த்ரம் – ஆசார்யனிடத்தில் இருந்து பெறும் ரஹஸ்ய மந்த்ரங்கள் (மந்தரமாவது – தன்னை த்யானிப்பவரை க்லேசங்களில் இருந்து விடுவிப்பது – இங்கே நம்மை ஸம்ஸாரம் என்னும் துன்பத்தில் இருந்து விடுபடச்செய்யும் திருமந்திரம், த்வயம், சரம ச்லோகத்தில் நோக்கு)
  • யாகம் – தேவ பூஜை – திருவாராதன க்ரமத்தைக் கற்றறிதல்
நம் பூர்வாசார்யர்கள் விளக்கியுள்ளபடி, பஞ்ச ஸம்ஸ்காரத்தின் குறிக்கோள் இரண்டு பகுதியாக உள்ளது.:
  • தத்வ ஜ்ஞாநாந் மோக்ஷ லாப:” என்பதன்படி – உண்மை அறிவால் ஒருவன் மோக்ஷம் பெறுகிறான். சிஷ்யன் ஆசார்யனிடத்தில் இருந்து ரஹஸ்ய த்ரயத்தையும் கற்றுக்கொள்வதன் மூலம் அர்த்த பஞ்சகத்தை முழுமையாக அறிந்து நித்ய விபூதியில் ஸ்ரீமந் நாராயணனுக்குக் கைங்கர்யம் செய்யும் தகுதியைப் பெறுகிறான். அர்த்த பஞ்சகமாவது – ஜீவாத்ம ஸ்வரூபம், பரமாத்ம ஸ்வரூபம், உபாய ஸ்வரூபம், பல ஸ்வரூபம் மற்றும் விரோதி ஸ்வரூபம்.
  • இருக்கும் காலத்தில், பகவத் பாகவத ஆசார்ய கைங்கர்யத்தில் ஈடுபடுதல். நாம் இருக்கும் தற்போதைய நிலையில், திவ்ய தேசங்களில் எழுந்தருளியிருக்கும் அர்ச்சாவதார எம்பெருமான்களுக்கும் க்ருஹங்களில் எழுந்தருளியிருக்கும் அர்ச்சாவதார எம்பெருமான்களுக்கும் கைங்கர்யம் செய்வதே எளிதானது

அநத்யயன காலமும் - அத்யயன உத்ஸவமும்




ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவ ஸத் ஸம்ப்ரதாயம் உபயவேதாந்தத்தைச் சார்ந்துள்ளது. உபய என்றால் ‘சேர்ந்து’ அல்லது ‘இரண்டும் சேர்ந்து’ என்றும், அந்தம் என்றால் முடிவு அதாவது வேதத்தின் முடிவு பகுதியே வேதாந்தம் என்றும் காண்கிறோம். ஸம்ஸ்க்ருத மொழியிலுள்ள ரிக், யஜுர், ஸாம அதர்வண வேதங்களும், உபநிஷத்துகளான வேதாந்தமும் சேர்ந்தே காண்பது போல், தமிழில் த்ராவிட வேதம் என்றழைக்கப்படும் திவ்ய ப்ரபந்தமும், அவற்றின் வ்யாக்யானமாக தமிழ் வேதாந்தத்தையும் சேர்த்தே நம் பூர்வாசார்யர்கள் போற்றினார்கள். உபய வேதாந்தமும் இரண்டு கண்களாகக் கருதப்படுகின்றன. எம்பெருமானால் ‘மயர்வற மதிநலம் அருளப் பெற்ற’ ஆழ்வார்கள், அற்புதமான திவ்ய ப்ரபந்தத்தை அருளிச்செய்து, அதன் மூலம் ஸம்ஸ்க்ருத வேதத்தின் ஸாரார்த்தத்தை தெளிவாக்கி, இவ்வுலகோர் உய்ய வழி காட்டியருளினார்கள். அவர்கள் மீது நம் ஆசார்யர்களும், நாமும் ப்ரேமத்தோடே பேணி அநுஸந்திக்க இதுவே காரணமாகத் தட்டில்லை.

அத்யயனம் என்றால் கற்றுக்கொள்வது, படிப்பது, பலமுறை சொல்லிப் பார்ப்பது. வேதத்தை நாம் ஆசார்யரிடமிருந்து செவிவழி கேட்டு, மறுபடியும் மறுபடியும் சொல்லிப் பார்த்து கற்றுக் கொள்வது. பிறகு நித்யாநுஷ்டான முறையில் கற்றுக்கொண்ட வேதத்தை அனுதினமும் ஒத வேண்டும். அநத்யயனம் என்றால் அத்யயனம் செய்யாமல் இருத்தல். வருடத்தில் சில காலங்கள் நாம் வேதம் ஒதுவதில்லை. இந்த சில காலங்களில் ஸ்ம்ருதி, இதிஹாஸ புராணங்கள் முதலியவற்றைக் கற்றுக்கொள்வர்கள் . மேலும், அமாவாசை, பௌர்ணமி, ப்ரதமை போன்ற நாட்கள் வேதம் கற்றுக் கொள்ள ஏற்றவையல்ல. த்ராவிட வேதமும் ஸம்ஸ்க்ருத வேதத்திற்கு இணையாகக் கருதப்படுவதால், இதற்கும் அநத்யயன காலம் உள்ளது. த்ராவிட வேதத்திற்கு எவ்வாறு இந்த அநத்யயன காலம் ஏற்பட்டது என்பதைப் பற்றி மேலே காண்போம்.
அநத்யயன காலத்திலேயே நாம் அத்யயன உத்ஸவம் கொண்டாடுவது வழக்கம். நம்மாழ்வார் பரமபதம் சென்ற நாளை அத்யயன உத்ஸவமாக போற்றிக் கொண்டாடுவது நம் ஸம்ப்ரதாய வழக்கம். ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் இவற்றுக்கு உண்டான விசேஷ தொடர்பு பற்றி  பெரியவாச்சான் பிள்ளை ‘கலியன் அருள் பாடு’ (http://srivaishnava-literature.blogspot.in/p/kaliyan-arul-padu.html) என்ற க்ரந்தத்தில் விரிவாக விளக்கியுள்ளார். இந்த புத்தகத்தை ‘பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீ ஸூக்திமாலா மலர்-1′ என்ற இதழின் மூலமாக புத்தூர் க்ருஷ்ணஸ்வாமி ஐயங்கார் வெளியிட்டார்.
இந்த க்ரந்தத்தின் விரிவுக்கஞ்சி, நம் தலைப்பிற்குத் தொடர்பான சில முக்கிய விஷயங்களை மட்டும் நாம் மேலே பார்க்கலாம்.

  • பரம்பொருள் ஸ்ரீமந்நாராயணன், தன் நிர்ஹேதுக க்ருபையால் சகல ஜீவாத்மாக்களும் ஸம்ஸாரம் என்ற கரையைக் கடக்க, பரமபதத்திலிருந்து இறங்கி வந்து அர்ச்சாவதார திருமேனியுடன் அதாவது, எளியவர்களும் பார்க்கும்படியாகவும், கைங்கர்யம் செய்ய ஹேதுவாகவும் கோயில், திருமலை, பெருமாள் கோயில் என்று ப்ரஸித்தமாக போற்றப்படும், ஸ்ரீரங்கம், திருவேங்கடம், காஞ்சிபுரம் போன்ற இடங்களில் அவதரித்து அருள் செய்கின்றான்.


  • ஆழ்வார்களுள் கடைசியாக அவதரித்த திருமங்கையாழ்வார், எம்பெருமானால் திருத்திப் பணிகொள்ளப்பட்டு, பகவானின் அர்ச்சாமூர்த்திகளில் ஆழ்ந்து, மங்களாசாசனம் செய்து, ஸ்ரீரங்கம் சென்று சேர்ந்து பல கைங்கர்யங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இருந்தமிழ் நூல் (திருவாய்மொழி) புலவன் மங்கையாளன் என்று தன்னைப் பற்றிக் கூறியவர், ஆழ்வாரின் பாசுரங்களில் மிகவும் ஆழ்ந்து அநுபவித்து, ஸேவித்து வந்தார்.



  • பொதுவாக நாம் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நக்ஷத்ரத்தில், பௌர்ணமி திதி அன்று திருக்கார்த்திகை தீபம் கொண்டாடுகின்றோம். அப்படி ஒரு திருக்கார்த்திகை அன்று, நம்பெருமாளும் ஸ்ரீதேவி பூதேவி நாச்சிமார்களும் திருமஞ்சனம் கண்டருளி, ஸ்ரீ வைஷ்ணவ பக்த கோஷ்ட்டியில் எழுந்தருளியிருக்கும் காலத்தே, திருமங்கையாழ்வார் திருநெடுந்தாண்டகம் என்ற ப்ரபந்தத்தை இயற்றி, எம்பெருமானுக்கு இசையோடு பாடிக் காண்பித்தார். மேலும், திருவாய்மொழியிலிருந்தும் சில பாசுரங்களை திவ்யமான இசையோடு பாடினார்.


