Monday, 17 January 2022

*மார்கழி மஹான்கள்*

Thanks to : 
திருமலை சீனிவாசன்.
 மேற்கு மாம்பலம்.



*27.12.2021.*

 *ஸ்ரீபக்த கோமாபாய்*


*பக்திக்கு ஆண் என்ன பெண் என்ன!  பகவான் இதையெல்லாம்* *பார்ப்பதில்லை.பகவான்  மனிதனில் பிரிவு பார்க்க மாட்டார்.*ஆணுக்கு ஒரு நியதி பெண்ணுக்கு ஒரு நியதி கிடையாது.** *பக்தியைக் தான் கவனிப்பார். ஏழையோ பணக்காரனோ ஆணோ பெண்ணோ என்பதைக் கவனிக்க மாட்டார்.* *பக்தி மட்டும் தான் அடிப்படை.*
*பக்திக்கு தான் மரியாதை.*

கேரளத்தில் ஒரு குரூர அம்மைப் போல் மஹாராஷ்டிராவில் ஒரு கோமாபாய். இளம் வயதில் தாய் தந்தை இழந்து பின் கணவனை இழந்த கோமாபாய் பாண்டு ரெங்கனின் பரம பக்தை.ஏழை! *ஏழைக்கு தான் நல்ல பக்தி வருமோ!ஊழ்வினைப் பயனால் கஷ்டம் வந்தாலும் பாண்டு ரெங்கனிடம் பரம பக்தி! அதுவும் ஊழ்வினையில் ஒரு நல் வினையோ!*

ஒருமுறை ஏகாதசி தினம் வந்தது! 
பண்டரிபுரம் செல்ல வேண்டும். பாண்டு ரெங்கனை தரிசனம் செய்ய வேண்டும்.  நடந்து சென்றாள்  கோமா பாய். சந்திரபாகா நதியை அடைந்து விட்டாள். ஓடத்தில் ஏறி மறு கரை செல்ல வேண்டும். *ஏழை. பாவம் என்ன செய்வாள்!*
ஓடக்காரனிடம் தன்னிடம் கொஞ்சம் ரொட்டி மாவு இருக்கிறது தருகிறேன். என்னை மறு கரை சேர்த்துவிடு என்றாள். அவனோ பணம் தந்தால் ஓடத்தில் ஏறலாம். இல்லையென்றால் ஓடத்தில் இடமில்லை. *வாழ்வு எனும் சாகரத்தில் நாம் கரை சேர வேண்டும்.* *அதற்குத்தானே பாண்டு ரெங்கனை தரிசனம். ஆனால் இக்கரையில் நின்ற அக்கரை செல்ல முடியவில்லை. ஏழை* *என்றால் ஏளனம். பணக்காரனுக்கு ஓடத்தில் பயணம்!*

மனிதர்களில் தான் எத்தனை வேறுபாடுகள்! ஓடக்காரன் காலை பிடித்து கெஞ்சினாள். அவன் உதறினான். கோமா பாய் கோபம் கொள்ளாமல் பாண்டு ரெங்கனை  கரையிலிருந்து காண கதறினாள். பாண்டு ரெங்கன் பக்தையின் கூக்குரலுக்கு செவி சாய்த்தான். 

அந்த கரையில் ஒரு ஓடக்காரன் வந்தான். "வாம்மா வா! சீக்கிரம்! கடைசி சவாரி! வா!" என்றான். ஓடத்தில் கோமாபாய் ஏறினாள். சந்திரபாகா நதியை கடந்து கரையில் இறங்கினாள். திரும்பி பார்க்க ஓடமுமில்லை. ஓடக்காரனுமில்லை. *மாயக்காரன் பாண்டு ரெங்கன் பெரிய ஓடக்காரன் அல்லவா!*

