Sunday, 27 July 2014
Tuesday, 8 July 2014
திருச்சந்தவிருத்தம்
அமலனாதிபிரான்
இன்று ஆனி அனுஷம் ஸ்ரீமந் நாதமுனிகள் திருநக்க்ஷத்திரம்
ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யர்களில் முதல்வரான ஸ்ரீமத் நாதமுனிகள் வீரநாராயணபுரத்தில் தான் அவதரித்தார். ( அவருக்கு பின்னர் ஆளவந்தாரும் இந்த ஊர் தான் ). ஆழ்வார்கள் அருளிச் செய்த பிரபந்தங்கள் காலப் போக்கில் மறைந்து போயின. அவைகளைத் தொகுத்த பெருமை ஸ்ரீ நாதமுனிகளையே சாரும்.
ஒரு சமயம் வீரநாராயணபுரத்தில் இருக்கும் மன்னார் என்ற பெருமாளை சேவிக்க சில ஸ்ரீவைஷ்ணவர்கள் வந்தார்கள். அவர்கள் பெருமாளைச் சேவிக்கும் போது நம்மாழ்வார் ஐந்தாம் பத்து எட்டாம் திருவாய்மொழியின் முதல் பதிகமான "ஆராவமுதே" என்ற பதிகத்தைப் பாடினர். அதைக் கேட்ட நாதமுனிகள் கடைசியில் "ஆயிரத்துள் இப்பத்தும்" என்று சேவிக்கின்றீர்களே, இந்த ப்ரபந்தம் முழுவதும் உங்களுக்குத் தெரியுமா ? என்று அவர்களிடம் கேட்க அவர்கள் எங்களுக்கு இந்த பத்துப் பாட்டு மட்டும் தான் தெரியும். என்று கூறிவிட்டார்கள்.
நாதமுனிகளுக்கு அன்று முதல் திருவாய்மொழி ஆயிரத்தையும் பெறவேண்டும் என்ற
ஆவல் குடிகொண்டது. நம்மாழ்வாரின் அவதார ஸ்தலமான திருநெல்வேலிக்குப் பக்கம்
இருக்கும் திருக்குருகூருக்கு சென்று அங்கு விசாரித்ததில் அந்த ப்ரபந்தம்
பற்றி யாருக்கும் தெரியவில்லை.
நம்மாழ்வாரின் சீடரான மதுரகவியாழ்வார் சம்பந்தம் பெற்ற பராங்குசதாசர் என்பவரிடம் "கண்ணிநுண் சிறுத்தாம்பு" என்ற ப்ரபந்தத்தை உபதேசம் பெற்று அதை பன்னீராயிரம் முறை சேவித்த பின் நம்மாழ்வார் தோன்றி திருவாய்மொழி மட்டுமல்லாமல் மற்ற ஆழ்வார்கள் அருளிச்செய்த ப்ரபந்தங்களையும் தந்தருளினார் என்கிறது குருபரம்பரை.
என் அப்பா பல முறை சொல்லிய இந்த கதையை கேட்டிருக்கிறேன். நாதமுனிகள் அவதரித்த இடத்துக்கு சென்று வரும் பாக்கியம் இவ்வளவு நாள் கழித்து போன மாதம் தான் கிடைத்தது.