  • இதைக் கேட்ட நம்பெருமாள் மிகவும் உகந்து, உமக்கு ஏதேனும் விருப்பம் இருந்ததாகில் கேளும் அதை நாம் என்று திருமங்கையாழ்வாரிடம் கூறினார்.
  • திருமங்கையாழ்வார் தனக்கு இரண்டு விருப்பங்கள் என்று மேலே விண்ணப்பிக்கிறார்:
    • எம்பெருமான் வைகுண்ட ஏகாதசி, அதாவது, மார்கழி மாதம் சுக்ல பக்ஷம் அன்று அத்யயன உத்ஸவம் கொண்டருளும்போது வேத பாராயணத்துடன், திருவாய்மொழியை முழுவதுமாக கேட்டு அநுபவிக்க வேண்டும்.
    • திருவாய்மொழியை உலகோர் உணர ஸம்ஸ்க்ருத வேதத்திற்கு இணையானது என்று அறிவிக்க வேண்டும்

  • எம்பெருமான் திருவுள்ளம் உகந்து இரண்டு விருப்பங்களையும் நிறைவேற்றினார்.
  • கலியன் தொடர்ந்து பாடியாதால் அவருடைய குரல்வள சிரமத்தைக் கண்ட எம்பெருமான், திருக்கார்த்திகை தீபமன்று தன் திருமேனியில் சார்த்தியது போக உள்ள எண்ணெயை அவருக்கு கொடுக்க வேண்டும் என்று உடனடியாக உத்தரவு பிறப்பித்தார்.
  • மேலும், ஆழ்வார் திருநகரியில் உள்ள அர்ச்சா ரூபத்திலுள்ள ஸ்வாமி நம்மாழ்வாருக்குத் திருமுகம் (தகவல்) அனுப்பப்பட்டு, அவர் உடனடியாக கிளம்பி ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தார்.
  • திருமங்கையாழ்வார், வைகுண்ட ஏகாதசி தொடக்கமாக தொடர்ந்து பத்து நாட்கள், காலையில் வேத பாராயணமும், மாலையில் திருவாய்மொழி கோஷ்டியும் நடந்தேற வழி செய்தார். உத்ஸவத்தின் கடைசி நாளன்று, ஆழ்வார் திருவடி தொழல், அதாவது, நம்மாழ்வார் நம்பெருமாளின் திருவடியைத் தன் திருமுடியால் தீண்டும் நன்னாளை பக்தியுடன் கொண்டாடும் ஸம்ப்ரதாயத்தை அன்று ஏற்படுத்தினார். பிறகு, நம்மாழ்வார் ஆழ்வார் திருநகரிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.  இப்படிச் சிலகாலம் சென்றது.
  • கலியுகத்தின் கோலம், காலப் போக்கில் திவ்ய ப்ரபந்தம் தாற்காலிகமாக மறைந்து, ஆழ்வாரும் ஸ்ரீரங்கத்துக்கு எழுந்தருளுவது நின்றது.
  • நாதமுநிகள் அவதரித்து, எம்பெருமானின் க்ருபையால், ஆழ்வாரைப் பற்றியும் திவ்ய ப்ரபந்தத்தைப் பற்றியும் அறிந்து, ஆழ்வார் திருநகரி அடைந்து, மதுரகவியாழ்வாரின் ஆசார்ய பக்தி தெள்ளத் தெளிவாகத் தோற்றும் கண்ணிநுன் சிறுத்தாம்பை கற்றுக் கொண்டு, அதன் மூலம் நம்மாழ்வாரின் பரம க்ருபையைப் பெற்று, நாலாயிரமும் ஸம்ப்ரதாய அர்த்தத்துடன் கற்று நம்மையெல்லாம் உய்வித்தார்.


  • நாதமுநிகள் தன் சிஷ்யகோடிகளுக்கு அத்யயனம் செய்து வைத்து, ஸ்ரீரங்கத்தில் மறுபடியும் அத்யயன உத்ஸவத்தை ஆரம்பித்து வைத்தார். திவ்ய ப்ரபந்தத்தின் ஏற்றத்தையும், ஆழ்வார்களின் பெருமைகளையும் நம்மாழ்வார் மூலம் அறிந்த ஸ்ரீமந்நாதமுநிகள், நம்மாழ்வார் ஸ்ரீரங்கம் எழுந்தருளும்படி வழி செய்தார்.
  • வேதத்திற்கு இணையானது திருவாய்மொழி என்ற எம்பெருமானின் நியமனத்தை அநுசரித்து, நாதமுநிகள் திருவாய்மொழிக்கும் மற்ற ப்ரபந்தங்களுக்கும் அநத்யயன காலத்தை ஏற்படுத்தினார். திவ்ய ப்ரபந்தங்களுக்கு, அநத்யயன காலம் திருக்கார்த்திகை தீப நாளிலிருந்து  தொடங்கி அத்யயன உத்ஸவ நாளுக்கு முன்பாக முடியும். அத்யயன காலம் அத்யயன உத்ஸவ முதல் நாளில் தொடங்கித் திருக்கார்த்திகை தீபமன்று முடியும்.
  • நாதமுனிகள் நின்று போயிருந்த அத்யயன உத்ஸவத்தைத் தொடங்கும் பொருட்டு, எம்பெருமானிடம் இருந்து ஆழ்வாருக்கு ஸ்ரீமுகம் (தகவல்) செல்லும்படியும், பெரிய பெருமாள் ஆழ்வார் பாசுரங்களை அத்யயன உத்ஸவத்தில் கேட்டு முடிக்கும் வரை ஸ்ரீவைஷ்ணவர்கள் அவற்றை நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழியாமல் இருக்கும்படிக்கும் ஏற்பாடு செய்தார்.
  • மேலும், திருக்கார்த்திகை தீபம் அன்று எம்பெருமானுக்குச் சாத்திய எண்ணெய்க்காப்பு சேஷத்தை நம்மாழ்வார் தொடக்கமான மற்றைய ஆழ்வார் ஆசார்ய்களுக்குச் சாத்தி அந்த சேஷத்தை ஸ்ரீவைஷ்ணவர்களுக்குக் ப்ரசாதிக்குமாறு செய்தார்.
  • நம்மாழ்வாரின் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி மற்றும் திருவாய்மொழி நான்கு வேதங்களுக்கு ஸமமாகவும் மற்றைய ஆழ்வார்களின் திவ்ய ப்ரபந்தங்கள் வேதத்தின் அங்க (சீக்ஷா, கல்பம், வ்யாகரணம், நிருக்தம், சந்தஸ், ஜ்யோதிஷம்) உபாங்ககளாகவும் கருதப்படுகிறது. இந்த ப்ரபந்தங்கள் திருமந்திரம், த்வயம் மற்றும் சரம் ச்லோகத்தின் அர்த்தங்களையும் விளக்குகின்றன.
  • மேலும், நாதமுனிகள் பின்வரும் நியமனங்களைச் செய்தார்.
    • அத்யயன உத்ஸவத்தின் முதல் 10 நாட்கள் (அமாவாஸ்யை தொடங்கி வைகுண்ட ஏகாதசி வரை) முதலாயிரம் (திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி, நாச்சியார் திருமொழி, பெருமாள் திருமொழி, திருச்சந்த விருத்தம், திருமாலை, திருப்பள்ளியெழுச்சி, அமனாதிபிரான், கண்ணிநுண் சிறுத் தாம்பு), பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம் ஆகியவை) சேவிக்கப்படும்.
    • வைகுண்ட ஏகாதசி அன்று, திருவாய்மொழி தொடக்கம் செய்யப்படும்.
    • 10 நாட்களும், காலையில் வேத பாராயணமும் மாலையில் திருவாய்மொழியும் (ஒரு நாளைக்கு ஒரு பத்து வீதம்) சேவிக்கப்படும். கடைசி நாள் நம்மாழ்வார் திருவடி தொழல் உயர்ந்த சாற்றுமுறையுடன் கொண்டாடப்படும்.
    • 21ஆம் நாள் இயற்பா (முதல் திருவந்தாதி, இரண்டாம் திருவந்தாதி, மூன்றாம் திருவந்தாதி, நான்முகன் திருவந்தாதி, திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவெழுக்கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல்) பூர்த்தியாகச் சேவிக்கப்படும். (குறிப்பு: இராமானுச நூற்றந்தாதி நம்பெருமாளின் ஆணையின் பேரில் எம்பெருமானார் காலத்திலேயே இயற்பாவில் சேர்க்கப்பட்டது. 21ஆம் நாள் அன்று இரவு புறப்பாட்டில் சேவிக்கப்படும்).
  • மேலும், நாதமுனிகள் எப்படி ப்ராஹ்மணன் தவறாமல் வேதம் கற்றுக்கொள்கிறானோ, அது போல ப்ரபந்நர்களான ஸ்ரீவைஷ்ணவர்கள் திவ்ய ப்ரபன்தங்களை அவசியம் கற்றுக் கொள்ளுதல் வேண்டும் என்று நியமிக்கிறார்.
  • மேலும், மார்கழி மாதத்தில், அதிகாலையில் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருப்பள்ளியெழுச்சியும் ஆண்டாளின் திருப்பாவையும் சேவிக்கப்படுகிறது (அநத்யயன காலமாக இருந்தாலும் இந்த இரு ப்ரபந்தங்களும் முறையே பகவானையும் பாகவதர்களையும் துயிலெழுப்புவதால், இவற்றைச் சேவிக்கத் தடை ஏதும் இல்லை).
  • இவ்வாறு உய்யக்கொண்டார், மணக்கால் நம்பி, ஆளவந்தார், பெரிய நம்பி மற்றும் எம்பெருமானாரின் காலம் வரை சென்றது. எம்பெருமானார் காலத்தில் ஒரு முறை ஏதோ சில காரணங்களினால் நம்மாழ்வார் ஸ்ரீரங்கம் எழுந்தருள முடியவில்லை. எம்பெருமானார் நம்மாழ்வாரின் அர்ச்சா திருமேனியையும் மற்றைய ஆழ்வார்களின் திருமேனிகளையும் எல்லா திவ்ய தேசங்களிலும் ப்ரதிஷ்டை பண்ணும்படி நியமித்தார். திருமலையே எம்பெருமானின் திருவுடம்பாகக் கருதப்படுவதால் ஆழ்வார்களை திருவேங்கட மலையடிவாரத்தில் ப்ரதிஷ்டை பண்ணச் செய்தார். மேலும் அனைத்து திவ்ய தேசங்களிலும் அத்யயன உத்ஸவம் சிறப்பாகக் கொண்டாடும்படி நியமித்தார்.

