Thursday, 28 March 2019

ஐந்து குழி மூன்று வாசல்

ஸ்ரீரங்கம் கோவில் தாயார்சந்நதிக்கு வெளியே இருக்கும் ஐந்து குழி மூன்றுவாசல் பற்றிய விளக்கம்
பலர் இந்த இடத்தில் தாயார் தன் ஐந்து விரல்களை வைத்து பெருமாள் தாயார் சன்னதி நோக்கி எழுந்தருள்வதை ஆவலுடன் பார்கிறாள் என கூறுவது வழக்கம்.

ஆனால் இந்த இடத்தின் தாத்பர்யம் வேறு:

1. ஸ்ரீரங்கம் தாயார் படி தாண்டாப் பத்தினி. எனவே வெளியே வந்துபார்த்திருக்கச் சாத்தியமில்லை.

2. பெருமாள் இவ்வழியில் தாயார் சன்னதிக்கு வருவது வழக்கம் இல்லை. ஒருநாள் மட்டுமே இந்த வழியாக எழுந்தருள்வார். மற்ற நேரங்களில் ஆழ்வான் திருச்சுற்று (5ஆவது ப்ராகாரம்) வழியாகத்தான் எழுந்தருள்வார்.

இந்த ஐந்து குழி அர்த்தபஞ்சக ஞானத்தைக் குறிப்பதாகும். மூன்று வாசல்
தத்வத்ரயத்தைக் குறிப்பதாகும்.
தத்வத்ரயம் என்பது சித், அசித், ஈஸ்வர தத்துவம். அர்த்தபஞ்சகம் என்பது

(1) அடையப்படும் பிரம்மம்
(2) அடையும் ஜீவன்
(3) அடையும் வழி
(4)அடைவதால் ஏற்படும் பயன்
(5) அடைவதற்கு உள்ள தடைகள் ஆகியவற்றைக் குறிக்கும்.

இந்த ஐந்து குழிகளில் ஐந்துவிரல்களை வைத்துத் தெற்குப் பக்கம் பார்த்தால் பரமபதவாசல் தெரியும்.
ஒரு ஜீவாத்மா, பரமாத்மாவை இந்தத் தத்துவங்களைக் கொண்டு அடைந்தால் அந்த
ஜீவாத்மாவுக்குப் பரமபதம் நிச்சயம் என்பதுதான் இதன்பொருள்......

ஓம் நமோ நாராயணா

Saturday, 23 March 2019

தெரியபடுத்துங்கள்

🌸🙏🌸🙏🌸🙏🌸🙏🌸
*.தினமும் காலையில் வாசலில்  கோலம் போட்டு வாசபடியின் வலது பக்கம் விளக்கேற்றி வையுங்கள் வீட்டிற்கு நல்லது.(5 to 6) மணிக்குள். மாலையிலும் மிகவும் நல்லது.*

*தனி வீடு என்றால் காலையில் எழுந்தவுடன் முதலில் பின் புறம் கதவை திறந்து விட்டு பின் வாசல் கதவை திறக்க வேண்டும்.*

*வீட்டில் காலை வேளையில் நல்ல கடவுள் தோத்திர பாடல் ஒலி நாடவை போட்டு கேளுங்கு அது வீட்டிற்கு நல்ல சக்தியை கொண்டு வரும்.*

*வெள்ளி கிழமைகளில் கல் உப்பு வாங்க வேண்டும்.இது வீட்டில் லஷ்மி காடாக்ஷம் பெருக.*
*மற்றும் வெள்ளி கிழமைகளில் கீரை சமைத்தால் நல்லது.*

*குழந்தைகளுக்கு சின்ன ஸ்லோகங்களை  சொல்லி கொடுங்கள்.*
*மற்றும் குழந்தைகள் காலை குளித்தவுடன் பூஜை அறையில் நிற்க வைத்து கடவுளை வணங்க சொல்லி கொடுங்கள்.*