சுஜாதாவின் தம்பியை கடைசி முறை பார்த்த போது, கங்கைகொண்ட சோழபுரம் பக்கம் நாதமுனிகள் ஆச்சாரியன் திருவடிகள் அடைந்த இடம் ஒன்று இருக்கிறது, என்று ஒரு சின்ன கதையும் சொன்னார். அது பின்வருமாறு
ஒரு நாள் நாதமுனிகள் வீட்டுக்கு வில்லுடன் இருவரும் ஒரு பெண்பிள்ளையும் குரங்குடன் வந்து அவர் மகளிடம் நாதமுனிகள் பற்றி விசாரித்திருக்கிறார்கள். அதற்கு அந்த பெண் அப்பா கோயிலுக்கு சென்றிருப்பதாக சொல்ல, வந்தவர்கள் சென்றுவிட்டார்கள். திரும்பிய நாதமுனிகள் மகள் சொன்னதை கேட்டு சக்கரவத்தித் திருமகனான ராம, லக்ஷ்மணர், சீதையும் ஹனுமாரும் தான் தன்னைப் பார்க்க வந்தவர்கள் என்று நம்பி அவர்களைத் தரிசிக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தில் அவர்களை தேடிக்கொண்டு சோழபுரம் வரை சென்றார். அவர் சென்ற வழியில் பூச்சரம் ஒன்றை கண்டார், அதைக் கண்டவர் "இது சீதையுடைய பூச்சரம்" என்று சொல்லியவாறு சென்றார். அந்த இடம் தற்போது "பூவிழுந்த நல்லூர்" என்று அழைக்கப்படுகிறது. மேலும் கொஞ்ச தூரம் சென்ற பின் குரங்கின் கால் தடம் மண்ணில் பதிந்திருப்பததை கண்டார். அந்த இடம் தற்போது "குறுங்குடி" என்று அழைக்கப்படுகிறது. மேலும் கொஞ்ச தூரம் சென்றவர் வழியில் சென்றவர்களை பார்த்து அடையாளங்களைச் சொல்லி "அவர்களைக் கண்டீர்களா?" என்று கேட்டார். அவர்களும் "ஆம் கண்டோம்" என்று சொல்லியுள்ளார்கள். அந்த இடமே தற்போது "கண்ட மங்களம்" என்ற ஊர். அவர்களை எங்கு தேடியும் பார்க்கமுடியாமல் அந்த இடத்திலேயே மூர்ச்சித்து பரமபதித்தார். அந்த இடம்தான் தற்போது "திருவரசு" என்று அழைக்கப்படுகிறது. இதற்கு "சொர்க்கப்பள்ளம்" என்று பெயர்.

Monday, 7 July 2014
பெரியாழ்வார் அருளிச் செய்த திருப்பல்லாண்டு
(இன்று மட்டுமாவது அனைவரும் இவ்திருப்பல்லாண்டினை தவறாது சேவிக்கவும்)
தனியன்கள்
குருமுகமநதீத்ய ப்ராஹ வேதாநசேஷாந்
நரபதி பரிக்லுப்தம் சுல்கமாதாது காம:
ச்வசுரமமர வந்த்யம் ரங்கநாதஸ்ய ஸாக்ஷhத்
த்விஜகுல திலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி
மின்னார் தடமதிள்சூழ் வில்லிபுத்தூ ரென்றொருகால்
சொன்னார் கழற்கமலம் சூடினோம் - முன்னாள்
கிழியறுத்தா னென்றுரைத்தோம்கீழ்மையினிற் சேரும்
வழியறுத்தோம் நெஞ்சமே! வந்து.
பாண்டியன் கொண்டாடப் பட்டர்பிரான் வந்தானென்று
ஈண்டிய சங்க மெடுத்தூத - வேண்டிய
வேதங்க ளோதி விரைந்து கிழியறுத்தான்
பாதங்கள் யாமுடைய பற்று.
(பாசுரங்கள் தொடக்கம்)
* பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
சேவடி செவ்விதிருக் காப்பு.
* அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய்நின் வலமார்பினில் வாழ்கின்றமங்கையும் பல்லாண்டு
வடிவார்சோதிவலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படையோர்புக்குமுழுங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே.
வாழாட்பட்டுநின்றீருள்ளீரேல் வந்துமண்ணும் மணமும் கொண்மின்
கூழாட்பட்டுநின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்
ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்களிராக்கதர்வாழ், இலங்கை
பாழாளாகப்படைபொருதானுக்குப் பல்லாண்டுகூறுதுமே.
ஏடுநிலத்திலிடுவதன் முன்னம்வந்து எங்கள் குழாம்புகுந்து
கூடுமனமுடையீர்கள் வரம்பொழிவந்தொல்லைகூடுமினோ
நாடுநகரமும்நன்கறிய நமோநாராயணாயவென்று
பாடுமனமுடைப்பத்தருள்ளீர் வந்துபல்லாண்டுகூறுமினே.
அண்டக்குலத்துக்கதிபதியாகி அசுரரிராக்கதரை
இண்டைக்குலத்தையெடுத்துக்களைந்த இருடீகேசன் தனக்குத்
தொண்டக்குலத்திலுள்ளீர்! வந்தடிதொழுது ஆயிரநாமம் சொல்லிப்
பண்டைக்குலத்தைத்தவிந்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்மினே.
