Tuesday, 24 June 2014


உரோகிணி திருமஞ்சனம்

25.06.2014 அன்று மாலை 6.00மணியளவில் உரோகிணி திருநட்சத்திரத்தினை முன்னிட்டு இளங்காடு ஸ்ரீ கண்ணன் திருக்கோயிலில் மூலவருக்கு திருமஞ்சனம் நடைபெறும்.அனைவரும் கலந்து கொண்டு கண்ணபிரானின் திருவருளுக்கு உரியவராகுக.

 

மேலும் தகவல்களுக்கும் , திருமஞ்சன மண்டகபடி வேண்டுவோர் தொடர்புகொள்ளவும்.

 

ஜெய.கோபிகிருஷ்ணன்     9500264545

 

மன்னர்.சின்னதுரை              9942604383

Thursday, 19 June 2014

ஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள்

thanks to Dhinakaran

கோயில் என்பது தெய்வத்தின் இருப்பிடம் மட்டுமில்லை. கோயில் என்பது விஞ்ஞானபூர்வமாக மனிதனுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல நன்மைகள் செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு கிளினிக் என்றே சொல்லலாம்.
 சாஸ்திரப்படி அமைக்கப்படும் கோயில்கள், பூமியின் காந்த அலைகள் அடர்த்தியாகப் பாயும் இடத்தில் அமைகின்றன. ஊர்க்கோடியிலோ, ஊர் நடுவிலோ, மலையுச்சியிலோ எங்காயினும் கோயிலுக்கென்று இடம் அந்தக் காலத்தில் அமைக்கப்பட்டது இந்த அடிப்படையில்தான்! 