அன்று காலை நதியில் குளித்தாள். பாண்டு ரெங்கனை நன்றாக தரிசித்தாள். பஜனையில் கலந்து கொண்டாள். ஏகாதசி அவளுக்கு விரதமும் விட்டலலின் நாம ஜபமும் நன்றாக அமைந்தது. மறுநாள் துவாதசிக்கு அதிதிக்கு காத்திருந்தாள். ஏழை என்பதால் யாரும் அவளை கண் எடுத்து கூடப் பார்க்கவில்லை! பாண்டு ரெங்கா!  பாண்டு ரெங்கா!
மனம் அழைத்துக் கொண்டிருந்தது. முதலில் ஒரு ஏழை பிராமணன் வடிவில் ஒருவர் வந்தார். பசிக்கிறது என்றார். கோமா பாய் சுள்ளி சேர்த்து நெருப்பு மூட்டி ரொட்டி செய்தாள். அதை அவளிடம் உண்ணச் சொல்ல, சிறிது நேரம் கழித்து புதிய மூதாட்டி ஒருத்தி வந்தாள். " ஸ்வாமி உங்களை எங்கு தேடுவது! என்னை விட்டு தனியாக எப்படி வந்து இங்கு சாப்பிடலாம்?" என்று கேட்டாள். அவளும் உண்ண  பக்த கோமா பாய் ரொட்டிகள் கொடுத்தாள்.

பக்த கோமா பாய் மனம் மகிழ்ந்தாள்.தம்பதியருக்கு துவாதசி பாரணை அளிக்கும் பெரும் பாக்யம் கிடைத்ததே என மகிழ்ந்தாள்.
அருந்திய பின் ருக்மணி சமேத பாண்டு ரெங்கன் காட்சியளித்தார். கோமா பாய் நிலத்தில் விழுந்து வணங்கினாள்.
திருநாமங்களை சொல்லி உருகினாள்.

பண்டரீபுரத்தில்  பல காலம்  தங்கி  பாண்டு ரெங்கன் பாமாலை ஜபித்து முடிவில் பாண்டு ரெங்கனுடன் ஐக்கியமானாள்.

*உண்மையான ஏழையின் பக்தி வெல்லும்.*


ஸகல ஐஸ்வர்யம் தரும் ஸத்ய நாராயண பூஜை விரத வழிபாடு

ஓம் நமோ ஸ்ரீமந் நாராயணாய 🙏🏻🙏🏻

|| ஸகல ஐஸ்வர்யம் தரும் 
ஸத்ய நாராயண பூஜை விரத வழிபாடு ||
இன்று பெளர்ணமி அதுவும் புனர்பூசம் நட்சத்திரம்  

சந்திரனின் நாளான சோம வாரம் வருவதால் அதி அற்புதமான நாள்

ஸத்ய நாராயண பூஜையை ஒவ்வொரு மாதமும் பெளர்ணமியன்று மாலை சந்திரன் உதயமாகும் நேரத்தில் செய்ய வேண்டும். 

அதாவது பிரதோஷ வேளையில் ஒருவர் இந்த விரதத்தை முறையாக கடைப்பிடித்தால் அனைத்து துன்பங்களில் இருந்து விடுபடலாம் என்று சிவபெருமான் பார்வதி தேவியிடம் கூறினார்.

சித்திரை மாதத்தின் முதல் நாளில்தான் பிரம்மதேவன், பூமியைப் படைத்ததாக எல்லா விதமான புராணங்களும் கூறுகின்றன.

உலகில் உள்ள உயிர்கள் அனைத்திற்கும் சூரியனின் ஒளியும், அதன் சக்தியுமே உயிரை தருகின்றன. 

இதனால்தான் பழங்காலத்தில் சூரியனையே மும்மூர்த்திகளாக நினைத்து மக்கள் அனைவரும் வழிபட்டு வந்திருக்கின்றனர்.

அந்த சூரியனின் கதிர்களை வாங்கி மற்ற கிரஹங்கள் இரவில் அழகாக ப்ரதிபலிக்கின்றன.

ஜாதி வேறுபாடு இல்லாமல் சகலரும் கலந்து செய்யக்கூடிய ஒரு பூஜை இந்த ஸத்ய நாராயண விரத பூஜையாகும்.

இந்த பூஜையின் விசேஷம் என்னவென்றால், ஸ்ரீ மஹாவிஷ்ணுவே நாரதரிடம் மனிதர்கள், தங்கள் கஷ்டங்களிலிருந்து விடுபட இப்பூஜையை விளக்கிக் கூறி அதன் மகிமைகளையும் தன் வாய்மொழியாக குறிப்பிட்டுள்ளார். 

