Saturday, 26 August 2023

மதுரை மீனாட்சி அன்னையை தரிசனம் செய்வதில் மறைந்துள்ள தெய்வீக ரகசியம் பற்றி தெரியுமா?

பழனியில் முருகன் காலையில் ஆண்டி கோலத்திலும், மாலையில் ராஜ அலங்காரத்திலும் காட்சி தருவார்.

சோட்டானிக்கரை பகவதி அம்மன் சரஸ்வதி, லட்சுமி, பார்வதிதேவி.. என மூன்று விதமாய் காட்சி தருவாள். 

அந்த வரிசையில், மதுரையில் மீனாட்சி அம்மன் மொத்தம் 8 விதமான அலங்காரங்களில் காட்சி அளிக்கின்றாள்.

சக்தியில்லையேல் சிவமில்லை என சிவனே உணர்ந்திருந்த போதும், சக்தி தலங்களாய் விளங்கும் ஊர்களில் சிவனின் ஆட்சியே நடக்கும். 

ஆனால், மதுரையில் அன்னையின் கையே ஓங்கி இருக்கும். மதுரையின் அரசியாய் மீனாட்சியே ஆட்சி செய்கிறாள்.

முதலில், மீனாட்சி அம்மனுக்கு அபிஷேகம், பூஜைகள் செய்தபின்னரே சுந்தரேஸ்வரருக்கு செய்வது வழக்கம்.

பக்தர்களும் அன்னையை வணங்கிய பின்னரே அப்பனை வணங்கி வருகின்றனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பல அதிசயங்கள் உள்ளது. 

மதுரையில் மீனாட்சி தினமும் 
8 விதமான சக்திகளாகப் பாவிக்கப்பட்டு ஆராதிக்கப்படுகிறாள். 

இது மற்ற கோவில்களில் இல்லாத ஒரு சிறப்பு. 

அவை ..

திருவனந்தல் – பள்ளியறையில் – மஹா ஷோடசி

ப்ராத சந்தியில் – பாலா
6 – 8 நாழிகை வரையில் – 

புவனேஸ்வரி
12 – 15 நாழிகை வரையில் – கெளரி

மத்யானத்தில் – சியாமளா

சாயரக்ஷையில் – மாதங்கி

அர்த்த ஜாமத்தில் – பஞ்சதசி

பள்ளியறைக்குப் போகையில் – ஷோடசி

அன்னைக்கு 5 கால பூஜைகள் நடக்கும்போது, மேலே சொன்ன ரூபங்களுக்கு ஏற்றவாறுதான் அலங்காரங்கள் செய்விக்கப்படும்.

காலையில் சின்னஞ்சிறு சிறுமி போன்றும், உச்சிக்காலத்தில் மடிசார் புடவை கட்டியும், மாலை நேரத்தில் வெள்ளிக் கவசமும், வெள்ளிக் கிரீடமும் அணிந்தும், இரவு அர்த்த ஜாமத்தில் வெண்பட்டு புடவை அணிந்தும் அன்னை காட்சி தருகிறாள். 

இது வேறு எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாகும். 

அன்னையின் இந்த ஒவ்வொரு அலங்கார காட்சியையும் காண கண்கோடி வேண்டும்.

*ஒரேநாளில் புவனேஷ்வரி,
கௌரி,சியாமளா,
மாதங்கி,பஞ்சதசி என அன்னையின் அத்தனை ரூபத்தினையும் தரிசிப்பவர்களும் மறுப்பிறப்பு கிடையாது என்பதே அன்னையை தரிசனம் செய்வதில் மறைந்துள்ள தெய்வீக ரகசியமாகும்*

*வாழ்க்கையில் ஒரு முறையேனும் காணவேண்டிய அன்னை மீனாட்சியின் பள்ளியறை பூஜை*!

எல்லா கோவில்களையும் போல, மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலும்போல பள்ளியறை அம்மன் சன்னதியில் இருக்கிறது. 