இந்த உயர்காந்த அலைகள் (ஹை மேக்னடிக் வேவ்ஸ்) அடர்ந்திருக்கும் இடத்தின் மையப்பகுதியில் கர்ப்பக்கிருகம் (மூலஸ்தானம்) அமைக்கப்படுகிறது. அதனால்தான் கர்ப்பக்கிருகத்தில் மூல விக்கிரகத்தின் அடியில், யந்திரங்கள் பதித்தார்கள். சில உயரிய மந்திரங்கள் பொறிக்கப்பட்ட செப்புத்தகடுகளே யந்திரங்கள்! பூமியின் காந்த அலைகளை செப்புத்தகடுகள் உள்வாங்கி சுற்றுப்புறத்துக்கு அதைப் பாய்ச்சுகிறது. இந்த விஞ்ஞான அடிப்படையில்தான் மின்சாரத்தைக் கொண்டுசெல்ல செப்புக்கம்பிகளை உபயோகப்படுத்துகின்றனர். கர்ப்பக்கிருகத்தைப் பிரதட்சணமாக (க்ளாக்வைஸ்) சுற்றும் பக்தர்களின் உடலில், தானாகவே இந்த காந்த சக்தி மென்மையாகப் பாய்கிறது. அடிக்கடி கோயிலுக்கு வந்து பிரதட்சணம் செய்யச் செய்ய இந்த காந்த சக்தி உடலில் கணிசமாக ஏறுகிறது.
இதனால் உடலில் பாஸிடிவ் எனர்ஜி உண்டாகிறது. இந்தச் சக்தி பூரணமாக பக்தர்களைச் சென்றடைவதற்காகவே, மூலஸ்தானம் மூன்று பக்கமும் பெரிய ஜன்னல்கள் இல்லாமல் அடைக்கப்படுகிறது. இதனால் கர்ப்பக்கிருகத்துக்கு வெளியில் நின்று தரிசிக்கும் பக்தர்களின் மேல் யந்திரத்தின் காந்த சக்தி முழுதாகப் பாய முடிகிறது. மூலஸ்தானத்தில் ஏற்றப்படும் விளக்குகள், உஷ்ண சக்தியையும் வெளிச்ச சக்தியையும் பாய்ச்சுகிறது. கோயிலில் ஒலிக்கும் மணிச் சத்தமும் பூஜை மந்திரச் சப்தங்களும் சவுண்ட் எனர்ஜி-யைத் தருகின்றன. பூஜை முடிந்ததும் பக்தர்களுக்கு வழங்கப்படும் தீர்த்தத்தில் ஏலக்காய், துளசி, கிராம்பு போன்றவை கலக்கப்படுகின்றன. இந்தப் பண்டங்கள் எல்லாமே மனித ஆரோக்கியத்துக்கு உதவுவதால், தீர்த்தம் புனிதமானதாக மட்டுமில்லாமல் உடல் வளத்துக்கு உபயோகமானதாகவும் ஆகிறது. பெருமாள் கோயிலில் மஞ்சளும், குருவாயூரப்பன் கோயிலில் சந்தனமும், சிவன் கோயிலில் திருநீறும், பொதுவாகக் குங்குமமும் பிரசாதமாகக் கொடுக்கப்படுகின்றன. இவை எல்லாமே மருத்துவ குணமுடைய வஸ்துக்களை உள்ளடக்கியது.
பெருமாள் கோயிலில் தீர்த்தத்தில் கலக்கப்படும் பச்சைக் கற்பூரம், வாசனையாகவும் வித்தியாசமான சுவையுடையதாகவும் இருக்கும். உடலில் ரத்தக்காயம் ஏற்பட்டால், நாம் உடனே காயம் செப்டிக் ஆகாமல் இருக்க தடவுகிறோமே பென்சாயின் ! அது வேறொன்றுமில்லை, பச்சைக் கற்பூரக் கலவையில் உருவாவதுதான். கர்ப்பக்கிருகத்தில் நம்மேல் பாயக்கூடிய பாஸிடிவ் காந்த அலைகளைப் பெற்றுக் கொள்வதற்காகத்தான் பல கோயில்களில் ஆண்கள் சட்டை அணியாமல் வர வேண்டும் என்று சொல்கிறார்கள். பொதுவாகப் பெண்கள் அணியும் தங்க நகைகளில் கலந்திருக்கும் செம்பின் மூலம் அவர்களுக்கும் இதே எனர்ஜி பாய்கிறது.
கோயில் பிராகாரத்தை 11 முறை, 108 முறை என்று பிரதட்சணம் செய்யும்போது, நமது உடலின் கொழுப்பு தானாக எரிந்து ஆரோக்கியம் கூடுகிறது. அந்தக் காலத்தில் கோயிலுக்குச் சென்று பிரதட்சணம் செய்ததாலேயே சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் தவிர்க்கப்பட்டன. இதோடு வேத கோஷமும், பிரார்த்தனை சுலோகங்களும் சொல்லும்போது, உடலுடன் சேர்ந்து உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகிறது.

Tuesday, 17 June 2014

திருவோண திருமஞ்சனம்

நேற்று மாலை இளங்காடு ஸ்ரீ கண்ணன் திருக்கோயிலில் திருவோண திருமஞ்சனம் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவருக்கு நடைபெற்றது.திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tuesday, 10 June 2014

ஆழ்வார்களின் தலைவன் நம்மாழ்வார் அவதார நாள்

            நம் இளங்காடு ஸ்ரீ கண்ணன் திருக்கோயிலில் நம்மாழ்வார் அவதார திருநட்சத்திரத்தினை முன்னிட்டு திருவாய்மொழி சாற்றுமுறை இன்று மாலை 7.00மணியளவில் நம் இளங்காடு ஸ்ரீ கண்ணன் திருக்கோயிலில் நடைபெறும்,இதே திருநாளில் தான் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ கோவிந்த எதிராஜ ஜீயர் ஸ்வாமிகள் நம் கண்ணன் திருக்கோயிலுக்கு எழுந்தருளினார்,நாங்கள் யாவரும் எதிர்பாரா வண்ணம் எழுந்தருளி நம் கண்ணபிரானையும் ஸ்ரீலக்ஷ்மிஹயக்ரீவரையும் சேவித்து திருவிளக்கு கைங்கர்யத்தினை ஏற்றுக்குகொண்டார்.இன்று வரை இக்கைங்கர்யம் இவருடையது. ஆக இப்பொன்நாளில் நீங்களும் வந்து திருவாய்மொழி கோஷ்டியில் கலந்து கொண்டு நம் கோபாலன் அருளையும் ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ கோவிந்த எதிராஜ ஜீயர் அருளையும் பெற வேண்டுமாய் ப்ராத்திக்கின்றோம்.

