Monday 16 September 2024

நவராத்திரி உற்சவத்திற்கு உபயதாரர்கள் வரவேற்கப்படுகின்றனர்

_நம் திருக்கோயிலில் தாயார் எழுந்தருளி ஏற்கும் முதல் நவராத்திரி உற்சவம் என்பதால் இந்த உற்சவத்திற்கு உபயதாரர்கள் வரவேற்கப்படுகின்றனர்_.
*இந்த உற்சவத்தின் உபயத்தொகையில்*

*1*.*தாயார் திருமஞ்சனம்* (_மூலவர் & உற்சவர் சேர்த்து_)

*2*.*இரண்டு புது புடவைகள்*
(_மூலவர் & உற்சவர் சேர்த்து_)

*3*.*உற்சவர் தாயார் புறப்பாடு*
(_புறப்பாடு அலங்காரம் உட்பட_)

*3*.*ஊஞ்சல் ஏழுந்தருளல் மங்களவாத்தியத்துடன் திருவாராதனை* 

*4*.*திருப்பாவை, நாச்சியார் திருமொழி கோஷ்டி* 

*5*.*தாம்பூலம் மரியாதை 9 சுமங்கலிப் பெண்களுக்கு*

*6*.*நைவேத்யம்* 
_அரை கிலோ பொங்கல்_ 
_இரண்டு கிலோ சுண்டல்_

*என இவைகள் அனைத்தும் அடங்கும்*
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
திருமகளும்மண்மகளும் ஆய்மகளும்சேர்ந்தால் * 
திருமகட்கேதீர்ந்தவாறென்கொல்? * - திருமகள்மேல் 
பாலோதம்சிந்தப் படநாகணைக்கிடந்த * 
மாலோதவண்ணர்மனம்
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷

Sunday 15 September 2024

Sri Hayagreevar Jayanthi 2024

*இளங்காடு கண்ணன் திருக்கோயிலின் ப்ரார்த்தனா மூர்த்தியாக விளங்கும் ஶ்ரீ திருமகள் உடனுறை பரிமுகப்பெருமானின் (ஶ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர்) திருஅவதார வைபவ தொகுப்பு*
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
https://photos.app.goo.gl/rsQKb5ZyKqYXLL5S9
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
வசையில்நான்மறைகெடுத்த அம்மலரயற்குஅருளி, *முன்பரிமுகமாய்* * 
இசைகொள்வேதநூலென்றிவைபயந்தவனே! எனக்குஅருள்புரியே * 
உயர்கொள்மாதவிப்போதொடுலாவிய மாருதம்வீதியின் வாய் * 
திசையெல்லாம்கமழும்பொழில்சூழ் திருவெள்ளறை நின்றானே

Wednesday 11 September 2024

*ருண விமோசன விஜய கணபதி இளங்காடு கண்ணன் திருக்கோயிலில் விநாயகர் சதுர்த்தியில் சேவை ஸாதிக்கின்றபடி*



🪷🪷🪷🪷🪷🪷🪷
*விநாயகர் அகவல்*
சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலஇசைப் பாடப்
பொன் அரை ஞாணும் பூந்துகி லாடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்,

பேழை வயிறும், பெரும்பாரக் கோடும்,
வேழ முகமும், விளங்குசிந் தூரமும்,
அஞ்சு கரமும், அங்குச பாசமும்,
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்,

நான்ற வாயும் நாலிரு புயமும்,
மூன்று கண்ணும், மும்மதச் சுவடும்,
இரண்டு செவியும், இலங்குபொன் முடியும்
திரண்ட முப்புரிநூல் திகழொளி மார்பும்

சொற்பதம் கடந்த துரிய மெய் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழம் கிகரும் மூக்ஷிக வாகன!
இப்பொழு தென்னை யாட்கொள வேண்டித்

தாயாய் எனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்க மறுத்தே,
திருந்திய முதல்ஐந் தெழுத்துத் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனிற் புகுந்து,

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறம்இது பொருள்என
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்,
கோடாயுதத்தாற் கொடுவினை களைந்தே

உவட்டா உபதேசம் புகட்டி என்செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கு முபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்,

கருவிக ளொடுங்குங் கருத்தினை யறிவித்,
திருவினை தன்னை அறுத்திருள் கடிந்து,
தலமொரு நான்குந் தந்தெனக் கருளி,
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே,

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
ஆறா தாரத் தங்குச நிலையும்!
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே,

இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்,
கடையிற் சுழுமுனைக் கபாலமுங் காட்டி,
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்,

குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்து மூண்டெழு கனலைக்
காலால் எழுப்புங் கருத்தறி வித்தே

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையுங் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டிச்,

சண்முக தூலமுஞ் சதுர்முகச் சூக்கமும்
எண்முக மாக இனிதெனக் கருளிப்,
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்,

கருத்தினிற் கபால வாயில் கட்டி,
இருத்தி முத்தி இனிதெனக் கருளி,
என்னை அறிவித் தெனக்கருள் செய்து,
முன்னை வினையின் முதலைக் களைந்தே,

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து,
இருவெளி யிரண்டிற் கொன்றிட மென்ன
அருள்தரும் ஆனந்தத் தழுத்தி, என் செவியில்

எல்லை இல்லா ஆனந் தமளித்,
தல்லல் களைந்தே, அருள்வழி காட்டிச்,
சத்தத்தி னுள்ளே சதாசிவம் காட்டிச்,
சித்தத்தி னுள்ளே சிவலிங்கங் காட்டி,

அணுவிற் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி,
வேடமும் நீரும் விளங்க நிறுத்திக்,
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி

அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கரத்தின் நிலையறி வித்துத்,
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக, விரைகழல் சரணே.