இரவு அர்த்த ஜாமத்தில் 
மல்லிகை பூவால் கூடாரம் கண்டு, வெண்தாமரைகளால் மீனாட்சியின் பாதங்கள் அலங்கரிக்கப்பட்டு, வெண்பட்டால் அம்மனை அலங்கரித்து கிடைக்கும் அன்னையின் திருக்காட்சி காண கண்கோடி வேண்டும்.

இரவு பள்ளியறைக்கு சுந்தரேஸ்வரரது வெள்ளிப் பாதுகைகள் ஸ்வாமி சன்னதியில் இருந்து பள்ளியறை வரும்.

பாதுகைகள் வந்தபின் அன்னைக்கு விசேஷ ஹாரத்தி (மூக்குத்தி தீபாராதனை ) நடக்கிறது.

உள்ளே இருக்கும் பெரும்பாலான வண்ணம் வெள்ளை.ஆகவே தான் அன்னையின் மூக்குத்தியை மிக தெளிவாக தரிசிக்க இயலும்.

அத்தோடு மூன்று வகையான தீபங்கள் காட்டப்படும் அதில் கடைசி தீபம் அம்மனின் முகத்திற்கு மிக அருகில் காட்டுவர்.

அவ்வாறு காட்டப்படும் போது மிக தெளிவாக அம்மனின் திருமுகத்தினை தரிசிக்கலாம். 

மூன்றாவது தீபாராதனைக்குப் பிறகு அன்னையின் சன்னதியில் திரை போடப்படும்.

அவ்வாறு திரையிட்ட பின்னர் அன்னையின் மூக்குத்தி பின்புறமாக தள்ளப்பட்டுவிடுகிறது.

(மூக்குத்தியானது ஒரு செயினுடன் இணைக்கப்பட்டு அந்த செயினின் இன்னொரு பகுதி அம்மனது பின்புறத்தில் இணைக்கப்பட்டு இருக்கும்)

இவ்வாறு செய்த பிறகே அன்னையின் சார்பாக அன்றைய கட்டளைக்கான பட்டர் ஈசனை வரவேற்று பள்ளியறைக்கு எழுந்தருளச் செய்வார்.

அதாவது மூலஸ்தானத்தில் இருக்கும் மீனாக்ஷி சுந்தரேஸ்வரருக்கு பாதபூஜை செய்து பள்ளியறைக்கு அழைத்துச் செல்வதாக ஐதீகம்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் இந்த  பள்ளியறை பூஜை பார்க்கப் பார்க்கத் திகட்டா காட்சியாகும் 

பள்ளியறை பூஜை சிவ – சக்தி ஐக்கியத்தை உணர்த்துவதால் இந்த தரிசனத்திற்கு சிறப்பு அதிகம். 

அதன் பின்னர் அம்பிகையின் சன்னதி மூடப்பட்டு பள்ளியறையில் பூஜை, பால், பழங்கள், பாடல்கள், வாத்ய இசை என்று சகல உபசாரங்களுடன் இரவு கோவில் நடை சார்த்தப்படுகிறது.

*மேலும் கணவன் மனைவி ஒற்றுமைக்கு மதுரை மீனாட்சி கோவிலில் தினமும் நடைபெறும் பள்ளியறை பூஜையை தரித்தல் நல்ல பயனைக் கொடுக்கும் என்பதும் மீனாட்சி கோவிலில் மறைந்துள்ள பள்ளியறை பூஜை தரிசன ரகசியமாகும்*

குழந்தை பாக்கியம் இல்லாதோர்,
பிள்ளை வரம் வேண்டுவோர் கட்டாயம் காண வேண்டிய அன்னை மீனாட்சியின் தரிசனம்!

குழந்தை பாக்கியம் இல்லாதோர்,
பிள்ளை வரம் வேண்டுவோர் காலையில் மீனாட்சி அம்மனின் சின்னஞ்சிறு சிறுமி  அலங்காரத்துடன் நடக்கும் ஆராதனையை தரிசித்து மனமுருகி வேண்டினால் அன்னை சந்தான பாக்கிய பலனை கட்டாயம் தருவாள் .

வியாபாரத்தில் நஷ்டம் தொழில் மற்றும் வேலையில் பிரச்சனை உள்ளவர்கள் காண வேண்டிய தரிசனம்.