இந்த பூஜையை புரோகிதர் வைத்து
செய்வது கை மேல் பலன் கிடைக்கும்.

வசதியற்றவர்கள் குரு உபதேசம் பெற்று ஒரு ஸ்தய நாராயண புத்தகத்தைப் பார்த்தும் நாமாகவே கூட செய்யலாம். 

இந்த பூஜையை பௌர்ணமியன்று செய்ய முடியாதவர்கள் அமாவாசை, அஷ்டமி, துவாதசி, ஸங்கராந்தி, தீபாவளி, ஞாயிறு, திங்கள், வெள்ளி, புரட்டாசி மாத சனிக்கிழமைகள் மற்றும் அவரவர் ஜாதகத்தில் சந்திரன் பலம் உள்ள நாளில் செய்யலாம். 

பொதுவாக பௌர்ணமி சந்திரபலம் உள்ள நாள் என்பதால் பௌர்ணமியில் அனுஷ்டிக்கபடுகிறது.

ஸ்ரீஸத்ய நாராயண பூஜையை செய்பவர்கள் ஸ்ரீவிஷ்ணு பகவானின் அருளை பூரணமாக பெறுவார்கள். 

ஏழ்மை விலகி செல்வம் சேரும். 

பக்தர்கள் விரும்பிய கோரிக்கைகள் நிறைவேறும். 

இந்த கதையை படிப்பவர்களின் பாவம் நீங்கும்.

ஒரு சமயம் நாரதர் பூமிக்கு வந்தார். . 

அப்போது வாழ்வில் பல வழிகளிலும் காமம் க்ரோதம் போன்ற துன்பத்தின் பிடியில் இருந்த மக்களை சந்தித்தார். 

இவர்களின் துன்பத்தை போக்கும் வழி என்ன என்று ஸ்ரீமஹா விஷ்ணுவிடம் கேட்டார். 

அதற்கு அவர் கலியுகத்தில் ஸ்ரீஸத்ய நாராயண விரதம் ப்ரத்யஷ பலனை அளிக்க கூடியது. 

ஒருவர் இதை முறையாக இடைவிடாது கடைப்பிடித்தால் அனைத்து துன்பங்களில் இருந்து விடுபடலாம் என்று கூறினார்.

வழிபாடு செய்வது எப்படி?

ஸ்ரீஸத்ய நாராயண பூஜை செய்வதற்கு முன்னதாக பெளர்ணமியன்று வீட்டில் கோலமிட்டு மாவிலை தோரணம் கட்டி அலங்கரிக்க வேண்டும்.

கணவன்- மனைவி இருவரும் சந்திரன் உதயமாகும் முன் குளித்துவிட்டு பூஜை செய்ய வேண்டும்.

கோலமிட்டு அதன்மீது மூன்று வாழை இலைகளை வைக்க வேண்டும். வாழை இலையின் மீது அரிசியை பரப்ப வேண்டும். 

வெள்ளி, பித்தளை, செம்பினால் ஆன கலசத்தை நூலினால் சுற்றி அரிசியின் மேல் வைக்க வேண்டும். 

ஏலக்காய் பொடி, பச்சை கற்பூரம், குங்குமப்பூ ஆகியவை கலந்த நீரை கலசத்தில் நிரப்ப வேண்டும். 

கலசத்தின் உள்ளே மாவிலைகளை வைத்து கலசத்திற்கு சந்தனம், குங்குமம் பொட்டு இட வேண்டும். 

மஞ்சள்பொடியை தண்ணீரில் குழைத்து தேங்காயின் மீது தூவி கலசத்தின் மீது வைக்க வேண்டும். 

இரண்டு வஸ்திரத்தை கலசத்திற்கு அணிவித்து மாலை சாத்த வேண்டும்.

பிறகு ஸ்ரீஸத்ய நாராயணர் படத்தை பூக்களால் அலங்கரித்து பூஜை செய்யும் இடத்தில் வைக்க வேண்டும். 

தொண்ணையிலான 9 கிண்ணங்களில் நவ தானியங்கள் நிரப்பி அவற்றை நவக்கிரகங்களுக்காக பூஜை செய்யும் இடத்தில் வைக்க வேண்டும். 