ஆவணி மூலம் திரு நட்சத்திர திருமஞ்சனம்

🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
திக்குநிறைபுகழாளன் தீவேள்விச்சென்றநாள் *
மிக்கபெருஞ்சபைநடுவே வில்லிறுத்தான்மோதிரம்கண்டு *
ஒக்குமால்அடையாளம் *அனுமான்!* என்றுஉச்சிமேல் 
வைத்துக்கொண்டு * உகந்தனளால் மலர்க்குழலாள் சீதையுமே
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷

Tuesday 3 September 2024

ருண விமோசன விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தி உற்சவம்

இளங்காடு கண்ணன் திருக்கோயில் விநாயகர் சதுர்த்தி உற்சவம் 07.09.2024 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் அதி விஷேட திருமஞ்சனம் மற்றும் திருவாராதனை நடைபெற உள்ளது அவ்வமயம் அனைத்து அன்பர்களும் தவறாது கலந்து கொண்டு கணபதியின் கருணையை பெற வேணுமாய் கேட்டுக் கொள்கின்றோம்.

Sunday 1 September 2024

உபயதாரர்களுக்கு ஓர் விண்ணப்பம்

அனுதினமும் இரண்டு காலம் திருவாராதனம் நடைபெறும் இளங்காடு கண்ணன் திருக்கோயிலுக்கென எவ்விதமான அசையும் அசையா சொத்துக்கள் இல்லை மெய்யன்பர் வழங்கும் நன்கொடைகள் மூலம் மட்டுமே நடைபெற்று வருகின்றன. 

அரசாங்கத்திற்கு உட்படாத சிறிய கிராமத்தில் இருக்கும் கண்ணபிரானின் திருக்கோயிலில் வாரந்தோறும் சனிக்கிழமை திருப்பாவை கோஷ்டி சேவை மற்றும் ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனமும் வெள்ளிகிழமை தோறும் மஹாலக்ஷ்மி ருக்குமணி பிராட்டியாருக்கு திருமஞ்சனமும் நடைபெறுகிறது.

மாதந்தோறும் ரோகிணி திருநட்சத்திரத்தில் கண்ணபிரானுக்கும் , திருவோணம் திருநட்சத்திரத்தில் ஹயக்ரீவருக்கும், உத்திரம் திருநட்சத்திரத்தில் தாயார்களுக்கும்,மூலம் திரு நட்சத்திரத்தில் ஆஞ்சநேயருக்கும் மற்றும்  சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கும் திருமஞ்சனம் நடைபெறுகின்றன.

வருடந்தோறும் சித்திரை வருடப் பிறப்பு அன்று திருமஞ்சனம் மற்றும் பஞ்சாங்க படனம் நடைபெறும்.

சித்திரை முழுநிலவு நாளில் சத்ய நாராயண பூஜை நடைபெறும்.

ஆடிப்பெருக்கு திருமஞ்சனம்.

திருவாடிப்பூரம் சிறப்பு திருமஞ்சனம்.

கருட நாக பஞ்சமி திருமஞ்சனம்.

கண்ணன் திருஅவதார வைபவம் (கிருஷ்ண ஜெயந்தி).

ஹயக்ரீவர் ஜெயந்தி.

புரட்டாசி சனிக்கிழமை தோறும் சிறப்பு திருமஞ்சனம்.

நவராத்திரி உற்சவம்.

தீபாவளி திருநாள் சிறப்பு திருமஞ்சனம்.

பாஞ்சராத்ர தீபம் சிறப்பு வழிபாடு.

தனுர் மாச பூஜை.

நாச்சியார் திருக்கோலம் மற்றும் வைகுண்ட ஏகாதசி உற்சவம்.

பொங்கல் திருநாள் புறப்பாடு.

பங்குனி உத்திரம்.

போன்ற உற்சவங்கள் என அனைத்தும் அன்பர் உபயமே ஆகையால் தாங்கள் விரும்பும் ஏதேனும் உபயத்தை ஏற்று உங்கள் வம்சம் தோறும் செய்து கண்ணபிரானின் திருவருளால் வாழிய வாழியவே!

மாதந்தோறும் புஷ்ப கைங்கர்யத்திற்கு ரூபாய்.1500/-

ஒரு திருமஞ்சனம் புஷ்ப கைங்கர்யத்திற்கு ரூபாய்.600/-

ஒரு மாத திருவிளக்கீடு கைங்கர்யத்திற்கு ரூபாய்.2000/-

ஒரு திருமஞ்சனம் உபயம் செய்ய ரூபாய்.1200/-

கட்டளை அர்ச்சனை வருடத்திற்கு ரூபாய்.750/-

நித்ய படி திருவாராதன உபயம் ஒரு மாதத்திற்கு ரூபாய்.3000/- (ஆண்டிற்கு ஒருமுறை)

தாங்கள் ஏதேனும் ஒரு உபயத்தை ஏற்க விருப்பமா

https://whatsapp.com/channel/0029VaAZdBN1NCrPQCLkQt0Z