வியாபார நஷ்டம்,தொழில் மற்றும் வேலையில் பிரச்சனை உள்ளவர்கள் அன்னையின் வைர கிரீட அலங்காரத்தினை கண்டு தரிசித்தால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் பெறலாம் 

வாழ்வில் ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டிய கோவில்களில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்கு முக்கிய இடமுண்டு…

இவையெல்லாவற்றையும்  
விட புண்ணியம் செய்தவர்களுக்கு மட்டுமே அன்னை ஸ்ரீமீனாட்சியை *புவனேஷ்வரி*,
*கௌரி*,
*சியாமளா*,
*மாதங்கி*,
 *பஞ்சதசி* என எல்லா அலங்காரத்திலும்  தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைக்கும். என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

அம்மனுக்கு தங்க கிரீடம், சுவாமிக்கு வைர பட்டை  பொங்கல், தமிழ் புத்தாண்டு, தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் மட்டும் அணிவிக்கப்படும். 

வழக்கமாக அம்மன் சன்னதியில் குங்குமம்தான் பக்தர்களுக்கு தருவார்கள்.  பள்ளியறை பூஜையின் போது, சுவாமி பாதம் அம்மன் சன்னதிக்கு வந்த பின், குங்குமத்திற்கு பதில் திருநீறு தருவர்.

மீனாட்சி அன்னையின் பாதம் பணியுங்கள்!!வாழ்வில் எல்லா வளங்களையும் பெறுங்கள்!!!

ஸ்ரீமீனாட்சி தாயே போற்றி!

🙏🙏🙏

Friday, 25 August 2023

ஆனந்த நிலைய விமான சந்தனகல் பிரதிஷ்டை அழைப்பிதழ்


இளங்காடு ஸ்ரீ கண்ணன் திருக்கோயில்
*************************
கண்ணன் கழலினை நண்ணும் மனமுடையீர்! எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே!!
""""""""""""""""""""""""""""""""""""""""
கண்ணபிரானின் திருவருளை முன்னிட்டு கீதையின்  18 அத்தியாயங்களை குறிக்கும் வகையில்  18 அடி உயரமுள்ள ஆனந்த நிலைய விமானம் கட்டுமான திருப்பணி நிறைவுற்று சந்தனக்கல் பிரதிஷ்டை வருகின்ற ஆவணித்திங்கள் 10ஆம் நாள் (27.08.2023) ஞாயிற்றுக்கிழமை 7.45 - 8.45 மணியளவில் செய்யப்பட உள்ளதால் அன்பர்கள் தவறாது கலந்து கொண்டு கண்ணபிரானின் திருவருளைப் பெற்றுய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^
இங்ஙனம்
ஸ்ரீ கண்ணன் அறக்கட்டளை (75/2010), இளங்காடு.
@@@@@@@@@@@@@

மேலதிக தகவல் பெற அழைக்கவும்

9500264545,
9942604383 & 
8056901601.
--------------------------------------

Thursday, 24 August 2023

தாயார் சன்னதி கட்டுமானம்

தாயார் மஹாலக்ஷ்மி ருக்குமணி பிராட்டியார் சன்னதி திருப்பணி

Friday, 11 August 2023

Temple Restoration Sponsorship


Experience the divine power of Sri Kannan Thirukkovil by sponsoring the temple renovation - bring positive transformation in your life! Support us in this noble cause and receive immense divine blessings. Donate generously to this sacred effort and make your prayers more meaningful. Sponsor this temple renovation and be part of something greater than yourself.

Thursday, 10 August 2023

பூணூல் என்பது சர்வ சக்தி வாய்ந்நது.


பூணூலுக்கு வடமொழியில் யக்ஞோபவீதம் என்ற பெயர். அப்படிப்பட்ட பூணூலைத் தயாரிக்கையில், காயத்ரி மந்திரத்தை ஜபித்துக்கொண்டே தயாரிப்பார்களாம்.

அப்படி ஜபித்து ஜபித்து உரு ஏற்றப்பட்ட பூணூலுக்குச் சக்தி மிக அதிகம்.
ஒரு ஏழை பிராமணர் பூணூல் தயாரித்துக் கொடுத்து, அதில் வரும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை எப்படியோ ஓட்டி வந்தார்.