  • திருக்குருகைப்பிரான் பிள்ளான் எம்பெருமானாரின் நியமனத்துடன் திருவாய்மொழிக்கு ஒரு வ்யாக்யானம் எழுதி அவரிடம் சமர்ப்பிக்கிறார். எம்பெருமானார் மிகவும் உகந்து அனைவரும் ஸ்ரீ பாஷ்யத்துடன் இதையும் கற்கும்படி நியமிக்கிறார்.
  • எம்பெருமானார் ஸ்ரீரங்கத்தில் பலகாலம் ஸ்ரீவைஷ்நவர்களின் பெருந்திரளில் வாழ்ந்தார். அவர்களுக்கு ஸாரார்த்தங்களை விளக்கிக்கொண்டும் பெரிய பெருமாளுக்கு மங்களாசாஸனம் செய்து கொண்டும் வாழ்ந்தார்.எம்பெருமானார் பரமபதத்துக்கு எழுந்தருளிய பிறகு, ஆழ்வானின் திருக்குமாரரும் பெரிய பெருமாள் மற்றும் பெரிய பிராட்டியின் ஸ்வீகார புத்ரரான பட்டர், எம்பெருமானாரின் அபிமான புத்ரரான பிள்ளான், அருளாளப் பெருமாள் எம்பெருமானார், எம்பார், கந்தாடை ஆந்டான், முதலியவர்கள் கூடி எம்பெருமானின் ஆணைக்கேற்ப எம்பெருமானாரின் அர்ச்சா விக்ரஹத்தை அனைத்துலகின் வாழ்ச்சிக்காக ஏற்படுத்தி வைத்தனர். இது போல அனைத்து திவ்ய தேசங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டது.
    நாதமுனிகள் கண்ணிநுண் சிறுத்தாம்பின் ஏற்றத்தை அறிந்து 4000 திய்வ ப்ரபந்தத்தில் அதைச் சேர்த்தார்போல் எம்பெருமானும் இராமானுச நூற்றந்தாதியை 4000 திவ்ய ப்ரபந்தத்தில் சேர்க்கும்படி ஆணையிடுகிறான். எப்படி ப்ராஹ்மணன் அநுதினமும் காயத்ரி ஜபம் செய்வது அவசியமோ அது போல ப்ரபந்நன் அநுதினமும் ப்ரபந்ந காயத்ரி என்று போற்றப்படும் இராமானுச நூற்றந்தாதியை ஒரு முறையேனும் சொல்லுதல் அவசியம்.
  • இவ்வாறு பிற்பட்ட ஆசார்யர்கள் எம்பெருமானார் உரைத்த ஸாரார்த்தங்களை அனைத்துலகும் வாழ உபதேசித்துப் போந்தார்கள். இவ்வாறாக கலியன் அருள் பாடு என்னும் க்ரந்தம் முடிவடைகிறது.
பின்பு, பராசர பட்டர் திருநாராயணபுரத்துக்குச் சென்று வேதாந்தியிடம் வாதம் செய்து, வாதத்தில் ஜெயித்து அவரை சிஷ்யராக ஏற்றுக் கொள்கிறார். வேதாந்தியும் பட்டரைத் தன் ஆசார்யனாக ஏற்றுக்கொண்டு சந்யாஸம் பெற்றுக் கொள்கிறார். பிற்காலத்தில் நஞ்ஜீயர் என்று ப்ரசித்தமாக அழைக்கப்படுகிறார். பட்டர் வேதாந்தியை வாதத்தில் வென்று அத்யயன உத்ஸவத்தின் முதல் நாள் ஸ்ரீரங்கத்தை அடைகிறார். பெரிய பெருமாள் பட்டரிடம் வாதத்தைப் பற்றி விசாரிக்க பட்டர் வேதாந்தியை திருமங்கை ஆழ்வாரின் திருநெடுந்தாண்டகம் திவ்ய ப்ரபந்தத்தை வைத்து வென்றேன் என்கிறார். பெரிய பெருமாள் மிகவும் திருவுள்ளம் உகந்து பட்டரை மிகவும் பெருமைப்படுத்தவேண்டும் என்று நியமிக்கிறார். மேலும் ஸ்ரீரங்கத்தில் அத்யயன உத்ஸவம் திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்க வேண்டும் என்று நியமிக்கிறார். இவ்வாறு நம் ஸத் ஸம்ப்ரதாயத்தின் அத்யயன உத்ஸவத்தைச் சுருக்கமாக அனுபவித்தோம்.
 

பொதுவாக, பல திவ்ய தேசங்களில் அத்யயன உத்ஸவம் 21 நாட்களாகக் கொண்டாடப் படுகிறது.