சூரியனுக்கு சிவப்பு, சந்திரனுக்கு வெள்ளை, செவ்வாய்க்கு சிவப்பு, புதனுக்கு பச்சை, குருவுக்கு மஞ்சள், சுக்ரனுக்கு வெள்ளை, சனிக்கு கருப்பு, ராகுவுக்கு நீலம் கேதுவுக்கு பலவண்ண நிறங்களில் வஸ்திரம் அணிவிக்க வேண்டும்.

சூரியனுக்கு கோதுமை, சந்திரனுக்கு அரிசி, செவ்வாய்க்கு துவரை, புதனுக்கு பச்சைப்பயறு, குருவுக்கு கடலை, சுக்ரனுக்கு மொச்சை, சனிக்கு எள், ராகுவுக்கு உளுந்து, கேதுவுக்கு கொள்ளு ஆகியவற்றை படைக்க வேண்டும். 

முதலில் விநாயகர் பூஜை, சங்கல்பம் நவக்கிரக பூஜை அஷ்ட திக் பாலக் பூஜை
முதலியவற்றை செய்து அதன் பிறகு கலச பூஜை வருண பூஜை பின் சத்யநாராயண பூஜை செய்ய வேண்டும். 

பின்பு ஸ்ரீசத்யநாராயண அஷ்டோத்திர சத்நாமாவளியை உச்சரிக்க வேண்டும். 

ஸ்ரீசூக்தம் நாராயண சூக்தம் பிரம்ம சூக்தம் துர்கா சூக்தம் புருஷ சூக்தம் விஷ்ணு சூக்தம் பாக்யா சூக்தம் நாராயண உபநிஷத் விஷ்ணு சஹஸ்ரநாமம் ருத்ரம் சமகம் சொல்வது
மேலும் அளவில்லாத பலனை தரும்.

பின்னர் தூபம், தீபம், நிவேதனம், கற்பூரதீபம் முதலிய வற்றை காட்டி கதை படிக்கவும் பூஜையை நிறைவு செய்ய வேண்டும். 

கண்டிப்பாக ப்ரசாதம் சாப்பிட வேண்டும்.

பூஜை முடிந்ததும் ஸத் ப்ராம்மணர்களுக்கு தான, தர்மங்கள் செய்வது இன்னும் அதிக பலனை கொடுக்கும்.

இந்த விரதத்தை மேற்கொள்வதன் மூலம் 
ஸ்ரீவிஷ்ணு பகவானின் அருளையும் மஹாலஷ்மி கடாக்ஷத்தை பரி பூரணமாக பெறுவார்கள். 

ஏழ்மை விலகி செல்வம் சேரும். 

பொய் வழக்குகளில் சிறைத்தண்டனை பெற்றவர்கள் விடுவிக்கப்படுவார்கள். 

பயம் நீங்கும். செல்வம், பதவி, திருமண யோகம், மோட்சம் ஆகிய நற்பலன்கள் கிடைக்கும் என்கிறது புராணங்கள்.

பக்தர்கள் விரும்பிய நியாயமான கோரிக்கைகள் கண்டிப்பாக நிறைவேறும்.

முக்கியமான விஷயம்

இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள் இடைவிடாது செய்தல் வேண்டும்.

சில நேரங்களில் தடங்கள் வரத்தான் செய்யும் இருப்பினும் விடாதீர்கள்.

முயற்சி செய்து தடைகளை தகர்த்து எறியுங்கள்.

முதலில் நம்பிக்கை வையுங்கள்.

நம் கர்மாவையும் மீறி கொடுப்பது பரமாத்மா ஒருவரே !!

ஸ்ரீ ஸத்ய நாராயண அஷ்டோத்ர 
சத நாமாவளி.