அவரும் திருமணமாகி ஒரு பெண்மகவைப் பெற்றெடுத்தார்.
என்றாலும் பூணூல் தயாரிப்பும் அதைக் கொண்டு வாழ்க்கை நடத்துவதும் நிற்கவில்லை.

அந்த ஊர் அரசன் மிகவும் சத்தியவான். சொன்னால் சொன்னபடி அனைவருக்கும் செய்வான்.

அந்த ஊர் மக்களும் ஏழை பிராமணருக்கு ஓரளவு உதவி வந்தனர் என்றாலும், அதில் அவரது பெண்ணின் கல்யாணத்தை நடத்த முடியுமா?

பிராமணரின் பெண்ணிற்கு திருமண வயது வந்துவிட்டது. அக்கால வழக்கப்படி ஏழு வயதுக்குள்ளாகத் திருமணம் முடிக்க வேண்டும்.

ஒரு மாப்பிள்ளையும், அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளச் சம்மதித்தான்.

ஆனால் அந்தக் கல்யாணத்தைக் குறைந்த பட்ச செலவுகளோடு நடத்தியாக வேண்டும், என்ன செய்யலாம் என்று யோசித்தார் அந்த ஏழை பிராமணர்.

காயத்ரி மந்திரத்தை ஒருமனதாக வாய் ஜபிக்க, பிராமணர் எந்தக் கவலையும் இல்லாமல் இருந்தார்.

ஆனால் அப்படியே அவரது மனையாளும் இருப்பாளா?

அவள் பெண்ணின் திருமணத்திற்காகப் பொருள் தேடும்படி பிராமணரைத் தூண்டி விட, அவரும் செய்வதறியாது அந்நாட்டு மன்னனிடம் சென்றார்.

மன்னனும் பிராமணரை வரவேற்று உபசரித்தான்.

ஏழைப் பிராமணரது முகத்தின் ஒளி மன்னனைக் கவர்ந்தது.

இது எதனால் என யோசித்துக்கொண்டே, வந்த காரியம் என்னவோ என பிராமணரிடம் வினவினான்.

பிராமணரும், தன் மகளுக்குத் திருமணம் நிச்சயித்திருப்பதாகவும், அதற்கான பொருள் தேவை என்பதாலேயே மன்னனிடம் வந்திருப்பதாகவும் கூறினார்.

அவ்வளவு தானே,
நான் தருகிறேன் என்ற மன்னன்,
எவ்வளவு பொருள் தேவை எனக் கேட்க,
கூசிக் குறுகிய பிராமணரோ,
தன்னிடமிருந்த பூணூலைக் காட்டி,
இதன் எடைக்குரிய பொற்காசைக் கொடுத்தால் போதும்,
ஒருமாதிரி நான் சமாளித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.

மன்னன் நகைத்தான்.
ஒரு தராசை எடுத்துவரச் சொல்லிப் பூணூலை அதில் இட்டு, மறுபக்கம் சில பொற்காசுகளை வைக்கச் சொன்னான்.

பூணூல் இருக்கும் பக்கம் தராசுத்தட்டு தாழ்ந்தே இருந்தது.

மேலும் பொற்காசுகளை வைக்க, அப்படியும் பூணூல் இருக்கும் தட்டு தாழ்ந்தே இருந்தது.

தராசும் பத்தவில்லை.

பெரிய தராசைக் கொண்டு வரச் செய்தான் மன்னன்.

மேலும் பொற்கட்டிகள், வெள்ளிக்கட்டிகள், நகைகள், ரத்தினங்கள் என, இட இட தராசுத்தட்டு தாழ்ந்தே போக,

தன் கஜானாவே காலியாகுமோ என பயந்த மன்னன், மந்திரியைப் பார்த்தான்.

சமயோசிதமான மந்திரியோ,
பிராமணரே,
இன்று போய் நாளை வந்து வேண்டிய பொருளைப் பெற்றுக்கொள்ளும்,
நாளை வருகையில் புதிய பூணூலைச் செய்து எடுத்துவரவும் எனக் கூறினார்.