எந்தைதந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படிகால்தொடங்கி
வந்துவழிவழியாட்செய்கின்றோம் திருவோணத்திருவிழவில்
அந்தியம்போதிலரியுருவாகி அரியையழித்தாவனைப்
பந்தனைதீரப்பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்றுபாடுதுமே.
தீயிற்பொலிகின்றசெஞ்சுடராழி திகழ்திருச்சக்கரத்தின்
கோயிற்பொறியாலேயொற்றுண்டுநின்று குடிகுடியாட் செய்கின்;றோம்
மாயப்பொருபடைவாணனை ஆயிரந்தோளும் பொழிகுருதி -
பாயச், சுழற்றியவாழிவல்லானுக்குப் பல்லாண்டுகூறுதுமே.
நெய்யெடைநல்லதோர்சோறும் நியதமும்மத்தாணிச்சேவகமும்
கையடைக்காயும் கழுத்துக்குப்பூணொடு காதுக்குக்குண்டலமும்
மெய்யிடநல்லதோர்சாந்தமும்தந்து என்னைவெள்ளுயிராக்கவல்ல
பையுடைநாகப்பகைக்கொடியானுக்குப் பல்லாண்டுகூறுவனே.
உடுத்துக்களைந்தநின்பீதகவாடையுடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்ததுழாய்மலர் சூடிக்களைந்தன சூடுமித்தொண்டர்களோம்
விடுத்ததிசைக்கருமம்திருதித் திருவோணத்திருவிழவில்
படுத்தபைந்நாகணைப்பள்ளிகொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.
எந்நாளெம்பெருமான் உன்தனக்கடியோமென்றெழுத்துப்பட்ட-
அந்நாளே, அடியோங்களடிக்குடில் வீடுபெற்றுய்ந்ததுகாண்
செந்நாள்தோற்றித் திருமதுரையுள்சிலைகுனித்து, ஐந்தலைய -
பைந்நாகத்தலைப்பாய்ந்தவனே உன்னைப்பல்லாண்டுகூறுதுமே.
*அல்வழக்கொன்றுமில்லா அணிகோட்டியர்கோன், அபிமானதுங்கன்
செல்வனைப்போலத் திருமாலே! நானுமுனக்குப்படிவடியேன்
நல்வகையால் நமோநாராயணாவென்று நாமம்பலபரவிப்
பல்வகையாலும் பவித்திரனே! உன்னைப்பல்லாண்டுகூறுவனே.
* பல்லாண்டென்றுபவித்திரனைப் பரமேட்டியைச், சார்ங்கமென்னும்
வில்லாண்டான்தன்னை வில்லிபுத்தூர்விட்டுசித்தன்விரும்பியசொல்
பல்லாண்டென்றுநவின்றுரைப்பார் நமோநாராயணாயவென்று
பல்லாண்டும்பரமாத்மனைச் சூழ்ந்திருதேத்துவர்பல்லாண்டே.
* இக்குறியிட்ட பாசுரங்கள்; இரண்டுமுறை சொல்லவேண்டும்
பெரியாழ்வார் திருவதார திருநட்சத்திரம்
ஆனி - சுவாதி (07.07.2014)திங்கள்கிழமை விஷ்னுசித்தர் என்றழைக்கப்படும், திருவரங்கம் பெரிய பெருமாளினின் மாமனார் பெரியாழ்வார் அவதார திருநட்சத்திரம் இன்று.இன்நன்னாளில் இளங்காடு ஸ்ரீ கண்ணன் திருக்கோயிலில் மாலை பெரியாழ்வார் பாடி பரவசப்பட்ட ஸ்ரீ கண்ணன் பிரானின் சந்நிதியில் பெரியாழ்வார் திருமொழி கோஷ்டி சேவை நடைபெறும்.அனைவரும் கலந்து கொள்ளவும்.
"பொங்கும் பரிவாலே வில்லிபுத்தூரர் பெற்றார் பெரியாழ்வார் என்னும் திருநாமம்"
குறைந்தபட்சம் தேவரீகள் திருமாளிகைகளிலாவது திருபல்லாண்டாவது அனுசந்திக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
~ ~ ~ ~ எல்லாம் கண்ணனுக்கே~ ~ ~ ~
Subscribe to:
Posts (Atom)