*குழந்தைகளுக்கு உங்கள் வழக்க படி நெற்றியில் திருமண் ஶ்ரீசூரணம்,விபூதி,குங்குமம் இட்டு கொள்ள பழக்க படுத்துங்கள்.*

*.வளர்ந்த குழந்தைகளாக இருந்தால் வீட்டிற்கு உறவினர் யார் வந்தாலும் அவர்களை வரவேற்று,தண்ணீர் கொடுக்க சொல்லி கொடுங்கள்.*

*பள்ளியில் இருந்து வந்ததும் கை,கால்கள் சுத்தம் செய்து கொள்ள பழக்குங்கள்.*

*வீட்டில் பெரிய பிள்ளைகள்,பெரிய பெண் குழந்தை படித்து கொண்டிருந்தால் படிப்பில் நல்ல ஞாபக சக்தியும்,நல்ல மதிப்பெண் பெறவும் வீட்டில் ஹயக்ரீவர்  படம் வைத்து  வியாழக்கிழமைகளில் ஏலக்காய் மாலை சாற்றி,நெய் தீபம் ஏற்றி வழி பட நல்ல பலன் கிடைக்கும்.இது எங்கள் அனுபவம். ஹயக்ரீவர் ஸ்லோகம் பிள்ளைகளை தினமும் ஒன்பது முறை சொல்லி வழி பட  சொல்லுங்கள்.*

 *ஏலக்காய் மாலையை   ஹயக்ரீவர் சன்னதி கோவிலில் இருந்தால் சாற்றலாம்.சன்னதி இல்லாதவர்கள் ஹயக்ரீவர் படம் வாங்கி வீட்டில் வைத்து மேலே குறிப்பிட்ட படி ஏலக்காய் மாலை சாற்றி வழி பட வேண்டும்.7,9,11,13 வாரங்கள் செய்யலாம்.வாரம் அந்த  ஏலாக்காய் மாலையை கோவில் பெருமாள் தீர்த்ததில் சேர்க்க கொடுத்து விடலாம்.*

*வாசலில் பசு வந்தால் அரிசி வெல்லம் கொடுத்தால் பித்ருகளுக்கு நல்லது.*

*தினமும் காலையிலும் ,மாலையிலும் விஷ்ணுசகஸ்ரநாமம்,லலிதா சகஸ்ரநாமம் சொல்ல தெரிந்தவர்கள் சொல்லுங்கள் தெரியாதவர் ஒலி நாடவை ஓட விட்டு கேளுங்கள் மிகவும் நல்லது.*

*காலையில் வீடு பெருக்கும் போது வீட்டின் உள்ளிருந்து வாசல் நோக்கி பெருக்க  வேண்டும். மாலையில் நுழை வாசலில் இருந்து  வீட்டில் உள் நோக்கி  பெருக்க வேண்டும்.மிகவும் நல்லது.*

*இரவு நேரங்களில் கடையில் உப்பு வாங்க கூடாது.*

*யாருக்காவது  உரை மோர் கொடுக்க வேண்டும் என்றால் இரவில் கொடுக்க கூடாது.அவர்களை அவர்கள் வீட்டு பாலை கொண்டு வர சொல்லிடா உரை ஊற்ற வேண்டும்.*

*வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு குங்குமம் கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.அவ்வாறு செய்வது மிகவும் நல்லது.*

 *பெண்கள்,பெண் குழந்தைகள் செவ்வாய்,வெள்ளி கிழமைகளில் எண்ணை தேய்த்து குளிக்க வேண்டும்.*

*ஆண்கள்.ஆண் குழந்தைகள் புதன்,சனி கிழமைகளில் எண்ணை  தேய்த்து குளிக்க வேண்டும்.*

*மாதம் உங்களுக்கு சம்பளம் வந்ததும் உங்கள் குலதெய்வத்திற்கு உங்களால் முடிந்த பணத்தை உண்டியல் வைத்து போட்டு வாருங்கள்.அது மிகவும் நல்லது.பின்னர் அந்த பணத்தை குலதெய்வ கோவில் உண்டியலில் சேர்த்து விடுங்கள்.இது உங்கள் குடும்பத்திற்கு மிகவும் நல்லது.*