கலக்கத்துடன் சென்றார் பிராமணர். இத்தனை நேரமாக மனதில் இருந்த அமைதியும், நிம்மதியும் தொலைந்தே போனது.

மன்னன் பொருள் தருவானா மாட்டானா?

ஆஹா, எத்தனை எத்தனை நவரத்தினங்கள்?

அத்தனையையும் வைத்தும் தராசுத்தட்டு சமமாகவில்லையே?

நாளை அத்தனையையும் நமக்கே கொடுத்துவிடுவானோ?

அல்லது இன்னமும் கொஞ்சம் கூடக் கிடைக்குமா?

அல்லது குறைத்துவிடுவானோ?

பெண்ணிற்குக் கொடுத்தது போக நமக்கும் கொஞ்சம் மிஞ்சும் அல்லவா?

அதை வைத்து என்ன என்ன செய்யலாம்?

என்று நினைத்து பிராமணரின் மனம் அலை பாய்ந்தது.

அன்றிரவெல்லாம் தூக்கமே இல்லை.

காலை எழுந்ததும் அவசர, அவசரமாக நித்ய கர்மாநுஷ்டானங்களை முடித்தார்.

பூணூலைச் செய்ய ஆரம்பித்தார்.

வாய் என்னவோ வழக்கப்படி காயத்ரி மந்திரத்தை ஜபித்தாலும், மனம் அதில் பூர்ணமாக ஈடுபடாமல் தடுமாறினார்.

ஒருமாதிரியாகப் பூணூலைச் செய்து முடித்தவர், அதை எடுத்துக்கொண்டு மன்னனைக் காண விரைந்தார்.

அரசவையில் மன்னன் மந்திரிமார்கள் வீற்றிருக்க, மீண்டும் தராசு கொண்டு வரப்பட்டது.

அன்று அவர் தயாரித்த பூணூலை தராசுத்தட்டில் இட்டு, இன்னொரு தட்டில் சில பொற்காசுகளை வைக்கச் சொன்னான் மன்னன்.

என்ன ஆச்சரியம்?

பொற்காசுகள் இருக்கும் தட்டு தாழ்ந்துவிட்டதே?

சில பொற்காசுகளை எடுத்துவிட்டு இரண்டு மூன்று பொற்காசுகளை வைத்தாலும், தட்டு தாழ்ந்து போயிற்று.

பின்னர் அவற்றையும் எடுத்துவிட்டு ஒரே ஒரு பொற்காசை வைக்க, தட்டு சமம் ஆயிற்று.

அந்த ஒரேயொரு பொற்காசை மட்டும் வாங்கிக் கொண்டார் அந்த பிராமணர்.

பிராமணர் அங்கிருந்து சென்றதும் மன்னனுக்கு ஆச்சரியம் அதிகமாக,

மந்திரியிடம்,
நேற்று எவ்வளவு பொருளை வைத்தாலும் தாழாத தட்டு,
இன்று சில பொற்காசுகளை வைத்ததுமே தாழ்ந்தது ஏன்?
என்று கேட்க,
மந்திரியோ,
மன்னா, இந்த பிராமணர் உண்மையில் மிகவும் நல்லவர். சாதுவும் கூட.

இத்தனை நாட்கள் பணத்தாசை ஏதும் இல்லாமல் இருந்தார்.

தேவைக்காகத் தான் உங்களை நாடி வந்தார்.
வந்தபோது அவர் கொடுத்த பூணூல் அவர் ஜபித்த காயத்ரியின் மகிமையால், அதிக எடை கொண்டு தனக்கு நிகரில்லாமல் இருந்தது.

அந்தப் பூணூலை வைத்திருந்தால், ஒருவேளை உங்கள் நாட்டையே கூடக் கொடுக்க வேண்டி இருந்திருக்கலாம்.

அவ்வளவு சக்தி வாய்ந்தது காயத்ரி மந்திரம்.