  • எம்பெருமான், நாச்சியார்கள், ஆழ்வார்கள் மற்றும் ஆசார்யர்கள் 21 நாட்களும் பெரிய ஓலக்கத்தில் (சபையில்) எழுந்தருளியிருப்பர்கள்.
    • எம்பெருமானும் நாச்சியார்களும் ஓலக்கத்தின் நடுவில் வீற்றிருப்பர்கள். ஆழ்வார்களும் ஆசார்யர்களும் எம்பெருமானுக்கு இரு புறமும் எதிரெதிராக வீற்றிருப்பர்கள்.
    • பல திவ்ய தேசங்களில், நம்மாழ்வார் ஆழ்வார் கோஷ்டிக்கு முதல்வராக இருப்பார். அவருடன் திருமங்கை ஆழ்வாரும் எம்பெருமானாரும் எழுந்தருளியிருப்பர்கள் (ஸ்ரீவைஷ்ணவ ஸத் ஸம்ப்ரதாயத்திற்கு இவர்கள் செய்த பேருபகாரத்தை நினைவில் கொண்டு இவர்கள் முதலில் எழுந்தருளிருப்பர்). மற்றைய ஆழ்வார் ஆசார்யர்கள் தொடர்ந்து எழுந்தருளிருப்பர்.
    • வானமாமலை திருக்குறுங்குடி போன்ற சில திவ்ய தேசங்களி நம்மாழ்வாருக்குத் தனியாக அர்ச்சா விக்ரஹம் இல்லாததால் கலியனும் எம்பெருமானாரும் கொண்டாட்டங்களை முன்னின்று நடத்திப் போவர்கள்.
    • ஸ்ரீபெரும்பூதூரில் எம்பெருமானாருக்கு முக்கியத்துவம் உள்ளதாலும், ஆண்டாள் நாச்சியார் எம்பெருமானாரை “நம் கோயில் அண்ணர்” என்று அழைத்துத் தன் அண்ணனாக ஏற்றுக்கொண்டதாலும், அவர் எம்பெருமானாருக்கு அடுத்து ஆழ்வார் கோஷ்டியில் முதன்மையாக எழுந்தருளுகிறார்.
    • வைகுண்ட ஏகாதசி தொடங்கி மாலை வேளையில் பரமபத வாசல் திறக்கப்படும். நம்மாழ்வார் பரமபத வாசலுக்கு வெளிப்புறம் நின்று, வாசல் திறக்கும்போது எம்பெருமானுக்கு மங்களாசாஸனம் செய்து பின்பு எம்பெருமானுடன் புறப்பாடு கண்டருள்வர். சில திவ்ய தேசங்களில், மற்றைய ஆழ்வார் ஆசார்யர்களும் பரமபத வாசல் சேவைக்கு எழுந்தருளுகின்றனர்.
  • பகல் பத்து மற்றும் திருமொழித் திருநாள் எனப்படும் முதல் 10 நாட்கள் முதலாயிரமும் பெரிய திருமொழியும் சேவிக்கப்படும். திருவீதிப் புறப்பாடு இருக்கும் திவ்ய தேசங்களில் புறப்பாட்டின்போது உபதேச ரத்தின மாலை சேவிக்கப்படும்.
  • வைகுண்ட ஏகாதசி அன்று தொடங்கி 10 நாட்கள் இரவில் திருவாய்மொழி சேவிக்கப்படும். இந்தப் பத்து நாட்கள் இராப்பத்து என்றும் திருவாய்மொழித் திருநாள் என்றும் போற்றப்படுகிறது.
  • இருபதாவது நாள் ஆழ்வார் திருவடித் தொழல் மற்றும் திருவாய்மொழி சாற்றுமுறையுடன் இனிதே முடியும். திருவடித் தொழலின் போது நம்மாழ்வார் அர்ச்சகர்கள் நம்மாழ்வாரைக் கைத்தலமாக எம்பெருமானிடம் எழுந்தருளப்பண்ணிக்கொண்டு சென்று எம்பெருமானின் திருவடியில் ஆழ்வாரின் திருமுடி படும்படிச் சேர்த்து விடுவர். பின்பு ஆழ்வார் திருத்துழாயால் முழுவதும் மூடப்படுவர்.
  • 21ஆம் நாள்
    • மாலை – இயற்பா சேவிக்கப்படும்
    • இரவு – இராமானுச நூற்றந்தாதி கோஷ்டி மற்றும் இயல் சாற்றுடன் வீதி புறப்பாடு.
  • 22ஆம் நாள் – திருப்பல்லாண்டு தொடக்கம். இன்று முதல் ஸந்நிதிகளில் 4000 திவ்ய ப்ரபந்தம் சேவித்தல் ஆரம்பம்.

ஓரொரு திவ்ய தேசங்களில் அத்யயன உத்ஸவதில் சில விசேஷ அம்ஸங்கள் காணப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை இப்பொது காண்போம்.

  • ஸ்ரீரங்கம்
    • 22 நாட்கள் கொண்டாட்டம் – பகல் பத்துக்கு முந்தைய நாள் திருநெடுந்தாண்டகம் சேவிக்கப்படும். தொடர்ந்து 21 நாட்கள் அத்யயன உத்ஸவம்.
    • பாசுரங்களை அரையர்களே அபிநயத்துடன் நாட்டிய நாடகம் போல நம்பெருமாள், நாச்சியார்கள் மற்றும் ஆழ்வார் ஆசார்யர்களின் ஓலக்கத்தில் சேவிக்கின்றனர்.
    • அரையர் ஸேவையின் போது நம்பெருமாளும் நாச்சியார்களும் உயர்ந்த மண்டபத்தில் வீற்றிருக்க ஆழ்வார் ஆசார்யர்கள் நம்பெருமாளை நோக்கிக் கொண்டு எழுந்தருளியிருப்பர்கள்.
  • ஆழ்வார் திருநகரி
    • அபிநயத்துடன் அரையர் சேவை. முதல் நாள் அரையர் சேவிப்பதை மறுநாள் அத்யாபகர்கள் கோஷ்டியாகச் சேவிப்பர்கள்.
    • பகல் பத்தில் 10ஆம் நாள் வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய தசமி அன்று நம்மாழ்வாரும் எம்பெருமானாரும் சேர்ந்து அற்புதமான ஒரு சேவை – நம்மாழ்வார் அழகிய மணவாளனாக சயன திருக்கோலத்திலும் எம்பெருமானார் ஸ்ரீ ரங்கநாச்சியாராக ஆழ்வாருடைய திருவடித் தாமரைகளிலும் எழுந்தருளியிருப்பர்.

நம்மாழ்வார் – எம்பெருமானார்

    • இராப்பத்து சாற்றுமுறை அன்று அனைத்து திவ்ய தேசங்களிலும் திருவடித் தொழல் அதாவது நம்மாழ்வார் எம்பெருமானின் திருவடித் தாமரைகளில் சென்று சேர்தல். ஆனால் இங்கு மட்டும் திருமுடித் தொழல் அதாவது அர்ச்சகர்கள் எம்பெருமானைக் கைத்தலமாக எழுந்தருளப் பண்ணிக்கொண்டு சென்று ஆழ்வாரின் திருமுடியில் எம்பெருமானின் திருவடியைப் பதிப்பர்கள். கண்கொள்ளாக் காட்சியான இது நம் ஸம்ப்ரதாயத்திற்கு உயிரான பரகத ஸ்வீகாரத்தை நேரே தெளிவாக உணர்த்துகிறது. பரகத ஸ்வீகாரமாவது எம்பெருமான் தான் விரும்பி ஜீவாத்மாவை தன்னுடன் சேர்த்துக் கொள்வது.
    • 22 நாட்கள் கொண்டாட்டம் – கடைசி நாளான்று “வீடு படைத் திருமஞ்சனம்” நடக்கும்.
    • இந்த நாளன்று, பொலிந்து நின்ற பிரான் நம்மாழ்வாரை அனைத்துலகின் உஜ்ஜீவனத்திற்காக லீலா விபூதியிலேயே இருக்குமாறு பணிக்கிறான்.
    • இதன் பின்பு வரும் முதல் திருவிசாகத்தன்று திருப்பல்லாண்டு தொடக்கம் செய்யப்படும்.
  • திருத்துலைவில்லிமங்கலம்
    • நம்மாழ்வார் திருவாய்மொழியில் தேவபிரான் எம்பெருமானே தனக்குத் தன்தை மற்றும் தாய் என்று கூறுகிறார். அவருக்கு தேவபிரானிடம் மிகுன்த ஈடுபாடு. முற்காலங்களில் ஆழ்வார் ஸ்ரீரங்கத்தில் இருந்து திரும்பும்போது துலைவில்லிமங்கலத்தை அடைந்து மாசி விசாகத்தின் வரை இங்கே இருந்துவிட்டு பின்பு ஆழ்வார் திருநகரிக்குத் திரும்புவர் என்று சொல்லப்படுகிறது.
    • இதன் நினைவாக, இன்றளவும் நம்மாழ்வார் மாசி விசாகத்தன்று (மாசி மாதம் 13 நாட்கள் ஆழ்வார் திருநகரியில் கொண்டடப்படும் உத்ஸவத்தின் இறுதியில்) இங்கே எழுந்தருளுகிறார். எம்பெருமானுடன் அன்று முழுதும் கூடி இருந்து திருமஞ்சனம், கோஷ்டி முதலியவை கண்டருளி மாலையில் எம்பெருமானிடம் பிரியா விடை பெற்றுச் செல்கிறார்.
    • இதன் மறுநாள் இங்கே திருப்பல்லாண்டு தொடக்கம் (அது வரை இங்கு அநத்யயன காலமே).
  • திருவாலி/திருநகரி மற்றும் திருநாங்கூர் திவ்ய தேசங்கள்
    • பொதுவாக திருக்கார்த்திகை தீபமும் கலியன் திருநக்ஷத்ரமான கார்திகையில் கார்திகையும் சேர்ந்தே வரும். ஆனால் சில சமயங்களில் கார்த்திகை மாதத்தில் இரு முறை கார்த்திகை நக்ஷத்ரம் இருந்தால் இரண்டாவது கார்த்திகையே திருமங்கை ஆழ்வார் திருநக்ஷத்ரமாகக் கொண்டாடப்படும். மற்றைய திவ்ய தேசங்களில் திருக்கார்த்திகை தீபத்தன்று அநத்யயன காலம் தொடங்கினாலும், இங்கே திருமங்கை ஆழ்வார் திருநக்ஷத்ரம் முடிந்த பிறகே தொடங்கப்படுகிறது. ஆழ்வார் திருநக்ஷத்ரத்துக்கு 4000 திவ்ய ப்ரபந்தம் சேவித்து சிறப்பாகக் கொண்டாடவே இந்த ஏற்பாடு.
  • திருமெய்யம்
    • மற்றைய திவ்ய தேசங்களில் நடக்கும் 21 நாட்கள் கொண்டாட்டத்துக்கு மேலாக, பகல் பத்தின் கடைசி நாள் கலியன் திருவதித் தொழல் உத்ஸவமும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
  • ஸ்ரீபெரும்பூதூர்
    • குரு புஷ்யம் தை மாதம் பூசம் அன்று முடியும்படி 3 நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீபெரும்பூதூரில் எம்பெருமானார் அர்ச்சா திருமேனி ப்ரதிஷ்டை பண்ணப்பட்ட நாளே இது. இது இங்கே முக்கியத்துவம் வாய்ந்தது. அத்யயன உத்ஸவமும் குரு புஷ்யமும் சேர்ந்து வந்தால் அத்யயன உத்ஸவம் முன்னதாகக் கொண்டாடப்படும்.
  • திருச்சேறை, திருமழிசை முதலிய திவ்ய தேசஙளிலும் ப்ரஹ்மோத்ஸவமோ ஆழ்வார் உத்ஸவமோ அத்யயன உத்ஸவ சமயத்தில் வந்தால் அத்யயன உத்ஸவம் முன்னதாகக் கொண்டாடப்படும்.