*தினமும் வாசலில் நாயிருந்தால் பிஸ்கட் வாங்கி போடுங்கள் நல்லது.*

*வீட்டை விட்டு ஏதாவது நல்ல விஷயங்களுக்கு கிளம்பும் போது வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றி செல்லுங்கள் நல்லது.*

*தினம் சமையல் முடிந்ததும் கடவுளுக்கு படைத்து விட்டு காகாவிற்கு சாதம் வையுங்கள் பித்ருகளுக்கு நல்லது.*

*தினமும் இரவில் மறுநாள் என்ன சமையைல் செய்ய* *வேண்டும் என்று  தீர்மானம் செய்து காய்கறிகளை கட் பண்ணி வைத்து கொண்டால் காலையில்   வசதியாக இருக்கும்.*
*குறிப்பாக பீன்ஸ்,அவரைக்காய், கீரை ,கோஸ் போன்ற காய்கறிகளை  மட்டும்.*

*வருஷம் ஒரு முறை தவறாமல் குலதெய்வம் கோவிலுக்கு போய் விட்டு வாங்க அது மிகவும் நல்லது.*
 *குழந்தைகளுக்கு சின்ன உண்டியல் வாங்கி கொடுத்து அதில் நீங்கள் மாதம் குழந்தைகளுக்கு கொடுக்கும் பணம்,மற்றும் உறவினர்கள் நாள் கிழமைகளில் கொடுக்கும் பணம் இவற்றை உண்டியலில் போட்டு வைக்க சொல்லி கொடுங்கள்.இதன் மூலம் சேமிப்பை தெரிந்து கொள்வார்கள்*
*பெண் குழந்தைகளுக்கு   நல்லது எது,கெட்டது எது என்று புரியும் படி சொல்லி கொடுங்கள் நல்லது.*
*ஒரு குழந்தையை மற்ற குழந்தையுடன் ஒப்பிட்டு பேசாதீகள்.*

*அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம் அதிகமாக உள்ளது என்று அறிந்துதுறையில் அவர்களை  உற்சாக படுத்துங்கள் நல்லது*

*வெள்ளி கிழமைகளில் முடிந்தவர் பூஜை அறையில் நெய் விளக்கு ஏற்றி வையுங்கள் வாரம் தவறாமல் நல்லது.*
      *பண்டிகை நாட்கள்,தை வெள்ளி,ஆடி வெள்ளி,வீட்டில் விஷேச நாட்களில் வாசலில் தவறாமல் மாவிலை கட்டுங்கள் தவறாமல் மற்றும் தலைவாசல் படியில் மஞ்சள் பூசி குங்குமம் இடுங்கள் லஷ்மி கடாஷம் பெருகும்.*

*குழந்தைகள் எதிரில் சண்டை  போடாதீர்கள்.*

*வருஷம் ஒரு முறை உங்க வீட்டின் வழக்க படி உங்கள் கணவரின் உடன் பிறந்த சகோதரிக்கு உங்களால்  முடிந்த விலையில் புடவை வாங்கி சுமங்கலி பிரார்த்தனை செய்து கொடுங்கள் வீட்டில் நல்ல சுபவிஷயங்கள் தடங்கல் இல்லாமல் நடக்கும்.*

*வீட்டில் வெண்ணை வாங்கி காய்ச்சும் போது வெண்ணை காய்ந்து இறக்கி வைத்தவுடன் அதில் ஒரு துளி பால் தெளித்தால் நல்லது.மற்ற முருங்கை இலை போட்டால் நெய் மணமாக இருக்கும்.*

*இரவில் வெண்ணை காய்ச்ச கூடாது.*

 *இந்த விஷயங்கள் தெரிந்தவர் நிறைய பேர் இருப்பீர்கள். தெரியாதவர்களுக்கு பயன் படும் என பதிவு செய்தேன்.*
🌸🙏🌸🙏🌸🙏🌸🙏🌸