ஆனால் அவரைத் திரும்ப வரச் சொன்ன போது, அவர் பணம் கிடைக்குமா,
பொருள் கிடைக்குமா என்ற கவலையில், காயத்ரி மந்திரத்தை மனம் ஒருமித்துச் சொல்லவில்லை.

அதனால் தான் மறுநாள் அவர் கொண்டு வந்த பூணூலில், மகிமை ஏதும் இல்லை.

அதனால் தான் பொற்காசுகளை வைத்ததுமே, தட்டு தாழ்ந்துவிட்டது என்றார் மந்திரி.

மன்னர் அந்த பிராமணரை வரவழைத்து, அவரது தவறை உணரவைத்து, பொன்னும் பொருளும் அள்ளிக் கொடுத்து அனுப்பி வைத்தார்.

        பூணூல் என்பது
   சர்வ சக்தி வாய்ந்நது.

                   சர்வம்
🙏கிருஷ்ணார்ப்பயாமி🙏

Monday, 7 August 2023

அனைத்து சங்கடங்களும் நீங்கி வளமோடு வாழ்வோம்...!எந்த கோவிலுக்கு சென்றால், என்ன பலன்கள் கிடைக்கும் என்று தெரியுமா?


1.பரிகாரத் தலங்கள் ஆயுள் பலம் வேண்டுதல்!!!

1.அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்,திருக்கடையூர்,
2.அருள்மிகு எமனேஸ்வரமுடையார் திருக்கோவில், எமனேஸ்வரம், பரமக்குடி
3.அருள்மிகு காலகாலேஸ்வரர் திருக்கோவில், கோவில்பாளையம்,
4.அருள்மிகு சித்திரகுப்தசுவாமி திருக்கோவில், காஞ்சிபுரம்,
5.அருள்மிகு தண்டீஸ்வரர் திருக்கோவில், வேளச்சேரி,
6.அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோவில். திருப்பைஞ்ஞீலி.
7.அருள்மிகு வாஞ்சிநாதசுவாமி திருக்கோவில், வாஞ்சியம்,

2.ஆரோக்கியத்துடன் வாழ..

1.அருள்மிகு தன்வந்திரி திருக்கோவில், ராமநாதபுரம், கோவை.
2.அருள்மிகு பவஒளஷதீஸ்வரர் திருக்கோவில்,
திருத்துறைப்பூண்டி.
3.அருள்மிகு பிரசன்னவெங்கடேச பெருமாள் திருக்கோவில், குணசீலம்.
4.அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருவான்மியூர்.
5.அருள்மிகு மகா மாரியம்மன் திருக்கோவில், வலங்கைமான்.
6.அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோவில், மடவார்விளாகம், ஸ்ரீவில்லிபுத்தூர்.
7.அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோவில், வைத்தீஸ்வரகோவில்.

3.எதிரி பயம் நீங்க..

1.அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில், மேல்மலையனூர்.
2.அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோவில், கல்மண்டபம் இராயபுரம் ,சென்னை.
3.அருள்மிகு காலபைரவர் திருக்கோவில், கல்லுக்குறிக்கி. கிருஷ்ணகிரி.
4.அருள்மிகு காளமேகப்பெருமாள் திருக்கோவில், திருமோகூர்.
5.அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோவில், தம்புசெட்டித்தெரு, சென்னை.
6.அருள்மிகு தட்சிணகாசி உன்மத்த காலபைரவர் திருக்கோவில்,
அதியமான்கோட்டை.
7.அருள்மிகு தில்லைகாளியம்மன் திருக்கோவில், சிதம்பரம்.
8.அருள்மிகு பிரத்யங்கராதேவி திருக்கோவில், அய்யாவாடி. கும்பகோணம்.
9.அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோவில், ஆணைமலை.
10.அருள்மிகு முனியப்பன் திருக்கோவில், பி.அக்ரஹாரம், தர்மபுரி.
11.அருள்மிகு ரேணுகாம்பாள் திருக்கோவில், படவேடு.
12.அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் திருக்கோவில், கொல்லங்குடி

4.கடன் பிரச்சனைகள் தீர..