 

ஸ்ரீ நம்மாழ்வார்
 
நம்மாழ்வார் இருந்த புளியமரம்


மேதினியில் வைகாசி விசாகத்தோன் வாழியே !
வேதத்தை செந்தமழிலால் விரித்துரைத்தான் வாழியே !
ஆதிகுருவாய் அம்புவியில் அவதரித்தான் வாழியே !
அனவரதம் சேனையர்கோன் அடிதொழுவான் வாழியே!
நாதனுக்கு நாலாயிரம் உரைத்தான் வாழியே !
நன் மதுரகவி வணங்கும் நாவீறன் வாழியே !
மாதவன் பொற் பாதுகையாய் வளர்ந்தருள்வோன் வாழியே !
மகிழ் மாறன் சடகோபன் வையகத்தில் வாழியே !

ஆன திருவிருத்தம் நூறும் அருளினான் வாழியே !
ஆசிரியம் ஏழு பாட்டளித்த பிரான் வாழியே !
ஈனமற அந்தாதி எண்பத்தேழு ஈந்தான் வாழியே !
இலகு திருவாய்மொழி ஆயிரத்து ஒரு நூற்று இரண்டு
உரைத்தான் வாழியே !
வானணியும் மாமாடக் குருகை மன்னன் வாழியே !
வைகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழியே !
சேனையர்கோன் அவதாரம் செய்த வள்ளல் வாழியே !
திருக்குருகைச் சடகோபன் திருவடிகள் வாழியே !

 

 

துலுக்க நாச்சியார்(வரலாறு )

Thanks to Maalu Srirangam
இந்த ஸ்ரீரங்கத்து அரங்கன் அனைவருக்கும் பொதுவானவன். இவன் மனிதப் பிறவியில் உயர்வு, தாழ்வு பார்த்ததில்லை; ஏன், மதங்களிடையேயும் வேறுபாடு கண்டதில்லை. அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பேரருளாளன் இவன். இந்த பிரமாண்ட ஆலயத்தின் இரண்டாவது பிராகாரத்தில் அமைந்திருக்கும் ‘துலுக்க நாச்சியார்’ சந்நதி, புதிதாக வருபவர்களை வியப்பில் ஆழ்த்தும். ஆமாம், முகமதிய பெண்மணிக்கும் அருள் பாலித்தவன் இந்த அரங்கன். இதற்கு ஒரு பின்னணி உண்டு:
முகலாயர்களின் முதல் படையெடுப்பின்போது இந்த ஸ்ரீரங்கத் திருத்தலம் பெரிதும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக ரங்கநாதரின் உற்சவர் விக்ரகத்தை எடுத்துச் சென்றது பேரிழப்பு. தில்லியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செலுத்திவந்த சுல்தானிடம் அந்த விக்ரகம் கொண்டு செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. அந்த விக்ரகத்தைப் பார்த்த சுல்தானின் மகள், அதை ஒரு விளையாட்டுப் பதுமையாகக் கருதி, தன் அறையிலேயே வைத்துக் கொண்டாள். அதுமட்டுமல்ல, அந்த அரங்கனை அவள் உளமார நேசிக்கவும் ஆரம்பித்தாள்.
இவ்வாறு அரங்கன், ஆக்கிரமிப்பாளர்களுடன் செல்வதைப் பார்த்த ஒரு பெண்மணி, திருக்கரம்பனூரைச் சேர்ந்தவள். தானும் அவர்களைப் பின் தொடர்ந்தாள். அவள் மூலமாகத்தான் அரங்கன் தில்லிக்குச் சென்றுவிட்ட விவரம் இங்கிருப்போருக்குத் தெரிய வந்தது. இவ்வாறு, அரங்கனை மீட்டுக் கொண்டுவர தன்னாலியன்ற சேவையினைப் புரிந்ததால் அந்தப் பெண்மணியை ‘பின் சென்ற வல்லி’ என்று போற்றி, வைணவம் பாராட்டுகிறது.
அதை மீட்க எண்ணி தலைமை பட்டருடன் ‘பின்சென்ற வல்லி’ என்ற நாட்டியப் பெண்ணும் அவளது இசை நாட்டிய குழுவுமாக ஒரு அறுபது பேர் டில்லி சென்று அரசரை இசையில் மகிழ்வித்து அரங்கனைத் திருப்பித் தரக் கேட்கிறார்கள். தன் மகளிடம் இருப்பவர்தான் அழகிய மணவாளன் என்பதை அறிந்த மன்னர் அனுமதி தருகிறார்.
அவர்களுடைய மத உணர்வுக்கு மதிப்பளித்து அந்த விக்ரகத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுமாறு தன்
மகளிடம் சொன்னான்.