பொதுவாக கோயில்களில் இயற்பா சாற்றுமுறைக்கு மறுநாள் திருப்பல்லாண்டு சேவித்து வழக்கமான திவ்ய ப்ரபந்த சேவாகாலம் தொடங்கப்படும். பல திவ்ய தேசங்களில் மேலும் பல விசேஷ அநுஷ்டானங்கள் காணப்படுகிறது.
க்ருஹங்களில் அநத்யயன காலத்தில் திவ்ய ப்ரபந்த சேவாகால க்ரமம் திவ்ய தேசத்துக்கேற்ப மாறுபடுகிறது.

  • பல திவ்யதேசங்களில், க்ருஹங்களின் சேவாகாலம் கோயில் க்ரமத்தையே பின்பற்றுகிறது. அதாவது கோயில்களில் அநத்யயன காலம் தொடங்கிய பின் க்ருஹங்களில் திவ்ய ப்ரபந்தம் சேவிக்கப்ப் படுவதில்லை. கோயில்களில் என்று திருப்பல்லாண்டு தொடக்கம் ஆகிறதோ அன்றிலிருந்து க்ருஹங்களிலும் மீண்டும் திவ்ய ப்ரபந்தம் சேவிக்கப் படுகிறது.
  • கூரத்தாழ்வான் திருநக்ஷத்ரமான தை ஹஸ்தத்துக்குப் பிறகே க்ருஹங்களில் திய்வ ப்ரபந்தம் சேவிக்கப் படவேண்டும் என்று சிலர் கருதுகின்றனர். இதன் காரணம் – முற்காலங்களில் ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரும் ஸ்ரீரங்கத்தில் சென்று நம்பெருமாள் மற்றும் ஆழ்வாருடன் இருந்து அத்யயன உத்ஸவத்தைச் சேவித்து வருவர். உத்ஸவம் முடிந்து அவர்கள் தங்கள் க்ருஹங்களுக்குத் திரும்ப பல நாட்கள் ஆகும். இதன் நினைவாக, க்ருஹங்களில் தை ஹஸ்தத்தன்று திவ்ய ப்ரபந்தம் சேவித்தல் தொடக்கம் என்ற ஏற்பாடு.
அவரவர் தங்கள் தங்கள் பெரியோர்களிடம் கேட்டறிந்து தங்கள் திவ்ய தேசம் மற்றும் குடும்ப வழக்கத்தை நடைமுறைப் படுத்துதல் சாலச் சிறந்தது.
அநத்யயன காலத்தில் என்ன கற்றுக் கொள்ள மற்றும் சேவிக்க?
சில உபயோகமான குறிப்புகள்:
  • பொதுவாக கோயில்களில் அநத்யயன காலத்தில், திருப்பாவைக்கு பதில் உபதேச ரத்தின மாலையும் கோயில் திருவாய்மொழி மாற்றும் இராமானுச நூற்றந்தாதிக்கு பதில் திருவாய்மொழி நூற்றந்தாதியும் சேவிக்கபடும்.
  • மார்கழி மாதத்தில், திருப்பள்ளியெழுச்சி மற்றும் திருப்பாவை சேவித்தல் தொடரும்.
  • கோயில்களில், அத்யயன உத்ஸவத்தின் போது, 4000 பாசுரங்களும் ஒரு முறை பூர்த்தியாகச் சேவிக்கப்படும்.
  • க்ருஹங்களில் அநத்யயன காலத்தில் திருவாராதனத்தின்போது, 4000 திவ்ய ப்ரபந்த பாசுரங்கள் சேவிப்பதில்லை (மார்கழி மாதத்தில் கோயில்களில் போல திருப்பாவை மற்றும் திருப்பள்ளியெழுச்சி சேவிக்கலாம்).   
    • கோயில் ஆழ்வார் திருக்காப்பு நீக்கும்போது (திறக்கும் போது), ஜிதந்தே ஸ்தோத்ரம் (முதல் 2 ச்லோகங்கள்), “கௌஸல்யா ஸுப்ரஜா ராம” ச்லோகம், “கூர்மாதீந்” ச்லோகம் (இவை எல்லா காலங்களிலும் சேவிக்கப்படுகிறது) ஆகியவை சேவித்துக் கொண்டு திருக்காப்பு நீக்கவும். கதவைத் திறக்கும்போது ஆழ்வார்கள் பாசுரங்களை வாயால் சொல்லுவதில்லையே ஆயினும் மனதால் நினைக்கலாம் த்யானிக்கலாம்.
    • திருமஞ்சன காலங்களில், பொதுவாக ஸூக்தங்களை சேவித்தபின் “வெண்ணெய் அளைந்த குணுங்கும்” பதிகமும் சில பாசுரங்களும் சேவிப்பது வழக்கம். ஆனால் அநத்யயன காலத்தில் ஸூக்தங்களுடன் நிறுத்திக்கொள்ளவும்.
    • பொதுவாக மந்த்ர புஷ்பத்தின்போது, “சென்றால் குடையாம்” பாசுரம் சேவிக்கப்படும். அநத்யயன காலத்தில், “எம்பெருமானார் தரிசனம் என்றே” பாசுரம் சேவிக்கப்படும்.
    • பொதுவாக சாற்றுமுறையில், “சிற்றம் சிறுகாலே“, “வங்கக் கடல்” மற்றும் “பல்லாண்டு பல்லாண்டு” பாசுரங்கள் சேவிக்கப்படும். அநத்யயன காலத்தில், உபதேச ரத்தின மாலை மற்றும் திருவாய்மொழி நூற்றந்தாதி சாற்று பாசுரங்களைச் சேவிக்கவும். தொடர்ந்து “ஸர்வ தேச ஸதா காலே…” என்று தொடங்கி வாழி திருநாமங்கள் வரை சேவிக்கவும்.    
  • பூர்வாசார்ய ஸ்தோத்ர க்ரந்தங்களையும் அவர்களின் தமிழ் ப்ரபந்தங்களான ஞான ஸாரம், ப்ரமேய ஸாரம், ஸப்த காதை, உபதேச ரத்தின மாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி முதலியவைகளையும் கற்கவும் சேவிக்கவும் நல்ல சமயம். மேலும் பூர்வாசார்யர்களின் தனியன்கள் மற்றும் வாழி திருநாமங்களை கற்கவும் சேவிக்கவும் நல்ல சமயம்.
  • ரஹஸ்ய க்ரந்தங்களை கற்றுத் தேறவும் இது நல்ல சமயம்.
அநத்யயன காலத்தில் அருளிச் செயல் அந்வயம் இல்லாவிடினும் ஆனந்தப்படக்கூடிய (பகவத்) விஷயங்கள் பல உள்ளன. சிலவற்றை இங்கே காண்போம்:
  • அனைவராலும் எதிர்பார்க்கப்படும் அதி அற்புதமான அத்யயன உத்ஸவம் – இதுவே ஸ்ரீவைஷ்ணவர்களுக்குத் தலையான உத்ஸவம் – இருபதுக்கும் மேற்பட்ட அற்புதமான பகவத் அனுபவம் நிறைந்த நாட்கள்
  • அனைவராலும் எதிர்பார்க்கப்படும் அழகான மார்கழி மாதம் மற்றும் ஆண்டாள் நாச்சியாரின் அருளால் கிடைக்கும் திருப்பாவை அனுபவம்
  • சாஸ்த்ரத்தின் ஸாரார்த்தங்களை மிக எளிமையாக வெளியிடும் பூர்வாசார்யர்களின் ஸம்ஸ்க்ருத மற்றும் தமிழ் ஸ்ரீ ஸூக்திகளை கற்றுத் தேற ஒரு அரிய வாய்ப்பு.
இவ்வாறு பல ஏற்றங்களை உடைய அநத்யயன காலம் மற்றும் அத்யயன உத்ஸவத்தின் பெருமைகளை இந்தக் கட்டுரையில் அனுபவித்தோம்.
நம்மாழ்வாரின் பெருமைகளும் திருவாய்மொழியின் பெருமைகளும் உச்சத்தை எட்டியது மணவாள மாமுனிகளின் அவதரித்த பின்னே. திவ்ய ப்ரபந்தங்களில் உள்ள ஸாரமான அர்த்தங்களைப் பிறர்க்கு எடுத்து உரைத்து அனைவரையும் உஜ்ஜீவிப்பதிலேயே தன்னுடைய பொழுதைப் போக்கினார் மாமுனிகள். அது மட்டுமல்லாமல் ஆழ்வார் ஆசார்யர்களின் உயர்ந்த ஸ்ரீ ஸூக்திகளின் படி நடந்து ஒரு ஸ்ரீவைஷ்ணவன் எப்படி இருக்க வேண்டும் என்று வாழ்ந்தும் காட்டியுள்ளார். இதனாலேயே நம்பெருமாள் தானே மாமுனிகளின் உயர்ந்த நிலையை அங்கீகரித்து, திருவாய்மொழிக்கு உண்டான நம்பிள்ளை ஈடு மற்றும் இதர வ்யாக்யானங்களையும் கொண்டு பகவத் விஷய காலக்ஷேபம் தன்னுடைய ஸந்நிதியின் முன்னே ஒரு வருட காலம் செய்யும்படி மாமுனிகளை நியமித்தார். காலக்ஷேப சாற்றுமுறை தினமான சிறந்த ஆனித் திருமூலத்தன்று, ஸ்ரீ ரங்கநாதன் ஒரு பாலகனாகத் தோன்றி மிக ஆச்சர்யமான “ஸ்ரீ சைலேச தயாபாத்ரம்” தனியனைச் சமர்ப்பித்து மாமுனிகளைத் தன் ஆசார்யனாக ஏற்றுக் கொண்டான்.