1.அருள்மிகு அன்னமலை தண்டாயுதபாணி திருக்கோவில், மஞ்சூர், ஊட்டி
2.அருள்மிகு கருமாரியம்மன் திருக்கோவில், திருவேற்காடு.
3.அருள்மிகு சாரபரமேஸ்வரர் திருக்கோவில், திருச்சேறை, கும்பகோணம்.
4.அருள்மிகு சிவலோகதியாகர், நல்லூர்பெருமணம், ஆச்சாள்புரம், சீர்காழி.
5.அருள்மிகு திருமலை-திருப்பதி ஸ்ரீநிவாசபெருமாள் திருக்கோவில், திருமலை.

5.கல்வி வளம் பெருக…

1.அருள்மிகு கரிவரதராஜ பெருமாள் திருக்கோவில், மாதவரம்.
2.அருள்மிகு தேவநாதசுவாமி திருக்கோவில், திருவஹிந்தீபுரம், கடலூர்.
3.அருள்மிகு மகாசரஸ்வதி அம்மன், கூத்தனூர். பூந்தோட்டம்.
4.அருள்மிகு வரதராஜபெருமாள் திருக்கோவில், செட்டிபுண்ணியம்.
5.அருள்மிகு ஸ்ரீ கண்ணன் திருக்கோயில்(ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் ப்ரார்த்தனை ஸ்தலம்), இளங்காடு.

6.குழந்தைப்பேறு அடைய…

1.அருள்மிகு ஏகம்பரநாதர் திருக்கோவில், காஞ்சிபுரம்.
2.அருள்மிகு சங்கரராமேஸ்வரர் திருக்கோவில், தூத்துக்குடி.
3.அருள்மிகு சிவசுப்ரமண்யசுவாமி திருக்கோவில், குமாரசாமிபேட்டை, தர்மபுரி.
4.அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோவில், மலைக்கோட்டை, திருச்சி.
5.அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோவில், ஆயக்குடி, தென்காசி.
6.அருள்மிகு மயூரநாதசுவாமி திருக்கோவில், பெத்தவநல்லூர், ராஜபாளையம்.
7.அருள்மிகு முல்லைவனநாதசுவாமி திருக்கோவில், திருக்கருகாவூர்.
8.அருள்மிகு நச்சாடை தவிர்தருளியசுவாமி திருக்கோவில், தேவதானம், ராஜபாளையம்.
9.அருள்மிகு விஜயராகவபெருமாள் திருக்கோவில், திருபுட்குழி.

7.குடும்பத்தில் ஒற்றுமை ஓங்க…

1.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில், வில்லிவாக்கம்.
2.அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில், திருச்செங்கோடு.
3.அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில், முத்தனம்பாளையம்.திருப்பூர்
4.அருள்மிகு கல்யாணவிகிர்தீஸ்வரர் திருக்கோவில், வெஞ்சமாங்கூடலூர்.
5.அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோவில், சங்கரன்கோவில்.
6.அருள்மிகு நவநீதசுவாமி திருக்கோவில், சிக்கல்.
7.அருள்மிகு பள்ளிக்கொண்டீஸ்வரர் திருக்கோவில், ஊத்துக்கோட்டை,
சுருட்டப்பள்ளி.
8.அருள்மிகு மனிஹடா ஹெத்தையம்மன் நாகராஜா திருக்கோவில், மஞ்சக்கம்பை.
9.அருள்மிகு மாரியம்மன்,காளியம்மன் திருக்கோவில், ஊட்டி
10.அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோவில், பரிக்கல்.
11.அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோவில், உறையூர்
12.அருள்மிகு ஸ்தலசயனப்பெருமாள் திருக்கோவில், மாமல்லபுரம்.

8.செல்வ வளம் சேர…

1.அருள்மிகு அனந்தபத்மநாபசுவாமி திருக்கோவில், அடையாறு.
2.அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோவில், பெசண்ட்நகர், சென்னை.
3.அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில், தாரமங்கலம்.
4.அருள்மிகு பக்தவச்சலப்பெருமாள் திருக்கோவில், திருநின்றவூர்.
5.அருள்மிகு மாதவப்பெருமாள் திருக்கோவில், மயிலாப்பூர்.

