Tuesday, 26 August 2014

ஸ்ரீ ஹயக்ரீவ ஜெயந்தி நிகழ்சி நிரல் -2014

காலை 9.00மணி               விஷேட மஹா ஸ்நபன திருமஞ்சனம்


நண்பகல் 12.00மணி        அலங்கார தீபாராதனை,சாற்றுமறை & பிரசாதம்    வழங்கல்


மாலை 5.00மணி              விசேட புஸ்பலங்கார சேவை

 

மாலை 5.10மணி              சகஸ்ரநாம அர்ச்சனைகள்

 

மாலை 6.00மணி              தீபாராதனை,சாற்றுமறை & பிரசாதம் வழங்கல்  

ஸ்ரீ ஹயக்ரீவ ஜெயந்தி வைபவத்திற்க்கு உபயதாரர்கள் வரவேற்க்கப்படுகின்றனர்

 இளங்காடு ஸ்ரீ கண்ணன் திருக்கோயிலில் ஸ்ரீ ஹயக்ரீவர் ஜெயந்தி வருகின்ற செப்டம்பர் மாதம் 06.09.2014 சனிக்கிழமையன்று வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.இவ்வைபவம் மேலும் சிறப்படைய உபயதாரர்கள் வரவேற்க்கப்படுகின்றனர்.

கைங்கர்யங்கள்
  1. திருமஞ்சன மண்டகபடிதாரர்கள்
  2. தேன் அபிஷேக உபயதாரர்கள்
  3. ஸ்ரீ ஹயக்ரீவர் வஸ்த்ர உபயதாரர்கள்
  4. ஸ்ரீ லக்ஷ்மி  வஸ்த்ர உபயதாரர்கள்
  5. புஷ்ப உபயதாரர்கள்
  6. நெய்வேத்ய உபயதாரர்கள்
  7. சகஸ்ரநாம அர்ச்சனை  உபயதாரர்கள்
  8. கோஷ்டி விநியோக உபயதாரர்கள்  
 
மண்டகபடி மற்றும் உபயதாரர்கள் பதிவு செய்ய

ஜெய.கோபிக்ருஶ்ணன்
9500264545

பத்ம.புருஷோத்தமன்
8056901601

ஸ்ரீ ஹயக்ரீவ ஜெயந்தி - 2014

ஸ்ரீ ஹயக்ரீவ ஜெயந்தி வருகின்ற செப்டம்பர் மாதம் 06ஆம் நாள் சனிக்கிழமை இளங்காடு ஸ்ரீ கண்ணன் திருக்கோயிலில் வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது, ஸ்ரீ ஹயக்ரீவ ஹோமத்தில் பங்கு கொண்டது போல இவ்வைபவத்திலும் பங்குகொண்டு அந்த பரிமுகனின் அருளுக்கு பாத்திரராகும்படி விண்ணப்பிக்கின்றோம்.

மேலும் தகவல் பெற பூசையில் பங்கு பெற:

ஜெய.கோபிகிருஶ்ணன் 9500264545
பத்ம.புருஷோத்தமன் 8056901601

 

Friday, 8 August 2014

நித்யபடி திருவாரதன கைங்கர்ய திட்டம் இதுவரை இணைந்தோர் பட்டியல்



வ.எண்
பெயர்
ஊர்
1
ஆ.புனிதன்
இளங்காடு
2
மு.சிவானிமுரளிதரன்
இளங்காடு
3
க.மாதவன்
இளங்காடு
4
ஆ.ஸ்ரீகுரு
இளங்காடு
5
தி.கவிநயாதிருமால்
இளங்காடு
6
கு.ஆதேஷ்
இளங்காடு
7
இரா.ஸ்ரீனிவாசன்
இளங்காடு
8
சீ.கமலவேணி
இளங்காடு
9
இளங்கோ
புதுக்கோட்டை
10
சிவசங்கர்
சென்னை
11
சடகோபன்
இளங்காடு
12
இளவரசன்
இளங்காடு
13
திருமாவளவன்
இளங்காடு
14
இராதாகிருஷ்ணன்
இளங்காடு
15
ப.பிரபாகரன்
இளங்காடு
16
ஜெ.அதியமான்
இளங்காடு
17
ம.துரைமுருகன்
இளங்காடு

Friday, 1 August 2014

மகாவிஷ்ணுவின் 22 அவதாரங்கள்


SOURCE :-http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=12483


பகவான் மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்கள் பல. அதில் முக்கியமான இருபத்தியிரண்டை வியாச முனிவர் ஸ்ரீமத் பாகவதத்தில் விவரிக்கிறார். அவற்றின் சுருக்கத்தைக் காண்போம்.
பிரம்மச்சரியத்தை அனுஷ்டிக்கும் விரதத்தை விளக்கிக் காட்ட, நான்முகனை சரீரமாகக் கொண்டு அவரது புத்திரர்களாக அவதரித்தவர்கள் சனக, சனந்தன, சனத்குமார, சனத்சுஜாத (நால்வர்) அவதாரம்.
இரண்யாட்சகனால் பாதாளலோகத்திற்கு கவர்ந்து செல்லப்பட்ட பூமியை மீட்டு வெளிக்கொண்டுவர எடுத்தது வராக அவதாரம்.
பக்தியே முக்கியம் என்ற பாஞ்சராத்ர சாஸ்திரத்தை விளக்குவதற்காக எடுத்தது நாரதர் அவதாரம்.
புலனடக்கம் செய்து தவமியற்றுவது எப்படி என்பதை நிரூபிக்க எடுத்தது நர- நாராயணர்களின் அவதாரம்.
தன் தாய்க்கு நற்கதியடையும் வழிகளை உபதேசிக்க எடுத்தது கபில அவதாரம்.
அத்திரி முனிவருக்கும்
அனுசூயா தேவிக்கும்