நாமும் விரைவில் தொடங்க இருக்கும் இந்த உயர்ந்த கொண்டாட்டங்களுக்கு நம்மைத் தயார் செய்து கொள்ளுவோம்.

Monday 16 December 2013

 முழு இந்தியாவும் இன்று ராம நாமத்தை உச்சரித்துக்கொண்டு இருக்கிறது.ராமர் பாலம் சர்ச்சையினால் வந்த நன்மை இது.ராமனை வெறுக்கிறவர்கள் கூட ராமர்பாலம் என்று கூறும் போது தம்மையும் அறியாமல் ராமன் பெயரை சொல்லுகிறார்கள்.சகஸ்ர நாமங்களுக்கும் சமமான இந்த ராமநாமம் இப்படி எல்லோராலும் அநுஸந்திக்கப்படுவதற்கு சேது சமுத்திர சர்ச்சை தான் காரணம் என்றால் இந்த சர்ச்சை சில காலம் நீடிக்கட்டுமே என்று நினைக்கத் தூண்டுகிறது.
     இது இருக்கட்டும்.குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதே சிலருக்கு வேலையாகிப் போயிவிட்டது.பாலத்தை இடிப்பதா?வேண்டாமா? என்கிற சந்தடியின் நடுவே இதுதான் சமயம் என்று ஒருவர் ராமர் கடவுளே இல்லை என்ற அறிக்கை விட்டிருக்கிறார்.அந்த கூற்றுக்கு ஆதரமாக அந்த மேதை ராமாயண சுலோகத்தை மேற்கோளும் காட்டி இருக்கிறார்.(30.09.07 ஜீனியர் விகடன் பக்கம் 38)
         “ஆத்மாநம் மானுஷம் மன்யே ராமம் தசரதாத்மஜம்….”என்கிற பகுதி,தன்னைப் பார்த்து இறைவன் என்று புகழ்ந்த தேவர்களிடம் ராமன் சொன்னது.நான் இறைவன் இல்லை;என்னை தசரதனுடைய மகனாக,ராமனாக,ஒரு சாதாரண மனிதனாகத் தான் இந்த அவதாரத்தில் நினைக்கிறேன் என்று ராமன் மறுத்துப் பேசுகிறான்.தேவர்களுடைய கூற்று ஒரு புறம்,ராமனுடைய கூற்று ஒரு புறம்,என்ற இரு கூற்றுகளையும் தனித்தனியே சீர்தூக்கிப் பார்த்துவிட்டு   ஒரு மேதை ராமன் சொன்னதே சரி,தேவர்கள் சொன்னது தவறு என் கிறார்.அதாவது ஒருவனை, பகவானுடைய அவதாரமா? அல்லது சாதாரண மனிதனா? என்று கூட பேதம் பார்க்க முடியாத மடையர்களாக தேவர்கள் இருக்கிறார்கள் என்கிறார்.அப்படியானால் இந்த மடையர்களைப் படைக்கப்பட்ட உலகங்களுக்கு அதிகாரப்புருஷர்களாக்வும் முப்பத்து முக்கோடி தேவர்களாகவும்,இந்து மதம் ஏன் சிலாகித்துச் சொல்லவேண்டும்?இந்த கேள்விக்கு பதில் தேவை.கோடான கோடி மனிதர்களை ஆட்டி வைக்கும் இந்த தேவர்களுக்கு மனிதன் யார் பகவான் யார் என்று கூட கண்டுபிடிக்கத் தெரியாதா?
         நம் நாட்டு ஜனாதிகளும்,முதன் மந்திரிகளும் நீலகிரி,முதுமலை போன்ற மலைப்பிரதேசங்களில் வாழும் பழங்குடி மக்களைச் சந்திக்கும் போது அவர்களோடு சேர்ந்து ஆடிப்பாடுவது உண்டு.இதைப் பல புகைப்படங்களிலும்,செய்தி,திரைப்படச் சுருள்களிலும் பார்த்திருக்கிறோம்.அந்த ஆதிவாசிகளோடு ஆடும் போது நாங்களும் உங்களில் ஒருவர் தான்.எங்களை உங்கள் இனத்தவராகக் கருதுகிறோம்”,என்று சொல்வதுண்டு.’நான் ஒரு ஆதிவாசி’என்பதற்கும் “நான் என்னை ஒரு ஆதிவாசியாகக் கருதுகிறேன் என்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு.
     இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்லும்பொழுது கருதுகிறேன் என்ற சொல்லை பயன்படுத்துவதுண்டு,உதாரணமாக ‘கல் விக்ரஹத்தைக் கடவுளாகக் கருதுகிறோம்’,’இந்தக் கதர் ஆடையைப் பொன்னாடையாகக் கருதுகிறோம்’,’பொன் வைக்க வேண்டிய  இடத்தில் இந்தப் பூவை வைத்து இதைப் பொன்னாகக் கருதி அளிக்கிறோம்’ என்று வரும் வாக்கியங்களில் இந்தப் பொருள் புலனாகும்.ராமனும் அப்படித்தான் சொன்னான்.’மந்யே’ என்ற ஸம்ஸ்கிருதச் சொல்லுக்கு இங்கே அதுதான் பொருள்.இந்த அடிப்படை இலக்கணம் கூட அந்த மேதைக்குத் தெரியவில்லையா?
   ஸ்ரீவைகுண்டத்தில் நித்யசூரிகளால் போற்றப்படும் பகவானாக வாழ்வதைவிட பூமியில் தன் அன்பர்கள் மத்தியில் மனிதரோடு மனிதனாக வாழ்வதை எம்பெருமான் மிகவும் ரஸிக்கிறான்.விரும்புகிறான்.கிருஷ்ணாவதாரத்தில் கண்ணன் கோவர்த்தன கிரியை தூக்கிப் பிடிப்பதைப் பார்த்து யாதவர்கள் “நீ தேவனோ பூதமோ” என்று அஞ்சிப் புலம்பிய போது, “இல்லை இல்லை நான் யசோதையின் மகன்,நந்தகோபன் குமரன்.உங்கள் உறவினன், சாதாரண யாதவன்”, என்று சொல்லிக் கொண்டான்.தன் அன்பரால் வணப்படும் இறைநிலை அந்தஸ்தை விட,அவர்களுக்கு நண்பனாய்,தொண்டனாய் இருப்பதையே பகவான் விரும்புகிறான்.இது அவனோடு என்றும் உறைகிற இறைமைக் குணம்.செளலப்யம் என்றும் செளசீல்யம் என்றும் இதை புகழ்ந்து சொல்வார்கள்.இப்படி அவன் பேசுகிறான் என்பதற்காக அவன் கடவுள் இல்லை என்று ஆகிவிடுமா?அவனை யாதவன் என்று நாம் நினைக்கலாமா?இப்படியெல்லாம் வக்கிரமாகப் பொருள் கொண்டால் இந்து மதம் சின்னாபின்னமாகிக் கேலிக் கூத்தாகிவிடுமே,இதையெல்லாம் அந்த மேதை உணர்கிறாரா?அல்லது உணராதது போல் நடிக்கிறார?
        ராமனை மட்டமாகப் பேசுவது மல்லாந்து படுத்துக்கொண்டு வான்நோக்கி உமிழ்வதற்குச் சமம்.எச்சில் நம் மார்பின் மீது தான் விழும்.இந்தியாவின் கௌரவம் ராமனால் நமக்கு ஏற்பட்ட கௌரவம்.ராமாயணம் என்ற காவியம் இந்தியர்களுக்கு உலக அரங்கில் எவ்வுளவு பெரிய மதிப்பை சம்பாதித்து கொடுத்திருக்கிறது எனபதை இன்று ராமதூஷணம் செய்கிறவர்கள் உணர்வதில்லை.ஹரே ராமா,ஹரே கிருஷ்ணா என்று வெள்ளையர்கள் ஏன் சங்கீர்த்தனம் செய்யத் தொடங்கினார்கள்?ராமனுடைய பண்புகளைப் பற்றி அவர்கள் படித்த போது அவர்களுடைய நாட்டு மஹாங்களிடமும் தங்கள் தெய்னங்களிடமும் இல்லாத குணங்களை ராமனிடமும்,கண்ணனிடமும், பார்த்ததால் தானே அவர்கள் அப்படி மாறினார்கள்!