ஓம் ஸ்ரீ சத்ய தேவாய நம:
ஓம் ஸ்ரீ சத்யாத்மனே நம:
ஓம் ஸ்ரீ சத்ய பூதாய நம:
ஓம் ஸ்ரீ சத்ய புருஷாய நம;
ஓம் ஸ்ரீ சத்ய நாதாய நம:
ஓம் ஸ்ரீ சத்ய சாக்ஷிணே நம:
ஓம் ஸ்ரீ சத்ய யோகாய நம:
ஓம் ஸ்ரீ சத்ய ஜ்ஞானாய நம:
ஓம் ஸ்ரீ சத்ய ஜ்ஞான ப்ரியாயை நம;
ஓம் ஸ்ரீ சத்ய நிதயே நம: 10
ஓம் ஸ்ரீ சத்ய சம்பவாய நம:
ஓம் ஸ்ரீ சத்ய ப்ரபவே நம:
ஓம் ஸ்ரீ சத்ய யஶ்வராய நம:
ஓம் ஸ்ரீ சத்ய கர்மிணே நம:
ஓம் ஸ்ரீ சத்ய பவித்ராய நம:
ஓம் ஸ்ரீ சத்ய மங்களாய நம:
ஓம் ஸ்ரீ சத்ய கர்பாய நம:
ஓம் ஸ்ரீ சத்ய ப்ரஜாபதயே நம:
ஓம் ஸ்ரீ சத்ய விக்ரமாய நம:
ஓம் ஸ்ரீ சத்ய ஸித்தாய நம: 20
ஓம் ஸ்ரீ சத்யார்சுதாய நம:
ஓம் ஸ்ரீ சத்ய வீராய நம:
ஓம் ஸ்ரீ சத்ய போதாய நம:
ஓம் ஸ்ரீ சத்ய தர்மாய நம:
ஓம் ஸ்ரீ சத்ய க்ரஜாய நம;
ஓம் ஸ்ரீ சத்ய சம்துஷ்டாய நம:
ஓம் ஸ்ரீ சத்ய வராஹாய நம;
ஓம் ஸ்ரீ சத்ய பராயணாய நம:
ஓம் ஸ்ரீ சத்ய பூர்ணாய நம:
ஓம் ஸ்ரீ சத்ய யெளஷதாய நம: 30
ஓம் ஸ்ரீ சத்ய ஶாஶ்வதாய நம:
ஓம் ஸ்ரீ சத்ய ப்ரவர்தனாய நம:
ஓம் ஸ்ரீ சத்ய விபவே நம:
ஓம் ஸ்ரீ சத்ய ஜ்யேஷ்டாய நம:
ஓம் ஸ்ரீ சத்ய ஶ்ரேஷ்டாய நம:
ஓம் ஸ்ரீ சத்ய விக்ர நேமினே நம:
ஓம் ஸ்ரீ சத்ய தந்வினே நம:
ஓம் ஸ்ரீ சத்ய மேதாய நம:
ஓம் ஸ்ரீ சத்ய தீஶாய நம:
ஓம் ஸ்ரீ சத்ய க்ரதவே நம: 40
ஓம் ஸ்ரீ சத்ய காலாய நம:
ஓம் ஸ்ரீ சத்ய வத்ஸலாய நம:
ஓம் ஸ்ரீ சத்ய வசவே நம:
ஓம் ஸ்ரீ சத்ய மேகாய நம:
ஓம் ஸ்ரீ சத்ய ருத்ராய நம:
ஓம் ஸ்ரீ சத்ய ப்ருஹ்மணே நம:
ஓம் ஸ்ரீ சத்ய ம்ருதாய நம:
ஓம் ஸ்ரீ சத்ய வேதாங்காய நம:
ஓம் ஸ்ரீ சத்ய சதுராத்மனே நம:
ஓம் ஸ்ரீ சத்ய போக்த்ரே நம: 50
ஓம் ஸ்ரீ சத்ய ஶுசயே நம:
ஓம் ஸ்ரீ சத்ய அர்ச்சிதாய நம:
ஓம் ஸ்ரீ சத்ய இந்த்ராய நம:
ஓம் ஸ்ரீ சத்ய சங்கராய நம:
ஓம் ஸ்ரீ சத்ய ஸ்வர்காய நம:
ஓம் ஸ்ரீ சத்ய நியமாய நம:
ஓம் ஸ்ரீ சத்ய வேதாய நம:
ஓம் ஸ்ரீ சத்ய வேத்யாய நம:
ஓம் ஸ்ரீ சத்ய பீயூஷாய நம:
ஓம் ஸ்ரீ சத்ய மாயாய நம: 60
ஓம் ஸ்ரீ சத்ய மேகாய நம:
ஓம் ஸ்ரீ சத்ய சுரா நந்தாய நம:
ஓம் ஸ்ரீ சத்ய ஸாகராய நம:
ஓம் ஸ்ரீ சத்ய தபஸே நம:
ஓம் ஸ்ரீ சத்ய ஸிம்ஹாய நம;
ஓம் ஸ்ரீ சத்ய ம்ருகாய நம:
ஓம் ஸ்ரீ சத்ய லோக பாலகாய நம;
ஓம்ஸ்ரீ சத்ய ஸ்திராய நம:
ஓம் ஸ்ரீ சத்ய யெளஷதயே நம:
ஓம் ஸ்ரீ சத்ய திக் பாலகாய நம: 70
ௐ ஸ்ரீ சத்ய தநுர் தராய நம:
ஓம் ஸ்ரீ சத்யாம் புஜாய நம:
ஓம் ஸ்ரீ சத்ய வாக்யாய நம:
ஓம் ஸ்ரீ சத்ய குரவே நம:
ஓம் ஸ்ரீ சத்ய ஜ்ஞாயாய நம:
ஓம் ஸ்ரீ சத்ய சாக்ஷிணே நம:
ஓம் ஸ்ரீ சத்ய சம்வ்ருதாய நம:
ௐ ஸ்ரீ சத்ய ஸம்ப்ரதாய நம:
ௐ ஸ்ரீ சத்ய வஹ்னயே நம:
ஓம் ஸ்ரீ சத்ய வாயவே நம: 80
ஓம் ஸ்ரீ சத்ய ஶிகராய நம:
ஓம் ஸ்ரீ சத்ய நந்தாய நம:
ஓம் ஸ்ரீ சத்யாதி ராஜாய நம:
ஓம் ஸ்ரீ சத்ய ஶ் ரீ பாதாய நம:
ஓம் ஸ்ரீ சத்ய குஹ்யாய நம:
ௐ ஸ்ரீ சத்யோதராய நம:
ௐ ஸ்ரீ சத்ய ஹ்ருதயாய நம:
ஓம் ஸ்ரீ சத்ய கமலாய நம:
ஓம் ஸ்ரீ சத்ய ஹஸ்தாய நம:
ஓம் ஸ்ரீ சத்ய நாளாய நம: 90
ஓம் ஸ்ரீ சத்ய பாஹ்னவே நம;
ஓம் ஸ்ரீ சத்ய முகாய நம:
ஓம் ஸ்ரீ சத்ய ஜிஹ்வாய நம:
ஓம் ஸ்ரீ சத்ய தம்ஷ்ட்ராய நம;
ஓம் ஸ்ரீ சத்ய நாஸிகாய நம:
ஓம் ஸ்ரீ சத்ய ஶ்ரோத்ராயை நம;
ஓம் ஸ்ரீ சத்ய சக்ஷுஸே நம;
ௐ ஸ்ரீ சத்ய ஶிரஸே நம:
ஓம் ஸ்ரீ சத்ய மகுடாய நம;
ஓம் ஸ்ரீ சத்யாம் பராய நம; 100
ஓம் ஸ்ரீ சத்யா பரணாய நம:
ஓம் ஸ்ரீ சத்யாயுதாய நம;
ஓம் ஸ்ரீ சத்ய ஸ்ரீ வல்லபாய நம:
ஓம் ஸ்ரீ சத்ய குப்தாய நம:
ஓம் ஸ்ரீ சத்ய புஷ்கராய நம:
ஓம் ஸ்ரீ சத்ய த்ருடாய நம:
ஓம் ஸ்ரீ சத்ய பாமாரதாய நம:
ஓம் ஸ்ரீ சத்ய க்ருஹ ரூபினே நம; 108
ஓம் ஸ்ரீ சத்ய ப்ரஹரணாயுதாய நம;
ஓம் ஸ்ரீ சத்ய தேவதாய நம:
ஓம் ஸ்ரீ சத்ய நாராயணாய நம:

இதி ஸ்ரீலஷ்மி ஸகித ஸத்ய நாராயண அஷ்டோத்ர சத நாமாவளி சம்பூர்ணம்.

ஓம் நாராயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹீ
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்.

|| 108 முறை ||

ஜெய் ஸ்ரீராம்.
சர்வம் கிருஷ்ணார்பணமஸ்து. 17.1.22.