9.திருமணத்தடைகள் நீங்க…

1.அருள்மிகு உத்வாகநாதசுவாமி திருக்கோவில், திருமணஞ்சேரி.
2.அருள்மிகு கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோவில், கரூர்.
3.அருள்மிகு கல்யாணவேங்கடரமணசுவாமி திருக்கோவில், தான்தோன்றிமலை.
4.அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில், தாரமங்கலம்.
5.அருள்மிகு சென்னமல்லீஸ்வரர், சென்னகேசவபெருமாள் திருக்கோவில், பாரிமுனை.
6.அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோவில், பேரூர். கோவை.
7.அருள்மிகு நித்யகல்யாண பெருமாள் திருக்கோவில், திருவிடந்தை.
8.அருள்மிகு வரதராஜபெருமாள் திருக்கோவில், நல்லாத்தூர்.
9.அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோவில், திருவீழிமழலை.

10.தீவினைகள் அகன்றிட..

1.அருள்மிகு காலபைரவர் திருக்கோவில், குண்டடம்.
2.அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோவில், தம்புசெட்டி தெரு, சென்னை.
3.அருள்மிகு குறுங்காலீஸ்வரர் திருக்கோவில், கோயம்பேடு.
4.அருள்மிகு சரபேஸ்வரர் திருக்கோவில், திருபுவனம்.
5.அருள்மிகு சிங்காரத்தோப்பு முனீஸ்வரர் திருக்கோவில், நடுப்பட்டி, மொரப்பூர்.
6.அருள்மிகு பண்ணாரிமாரியம்மன் திருக்கோவில், பண்ணாரி.

11.நிலம், வீடு, மனை அமைந்து சங்கடங்கள் தீர…

1.அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோவில், திருப்புகலூர்.
2.அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோவில், தீர்த்தமலை, அரூர்.
3.அருள்மிகு பூவராகசுவாமி திருக்கோவில், ஸ்ரீமுஷ்ணம்.
4.அருள்மிகு வராகீஸ்வரர் திருக்கோவில், தாமல். காஞ்சீபுரம்.

12.நோய், நொடிகள் தீர…

1.அருள்மிகு இருதயாலீஸ்வரர் திருக்கோவில், திருநின்றவூர்.
2.அருள்மிகு தோரணமலை முருகன் திருக்கோவில், தோரணமலை.
3.அருள்மிகு பண்ணாரிமாரியம்மன் திருக்கோவில், பண்ணாரி.
4.அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருவான்மியூர்.
5.அருள்மிகு வீர்ராகவர் திருக்கோவில், திருவள்ளூர்.
6.அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோவில், திருவீழிமழலை.
7.அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோவில், மடவார் விளாகம். ஸ்ரீவில்லிப்புத்தூர்.

13.பெண்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண…

1.அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோவில், மலைக்கோட்டை, திருச்சி.
2.அருள்மிகு பாதாள பொன்னியம்மன் திருக்கோவில், கீழ்ப்பாக்கம், சென்னை.
3.அருள்மிகு மகாதேவர் திருக்கோவில், செங்கனூர்.கேரளா

14.முன்னோர் வழிபாட்டிற்கு..

1.அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோவில், பவானி.
2.அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோவில், கொடுமுடி.
3.அருள்மிகு வரமூர்த்தீஸ்வரர் திருக்கோவில், அரன்வாயல். கவரப்பேட்டை.
4.அருள்மிகு  வீரராகவர் திருக்கோவில், திருவள்ளூர்.
6.அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவில், ராமேஸ்வரம்.
7.அருள்மிகு திருப்பள்ளிமுக்கூடல். குருவிராமேஸ்வரம் திருக்கோவில், திருவாரூர்
8 காசி காசி விஸ்வநாதர்
9 பாபநாசம் திருநெல்வேலி மாவட்டம்
10 அருள்மிகு  சொறிமுத்து அய்யனார் கோயில்
பாபநாசம் திருநெல்வேலி மாவட்டம்!!!