ஆனால் அரங்கனின் வடிவழகில் மனம் பறிகொடுத்திருந்த அந்தப் பெண்ணோ மிகுந்த மனவருத்தத்துடன் அதனைத் திருப்பிக் கொடுத்தாள். ஆனால், அந்த அழகனைத் தான் நேரில் காணும் பொருட்டு நேரே திருவரங்கத்திற்கே வந்துவிட்டாள். தன் கற்பனையில் அவள் உருவாக்கி வைத்திருந்த உருவம் அங்கே காணக்கிடைக்காததால் மனம் வெதும்பினாள். ஆனாலும் அந்தத் தலத்தைவிட்டுப் போக மனமில்லாமல், இங்கேயே வாழ்ந்து இறுதியில் அரங்கன் திருவடி சேர்ந்தாள். இந்தப் பெண்மணி பீபீ நாச்சியார் என்று இன்றும் போற்றப்படுகிறாள்.
ஆனால் இளவரசியிடமிருந்து பெறுவது சுலபமாயில்லை. அதனால் இசைக்குழு இளவரசியை, பாடல்கள் பாடி ஏமாற்றித் தூங்கவைத்து, அரங்கனை எடுத்துவந்து விடுகிறார்கள். இளவரசி கண்விழித்து, தன் அறையில் அரங்கனைக் காணாமல், தொலைந்ததறிந்து, பதறி நோய்வாய்ப் படுகிறாள். மன்னன் கவலையுற்று தன் படையுடன் அவளை ஸ்ரீரங்கம் அனுப்பி அரங்கனையும் எடுத்துவரப் பணிக்கிறார்.