மகனாகத் தோன்றி, பிரக லாதனுக்கும், அலர்க்கனுக் கும் உபதேசிக்க எடுத்தது தத்தாத்ரேயர் அவதாரம்.
ஒரு தேசத்தை நன்றாக ஆளும் விதத்தை ருசி என்னும் முனிவருக்கு விளக்கிக் கூற எடுத்தது யக்ஞ அவதாரம்.
ஸ்வாயம்பு மனுவின் பேரனுக்கு புத்திரனாகப் பிறந்து, தருமங்களை நிலைநாட்ட எடுத்தது ரிஷபதேவ அவதாரம்.
தவ முனிவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கொடியவனான வேனனை அழிக்க எடுத்தது பிருது அவதாரம்.
மனுவாகப் போகும் சத்தியவிரதனை ஓடத்திலேற்றி, ஹயக்கிரீவனைக் கொன்று வேதங்களை மீட்டு பிரம்மனிடம் கொடுக்க எடுத்தது மச்ச அவதாரம்.
தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்துக்காக பாற்கடலைக் கடைந்தபோது, அதைத் தாங்க கடலடியில் போய் எடுத்தது கூர்ம (ஆமை) அவதாரம்.
பாற்கடலிலிருந்து அமிர்தம் வெளிவந்த போது, அதை பாத்திரத்தில் எடுத்து தேவர் களிடம் கொடுப்பதற்காக எடுத்தது தன்வந்திரி அவதாரம்.
அசுரர்களை ஏமாற்றி தேவர்களுக்கு அமிர்தத்தைப் பங்கிட எடுத்தது மோகினி அவதாரம்.
தன் பக்தன் பிரகலாதனைத் துன்புறுத்திய இரண்ய கசிபுவைக் கொல்வதற்காக எடுத்தது நரசிம்ம அவதாரம்.
தன் பக்தனான மகாபலியிடம் மூன்றடி மண் கேட்டு அவனைப் பாதாள லோகத்திற்கு போகச் செய்ய எடுத்தது வாமன அவதாரம்.
ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகா தேவிக் கும் புதல்வனாகப் பிறந்து, 21 தலைமுறை க்ஷத்திரியர்களை அழிக்க எடுத்தது பரசுராம அவதாரம்.
வேதங்கள் மிகவும் விஸ்தாரமாய் இருந்த தால், அவற்றை நான்காக வகுத்து பரவச் செய்யும் பொருட்டும், தருமங்களை எல்லாருக் கும் உபதேசிக்கும் பொருட்டும் எடுத்தது வியாச அவதாரம்.
இராவணன், கும்பகர்ணன் மற்றும் அரக்கர்களைக் கொன்று, முனிவர்களைக் காப்பாற்றி சத்தியத்தை நிலைநாட்டுவதற்காக எடுத்தது ராம அவதாரம்.
கம்சன், சிசுபாலன், தந்த வக்ரன் முதலிய அரக்கர்கள் நீண்டநாள் வாழ்ந்ததனால், அவர்களைக் கொன்று பூமி பாரத்தைக் குறைக்க எடுத்தது பலராம- ஸ்ரீகிருஷ்ண அவதாரங்கள்.
அஹிம்சை தத்துவத்தை மறுபடியும் பூமியில் நிலைநாட்டி வேரூன்றச் செய்ய எடுத்தது புத்தர் அவதாரம்.
கலியுகத்தில் அதர்மம் மேலிட்டு தர்மம் அழியும்போது அந்த தர்மத்தை மறுபடியும் நிலைநாட்ட பகவான் எடுக்க இருப்பது கல்கி அவதாரம்.
எந்தெந்த சமயத்தில் என்னென்ன குணங்கள் குறைந்து, கெட்ட குணங்களும் அதர்ம மும் மேலிடுகின்றனவோ, அவ்வப்பொழு தெல்லாம் தோன்றி அவ்வக்குறைகளைத் தீர்த்து உலகத்தை பகவான் உய்வித்திருக்கிறார்.
இந்த அவதாரங்களில் பகவான் முழு அம்சத்துடன் அவதரித்தது ஸ்ரீகிருஷ்ண அவதாரமே. இந்த அவதாரத்தின் நோக்கம்- நடக்கும் கலியுகத்தில் இன்று வாழும் மானுடர்களுக்கும் பிறக்கப்போகும் மானுடர் களுக்கும் நல்வழிகாட்டி தர்மத்தை உபதேசிப் பதேயாகும்!