மேலும் பலவற்றை அடுத்த பாகத்தில் பார்ப்போம்! ஜெய்ஸ்ரீராம்!!!!!
முழு இந்தியாவும் இன்று ராம நாமத்தை உச்சரித்துக்கொண்டு இருக்கிறது.
ராமர் பாலம் சர்ச்சையினால் வந்த நன்மை இது.ராமனை வெறுக்கிறவர்கள் கூட ராமர்பாலம் என்று கூறும் போது தம்மையும் அறியாமல் ராமன் பெயரை சொல்லுகிறார்கள்.சகஸ்ர நாமங்களுக்கும் சமமான இந்த ராமநாமம் இப்படி எல்லோராலும் அநுஸந்திக்கப்படுவதற்கு சேது சமுத்திர சர்ச்சை தான் காரணம் என்றால் இந்த சர்ச்சை சில காலம் நீடிக்கட்டுமே என்று நினைக்கத் தூண்டுகிறது.
இது இருக்கட்டும்.குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதே சிலருக்கு வேலையாகிப் போயிவிட்டது.பாலத்தை இடிப்பதா?வேண்டாமா? என்கிற சந்தடியின் நடுவே இதுதான் சமயம் என்று ஒருவர் ராமர் கடவுளே இல்லை என்ற அறிக்கை விட்டிருக்கிறார்.அந்த கூற்றுக்கு ஆதரமாக அந்த மேதை ராமாயண சுலோகத்தை மேற்கோளும் காட்டி இருக்கிறார்.(30.09.07 ஜீனியர் விகடன் பக்கம் 38)
“ஆத்மாநம் மானுஷம் மன்யே ராமம் தசரதாத்மஜம்….”என்கிற பகுதி,தன்னைப் பார்த்து இறைவன் என்று புகழ்ந்த தேவர்களிடம் ராமன் சொன்னது.நான் இறைவன் இல்லை;என்னை தசரதனுடைய மகனாக,ராமனாக,ஒரு சாதாரண மனிதனாகத் தான் இந்த அவதாரத்தில் நினைக்கிறேன் என்று ராமன் மறுத்துப் பேசுகிறான்.தேவர்களுடைய கூற்று ஒரு புறம்,ராமனுடைய கூற்று ஒரு புறம்,என்ற இரு கூற்றுகளையும் தனித்தனியே சீர்தூக்கிப் பார்த்துவிட்டு ஒரு மேதை ராமன் சொன்னதே சரி,தேவர்கள் சொன்னது தவறு என் கிறார்.அதாவது ஒருவனை, பகவானுடைய அவதாரமா? அல்லது சாதாரண மனிதனா? என்று கூட பேதம் பார்க்க முடியாத மடையர்களாக தேவர்கள் இருக்கிறார்கள் என்கிறார்.அப்படியானால் இந்த மடையர்களைப் படைக்கப்பட்ட உலகங்களுக்கு அதிகாரப்புருஷர்களாக்வும் முப்பத்து முக்கோடி தேவர்களாகவும்,இந்து மதம் ஏன் சிலாகித்துச் சொல்லவேண்டும்?இந்த கேள்விக்கு பதில் தேவை.கோடான கோடி மனிதர்களை ஆட்டி வைக்கும் இந்த தேவர்களுக்கு மனிதன் யார் பகவான் யார் என்று கூட கண்டுபிடிக்கத் தெரியாதா?
நம் நாட்டு ஜனாதிகளும்,முதன் மந்திரிகளும் நீலகிரி,முதுமலை போன்ற மலைப்பிரதேசங்களில் வாழும் பழங்குடி மக்களைச் சந்திக்கும் போது அவர்களோடு சேர்ந்து ஆடிப்பாடுவது உண்டு.இதைப் பல புகைப்படங்களிலும்,செய்தி,திரைப்படச் சுருள்களிலும் பார்த்திருக்கிறோம்.அந்த ஆதிவாசிகளோடு ஆடும் போது நாங்களும் உங்களில் ஒருவர் தான்.எங்களை உங்கள் இனத்தவராகக் கருதுகிறோம்”,என்று சொல்வதுண்டு.’நான் ஒரு ஆதிவாசி’என்பதற்கும் “நான் என்னை ஒரு ஆதிவாசியாகக் கருதுகிறேன் என்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு.
இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்லும்பொழுது கருதுகிறேன் என்ற சொல்லை பயன்படுத்துவதுண்டு,உதாரணமாக ‘கல் விக்ரஹத்தைக் கடவுளாகக் கருதுகிறோம்’,’இந்தக் கதர் ஆடையைப் பொன்னாடையாகக் கருதுகிறோம்’,’பொன் வைக்க வேண்டிய இடத்தில் இந்தப் பூவை வைத்து இதைப் பொன்னாகக் கருதி அளிக்கிறோம்’ என்று வரும் வாக்கியங்களில் இந்தப் பொருள் புலனாகும்.ராமனும் அப்படித்தான் சொன்னான்.’மந்யே’ என்ற ஸம்ஸ்கிருதச் சொல்லுக்கு இங்கே அதுதான் பொருள்.இந்த அடிப்படை இலக்கணம் கூட அந்த மேதைக்குத் தெரியவில்லையா?
ஸ்ரீவைகுண்டத்தில் நித்யசூரிகளால் போற்றப்படும் பகவானாக வாழ்வதைவிட பூமியில் தன் அன்பர்கள் மத்தியில் மனிதரோடு மனிதனாக வாழ்வதை எம்பெருமான் மிகவும் ரஸிக்கிறான்.விரும்புகிறான்.கிருஷ்ணாவதாரத்தில் கண்ணன் கோவர்த்தன கிரியை தூக்கிப் பிடிப்பதைப் பார்த்து யாதவர்கள் “நீ தேவனோ பூதமோ” என்று அஞ்சிப் புலம்பிய போது, “இல்லை இல்லை நான் யசோதையின் மகன்,நந்தகோபன் குமரன்.உங்கள் உறவினன், சாதாரண யாதவன்”, என்று சொல்லிக் கொண்டான்.தன் அன்பரால் வணப்படும் இறைநிலை அந்தஸ்தை விட,அவர்களுக்கு நண்பனாய்,தொண்டனாய் இருப்பதையே பகவான் விரும்புகிறான்.இது அவனோடு என்றும் உறைகிற இறைமைக் குணம்.செளலப்யம் என்றும் செளசீல்யம் என்றும் இதை புகழ்ந்து சொல்வார்கள்.இப்படி அவன் பேசுகிறான் என்பதற்காக அவன் கடவுள் இல்லை என்று ஆகிவிடுமா?அவனை யாதவன் என்று நாம் நினைக்கலாமா?இப்படியெல்லாம் வக்கிரமாகப் பொருள் கொண்டால் இந்து மதம் சின்னாபின்னமாகிக் கேலிக் கூத்தாகிவிடுமே,இதையெல்லாம் அந்த மேதை உணர்கிறாரா?அல்லது உணராதது போல் நடிக்கிறார?
ராமனை மட்டமாகப் பேசுவது மல்லாந்து படுத்துக்கொண்டு வான்நோக்கி உமிழ்வதற்குச் சமம்.எச்சில் நம் மார்பின் மீது தான் விழும்.இந்தியாவின் கௌரவம் ராமனால் நமக்கு ஏற்பட்ட கௌரவம்.ராமாயணம் என்ற காவியம் இந்தியர்களுக்கு உலக அரங்கில் எவ்வுளவு பெரிய மதிப்பை சம்பாதித்து கொடுத்திருக்கிறது எனபதை இன்று ராமதூஷணம் செய்கிறவர்கள் உணர்வதில்லை.ஹரே ராமா,ஹரே கிருஷ்ணா என்று வெள்ளையர்கள் ஏன் சங்கீர்த்தனம் செய்யத் தொடங்கினார்கள்?ராமனுடைய பண்புகளைப் பற்றி அவர்கள் படித்த போது அவர்களுடைய நாட்டு மஹாங்களிடமும் தங்கள் தெய்னங்களிடமும் இல்லாத குணங்களை ராமனிடமும்,கண்ணனிடமும், பார்த்ததால் தானே அவர்கள் அப்படி மாறினார்கள்!
மேலும் பலவற்றை அடுத்த பாகத்தில் பார்ப்போம்! ஜெய்ஸ்ரீராம்!!!!!