தலைமை பட்டரோடு சிலர், தாயார் சிலைக்கும் ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்து வில்வ மரத்தினடியில் தாயாரைப் புதைத்துவிட்டு, அரங்கனோடு தலைமறைவாகி விடுகின்றனர்.
ஸ்ரீரங்கம் கோவிலிலும் அரங்கன் இல்லாமல், கோவில் மூடியிருப்பதைக் கண்டு அங்கேயே மயக்கமடைந்து இறந்தும் போகிறாள் இளவரசி. அவள் உடலிலிருந்து ஒரு ஒளி மட்டும் கோவிலுக்குள் செல்வதைச் சுற்றி இருந்தவர்கள் பார்க்கிறார்கள்.
முகமதியருக்கு உருவ வழிபாடு கிடையாதென்பதால் அரங்கன் சன்னதியிலேயே பிரகாரத்தில் கிளிமண்டபத்திற்கெதிராக அவளை ஒரு சித்திரமாக மட்டும் வரைந்து ஒரு சன்னதியில் வைத்து ‘துலுக்க நாச்சியார்’ என்ற பெயரில் வழிபடுகிறார்கள்(கிறோம்.) அதன்பிறகு அவளின் தந்தை ஏராளமான செல்வத்தைக் கோவிலுக்கு எழுதிவைத்தார்.
மதம் கடந்த அந்தக் காதலின் அங்கீகாரமாக இன்றும் அரங்கனுக்கு காலையில் லுங்கி போன்ற வஸ்திரம் அணிவித்து, அவர்கள் உணவாக ரொட்டி வெண்ணை நைவேத்தியம் செய்கிறார்கள். இந்த ரொட்டி நம்முடையது போல் இல்லாமல் லேசாக வெல்லம் கலந்து இனிப்பாக இருக்கும். மிக மிக மெல்லியதாக சுவையானதாக இருக்கும். தொட்டுக் கொள்ள வெண்ணை. திருமஞ்சன காலங்களில் வேட்டிக்குப் பதில் லுங்கி வஸ்திரம். (மற்ற கோயில்களுக்கு இல்லாத இன்னொரு சிறப்பு, அரங்கனுக்கு வெந்நீரில் மட்டுமே திருமஞ்சனம். இதன் சூட்டை மணியக்காரர் கையில் வாங்கி சரியான பதம் என்று ஆமோதித்தபின் தான் செய்ய வேண்டும். இடையில் 4, 5 தடவை கைலி மாற்றி கைலியைக் கட்டுவார்கள். சில குறிப்பிட்ட திருமஞ்சனங்களின் இறுதியில் அரையர் அந்த கைலி வஸ்திரங்களைப் பிழிவார். அந்தத் தீர்த்தத்தை எல்லோருக்கும் கொடுப்பார்கள். ஈரவாடைத் தீர்த்தம் என்று பெயர்.) வெற்றிலைக்கு எப்பொழுதுமே இஸ்லாமியர்கள் போல் வெற்றிலையின் மேல்ப்பக்கம் சுண்ணாம்பு தடவுவார்கள். மார்கழி மாத பகல்பத்து உற்சவம் பத்து நாள்களும் துலுக்க நாச்சியாரைத் தரிசிக்க(அல்லது அவர் இவரை தரிசிக்க?) அந்த சன்னதியின் முன்பான படிவழியாக ஏறித்தான் ‘அருச்சுனன் மண்டபம்’ செல்வார். அரையர், ‘ஏழைகளுக்கிரங்கும் பெருமாள்… ஆபரணங்களுக்கு அழகுசேர்க்கும் பெருமாள்… பன்னிரு நாச்சியார் பரவும் பெருமாள்…’ என்று இழுத்து இழுத்துப் பாட மெதுவாக ஆடி ஆடி அந்தப் படியில் ஏறும் அழகைக் காண கண்கோடி வேண்டும். அரங்கனது நடை ஒவ்வொரு இடத்துக்கும், நேரத்துக்கும் ஒவ்வொரு மாதிரி வித்தியாசமானது. ‘திருப்பதி வடை, காஞ்சி குடை, அரங்கர் நடை’ என்றே ஒரு சொலவடை உண்டு. எல்லாவற்றிலும் துலுக்கநாச்சியார் படியேற்றம் விசேஷமானது. ‘படியேற்ற ஸேவை’ என்றே இதற்குப் பெயர்.

Sri Kannan Temple - Elangadu: திருமஞ்சன முன்பதிவிற்கு

Sri Kannan Temple - Elangadu: திருமஞ்சன முன்பதிவிற்கு: ஸ்ரீ ஸ்ரீ கண்ணன் திருக்கோயில் ( ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் ப்ராத்தனை ஸ்தலம் ) ( நிர்வாகம் : ஸ்ரீகண்ணன் அறக்கட்டளை ) இளங்காடு . ...

திருமஞ்சன முன்பதிவிற்கு


ஸ்ரீ
ஸ்ரீ கண்ணன் திருக்கோயில்
(ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் ப்ராத்தனை ஸ்தலம்)
(நிர்வாகம்:ஸ்ரீகண்ணன் அறக்கட்டளை)
இளங்காடு.


திருமஞ்சன பட்டியல் 2014-15
.எண்
பொருள்
அளவு
தொகை
1
மஞ்சள்தூள்
200
30
2
திரவியப்பொடி
200
20
3
சந்தனம்
200
30
4
நல்லெண்ணை
1.5
45
5
பன்னீர்
200
15
6
பால்
1
20
7
தயிர்
1
20
8
தேங்காய்
2
20
9
வெற்றிலை
4
2
10
சீவல்
10
2
11
சாம்பிராணி
10
5
12
மாலை
2
75
13
நெய்
50
20
14
பட்டர் சம்பாவனை

50
15
நெய்வேத்யம்

50
கூடுதல்
404


குறிப்பு:
  • கோஷ்டி விநியோகம் உங்கள் விருப்பம்,கோஷ்டி விநியோகம் குறைந்த பட்சம் 1 படி
  • உரோகிணி,திருவோண திருநட்சத்திரங்களில் கட்டளை திருமஞ்சனம் நடைபெறும்
  • திருமஞ்சன முன்பதிவிற்கும் மேலும் தகவல் பெறவும்:
8056901601,9942604383,9500264545

Sunday, 8 June 2014

பாஞ்ச ராத்ர ஆகமம் ( பெயர்க் காரணம் )

Thanks to Maalu Srirangam

பாஞ்ச ராத்ரம் என்றால் ஐந்து இரவுகள் என்று பொருள்.

“பாஞ்ச” என்றால் சூரியன் என்ற ஒரு பொருளுண்டு.“ராத்ரி” என்றால் “இருள்” இந்த இருள் அறியாமையைக் குறிக்கும்.இந்த சூரியன் அறியாமையாகிய இருளை விரட்டவந்தபடியால் “பாஞ்சராத்ரம்”.


ஸத்ர யாகம் ஒன்றில் ஐந்து இரவுகளில் எம்பெருமானை வழிபடும் விதம் உபதேசிக்கப்பட்டதால் இப்பெயர் ஏற்பட்டதாக சதபத ப்ராஹ்மனம் என்னும் நூலில் சொல்ல
ப் பட்டுள்ளது .

(1) இராத்திரியின் குணங்களான மஹாபூதம், தன்மாத்திரை, அஹங்காரம், புத்தி, அவ்யக்தம் என்ற ஐந்தின் காரணமாக இப்பெயர் ஏற்பட்டதாக பரம ஸம்ஹிதையில் கூறப்பட்டுள்ளது.

(2) சாங்கியம், பௌத்தம், ஆர்ஹதம், காபாலம், பாசுபதம் ஆகிய பஞ்ச சாஸ்திரங்களும் இருளடைந்து போகும்படி செய்ததால் பாஞ்சராத்ரம் என்று பெயர் வந்ததாக பாத்ம தந்திரம் என்னும் நு}ல் கூறுகிறது.

(3)ஔபகாயநர், சாண்டில்யர், பாரத்வாஜர், கௌசிகர், மௌஜ்யாயநர்ஆகிய இந்த ஐந்து ரிஷிகளுக்கும் ஐந்து ராத்ரிகளில் பகவான் தனித்தனியே தன்னை ஆராதிக்கும் முறையை கற்பித்தான். ஐந்து ராத்ரிகளில் இது உபதேசிக்கப்பட்டமையால் இது பாஞ்சராத்ரம் என்றழைக்கப்படுகின்றது.

(4)விஹகேந்திர ஸம்ஹிதையில் , அனந்தன், கருடன், விஷ்வக்ஸேனர், பிரம்மா, சிவன் ஆகிய ஐவருக்கும் முறையே ஐந்து ராத்ரிகளில் உபதேசித்தார், என்கிறது.

(5) ப்ரஹ்மம், முக்தி, போகம், யோகம், ப்ரபஞ்சம் என்ற ஐந்தை அடையும் வழிகளைக் கூறுவதால் இப்பெயர் ஏற்பட்டது என்றும் கூறுவர்.

(6) பரம்பொருளின் ஐந்து நிலைகளான பர, வ்யூக, விபவ, அந்தர்யாமி, அர்ச்சை எனும் நிலைகளைப் பற்றிக் கூறுவதால் இப்பெயர் ஏற்பட்டது என்றும் கூறுவர்.

அதிலும் வ்யூஹத்தின் நிலையை விளக்குவன பாஞ்சராத்ர ஆகமங்கள் என அழகியமணவாளப்பெருமாள் நாயனார் அருளிச்செய்துள்ளார்.