மார்கழி மாத பூசைகள் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன

மார்கழி மாதம்

                 மார்கழி மாதத்தை முதல் மாதம் என்று வைணவர்கள் சொல்வர். கண்ணனுடைய மற்றொரு பெயர் கேசவன். திருமாலின் பன்னிரண்டு பிறப்புப் பெயர்களில் முதலாவது பெயர் கேசவன். மார்கழி மாதத்து அதிபதியின் பெயரும் கேசவன். எனவே இது முதன்மையான மாதம் என்பர். திருமாலே தனக்கு கணவராக அமைய வேண்டுதல் வைத்து, மார்கழி மாதத்தில் ஆண்டாள் மேற்கொண்ட விரதமே பாவை நோன்பு. இதற்காக அவள், அதிகாலையில் துயிலெழுந்து தோழியரையும் அழைத்துக் கொண்டு நீராடச் சென்றாள். தான் பிறந்த ஸ்ரீவில்லிப்புத்தூரை ஆயர்பாடியாகவும், தன்னை கோபிகையாகவும் பாவனை செய்து, கண்ணனின் இல்லத்திற்குச் சென்று அவனை வணங்கி வந்தாள். மாதத்தின் ஆரம்பத்தில் நெய், பால் முதலிய உணவு வகைகளைத் தவிர்க்கும் வகையில் இந்த விரதம் அமைந்தது. இந்த விரதத்தை இப்போதும் கன்னிப்பெண்கள் அனுஷ்டிக்கலாம். காலை 4.30 மணிக்கே நீராடி, திருப்பாவை பாடலை மூன்று முறை படிக்க வேண்டும். உதாரணமாக, மார்கழி முதல்தேதியன்று மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் பாடலைத் துவங்க வேண்டும். மார்கழியில் 29 நாட்களே இருப்பதால், கடைசி நாளில் கடைசி இரண்டு பாடல்களை மூன்று முறை பாட வேண்டும். இத்துடன் தினமும்வாரணமாயிரம் பகுதியில் இருந்து வாரணமாயிரம் சூழ வலம் வந்து, மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத உள்ளிட்ட பிடித்தமான பாடல்களைப் பாட வேண்டும். விரத நாட்களில் நெய், பால் சேர்த்த உணவு வகைகளை உண்ணக்கூடாது. மற்ற எளிய வகை உணவுகளைச் சாப்பிடலாம். ஆண்டாள், பெருமாள் படம் வைத்து உதிரிப்பூ தூவி காலையும், மாலையும் வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் ஆண்டாள் மனம் மகிழ்ந்து, சிறந்த கணவனைத் தர அருள் செய்வாள். திருமணத்தடைகளும் நீங்கும்.

Sunday 15 December 2013

திருப்பாவை பாசுரம்

 திருப்பாவை பாசுரம்

1 மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராட போதுவீர் போதுமினோ நேரிழையீர் சீர் மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள் கூர் வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்து ஏல் ஓர் எம்பாவாய். 

திருப்பாவை பாசுரம் 

2 வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ, பாற்கடலுள் பையத் துயின்ற பரமனடி பாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம் செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம் ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யுமாறு எண்ணி உகந்து ஏல் ஓர் எம்பாவாய்.

திருப்பாவை பாசுரம்

 3 ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து ஓங்கு பெருஞ் செந்நொலூடு கயல் உகள பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்து ஏல் ஓர் எம்பாவாய். 

திருப்பாவை பாசுரம் 

4 ஆழிமழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல் ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேரி ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப் பாழியந் தோளுடைப் பத்மநாபன் கையில் ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்று அதிர்ந்து தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல் வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய். 

திருப்பாவை பாசுரம் 

5 மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத் தூய பெருநீர் யமுனைத் துறைவனை ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத் தாயைக் குடல் விளக்கஞ் செய்த தாமோதரனை தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பு ஏல் ஓர் எம்பாவாய்.

 திருப்பாவை பாசுரம் 

6 புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ? பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு கள்ளச் சகடம் கலக் கழியக் காலோச்சி வெள்ளத் தரவில் துயில் அமர்ந்த வித்தினை உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்து ஏல் ஓர் எம்பாவாய். 

திருப்பாவை பாசுரம் 

7 கீசு கீசென்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ நாயகப் பெண் பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ தேசமுடையாய்! திற ஏல் ஓர் எம்பாவாய். திருப்பாவை பாசுரம் 8 கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக் கூவுவான் வந்து நின்றோம் கோதுகலமுடைய பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் ஆவாவென்று ஆராய்ந்து அருள் ஏல் ஓர் எம்பாவாய். 

திருப்பாவை பாசுரம்

 9 தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய தூபம் கமழ துயில் அணை மேல் கண் வளரும் மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்! மாமீர்! அவளை எழுப்பீரோ? உம் மகள் தான் ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ? மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று நாமம் பலவும் நவின்று ஏல் ஓர் எம்பாவாய்.

 திருப்பாவை பாசுரம் 

10 நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்! மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டு ஒரு நாள் கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகருணனும் தோற்று முனக்கே பெருந்துயில்தான் தந்தானோ? ஆற்ற அனந்தலுடையாய் அருங்கலமே தேற்றமாய் வந்து திற ஏல் ஓர் எம்பாவாய்! 

திருப்பாவை பாசுரம் 

11 கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து செற்றார் திறல் அழியச் சென்று செருச் செய்யும் குற்ற மொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய் சுற்றத்துத் தோழிமார் எல்லோரும் வந்து நின் முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ எற்றுக்கு உறங்கும் பொருள் ஏல் ஓர் எம்பாவாய்! 

திருப்பாவை பாசுரம் 

12 கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிறங்கி நினைத்து முலை வழியே நின்று பால் சோர நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய் பனித்தலை வீழ நின் வாசல் கடை பற்றி சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய் இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம் அனைத்து இல்லத்தாரும் அறிந்து ஏல் ஓர் எம்பாவாய் 

திருப்பாவை பாசுரம் 

13 புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய் பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார் வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று புள்ளும் சிலம்பின காண்! போது அரிக்கண்ணினாய் குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே பள்ளிக் கிடத்தியோ பாவாய்! நீ நன்னாளால் கள்ளம் தவிர்த்து கலந்து ஏல் ஓர் எம்பாவாய்

 திருப்பாவை பாசுரம் 

14 உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழு நீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண் செங்கல் பொடிக் கூறை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கொயில் சங்டகிடுவான் போகின்றார் எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும் நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய் சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடு ஏல் ஓர் எம்பாவாய் 

திருப்பாவை பாசுரம் 15 

எல்லே! இளங்கிளியே இன்னம் உறங்குதியோ சில்லென்று அழையேன் மின் நங்கைமீர் போதருகின்றேன் வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும் வல்லீர்கள் நீங்களே நான் தான் ஆயிடுக ஒல்லை நீ போதாய் உனக்கு என்ன வேறு உடையை எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக் கொள் வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க வல்லானை மாயானை பாடு ஏல் ஓர் எம்பாவாய்