Thursday, 30 January 2014

Thirumanjanam - 31.01.2014

Today Thiruvona Thirumanjanam held on SriLakshmi Hayagreevar at Sri Kannan Temple, Elangadu

Time : 6.00PM

Would You Like or Participate this Thirumanjanam

Contact our Trustee's

Mr.M.Chinna Durai

9942604383


Mr.J.Gopikrishnan

9500264545

Mr.S.P.Purusothaman

8056901601



 

Friday, 10 January 2014

தைமுதல் திருநாள் புறப்பாடு-வையாழி

     

                          தைமுதல்திருநாளன்று தான் நம் ஸ்ரீ கண்ணன் திருக்கோயிலின் முதல் புறப்பாடு நடைபெற்றது அதனை முன்னிட்டு வருகின்ற 14.01.2014 அன்று காலை மஹா விஷேச திருமஞ்சனமும் ,மாலை 6.00மணியளவில் உற்ச்சவர் புறப்பாடு மற்றும் வையாழி சேவை நடைபெறும் அனைவரும் வருக! திருவருள் பெருக!!



     
ஆதிகிருஷ்ணன் முதல் புறப்பாட்டிற்கு எழுந்தருளியவர்
                   



ஏகாதசி தோன்றியது எப்படி? - நன்றி மாலை மலர்

"முரன்'' என்றொரு அசுரன் இருந்தான். தான் பெற்ற தவ வலிமையால் தேவர்களையும், முனிவர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான். அதோடு, எல்லா உலகங்களையும் தனதாக்கிக் கொள்ளும் ஆசையில், இந்திரலோகத்தின் மீது படையெடுத்தான். முரனை எதிர்கொள்ள முடியாத இந்திரன், சிவபெருமானிடம் சரண் அடைந்தார்.

அவரோ திருமாலிடம் செல்லச் சொன்னார். இந்திரன், தேவர்களுடனும், முனிவர்களுடனும் திருமாலிடம் சென்று சரணடைந்தார். அவர்களைக் காப்பதற்காக, இந்திரன் மற்றும் தேவாதி தேவர்கள் சூழ, முரனுடன் திருமால் போரிட்டார். தனி ஒருவனாக நின்று அனைவரையும் சிதறி ஓடச் செய்த முரன், திருமாலுடன் கடுமையாகப் போரிட்டான்.

பல ஆண்டுகள் கடுமையாகப் போர் நடந்த போதிலும் முரனை ஒன்றும் செய்ய முடியவில்லை. சங்கு சக்கரம் முதலான ஐந்து வகை ஆயுதங்களைப் பிரயோகித்தும் முரனை அழிக்க முடியவில்லை. பல ஆண்டுகள் போர் புரிந்ததால் ஏற்பட்ட களைப்பால், திருமால் இமயமலையில் உள்ள பத்ரிகாசிரமம் சென்று அங்கு அடர்ந்த மரங்களுக்கிடையே இருந்த சிம்ஹாஹி என்னும் குகையில் பள்ளி கொண்டார்.

அவரைப் பின் தொடர்ந்து வந்த முரன், குகைக்குள் உறங்கிக் கொண்டிருந்த திருமாலைக் கொல்வதற்காக, தன் உடைவாளை உருவினான். அப்போது, திருமாலின் உடலிலிருந்து தர்மதேவதை கன்னியாக வெளிப்பட்டு அவனை எதிர்த்து நின்றாள். முரன் ஆயுதங்களை எடுத்துப் போருக்குத் தயாராவதற்குள், அவனைத் தன்னுடைய பார்வையால் எரித்துச் சாம்பலாக்கினாள்.

பிறகு தர்மதேவதை மீண்டும் திருமாலிடம் வந்து சேர்ந்தாள். தூக்கம் கலைந்து எழுந்த திருமால், தர்ம தேவதையை ஆசீர்வதித்து, அவளுக்கு "ஏகாதசி'' என்று பெயரிட்டார். மார்கழி மாதம், கிருஷ்ண பட்சத்தில் (அமாவாசையில்) ஒன்றும், சுக்ல பட்சத்தில் (பவுர்ணமியில்) ஒன்றுமாக இரண்டு ஏகாதசிகள் வரும் என்றும் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு "உற்பத்தி ஏகாதசி'' என்று அருளினார்.

இந்த ஏகாதசி விரதமானது, சகல பாவங்களையும் போக்கும் வல்லமை கொண்டது. அஸ்வமேத யாகம் செய்தால் கிடைக்கும் பலன்களையும் தரக் கூடியது. கம்பம் என்ற நகரில் வைகானசன் என்ற அரசன் வாழ்ந்து வந்தான். ஒரு நாள், கனவில் அவனுடைய பெற்றோர்கள் நரகத்தில் இருப்பது போலவும், அதிலிருந்து தங்களை விடுவிக்குமாறு அவனிடம் அழுது முறையிடுவது போலவும் கண்டான்.

இதற்கு ஏதாவது பரிகாரம் உடனே செய்ய வேண்டும் என வைகானசன் முடிவு செய்தான். காட்டில் கடும் தவம் புரிந்து வந்த முனிபுங்கர் என்ற முனிவரைச் சந்தித்து அவன் ஆலோசனைக் கேட்டான். தன்னுடைய ஞானதிருஷ்டியால் உண்மையை அறிந்த முனிவர் வைகானசனிடம், "நீ, உன் மனைவி, குழந்தைகளுடன் ஏகாதசி விரதமிருந்து அதை உன் மூதாதையர்களுக்க அர்ப்பணம் செய்'' என்று ஆலோசனை கூறினார்.

அவனும், அவ்வாறே செய்ய, அதன் பலனாக, அவனுடைய பெற்றோர்கள் நரகத்திலிருந்து விடுபட்டு மைந்தனை வாழ்த்தி, சொர்க்கம் புகுந்தனர். அதனால்தான், பெற்றோரை இழந்தவர்கள், இவ்விரதத்தை மேற்கொண்டு, அதன் பலனை அவர்களுக்கு அர்ப்பணிக்கின்றனர். அமாவாசையிலிருந்தும், பவுர்ணமியிலிருந்தும் பத்தாவது நாள் தசமி.

அதற்கடுத்த நாள் ஏகாதசி. ஏகாதசிக்கு அடுத்த நாள் துவாதசி. ஏகாதசி விரதமிருப்பவர்கள், அதற்கு முன் தினமான தசமியன்று, ஒரு வேளை மட்டும் உணவு உட்கொண்டு, ஏகாதசியன்று முழுவதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். ஏகாதசியன்று இறைவனுக்கு நைவேத்தியமாகப் படைத்த பிரசாதங்கள் கிடைத்தால் கூட சாப்பிடக்கூடாது என்று புராணங்கள் கூறுகின்றன.

அதே போல, ஏகாதசி விரதம் இருப்பவரைப் பலவந்தப்படுத்தி உண்ணச் செய்பவன் நரகத்திற்குச் செல்வது உறுதி என்கின்றன. அதன்பின், ஏகாதசிக்கு மறுநாள் துவாதசியன்று, அதிகாலையில் எழுந்து நீராடி, இறைவனை வணங்கி துளசி தீர்த்தம் அருந்தி, சூரிய உதயத்திற்கு முன் பாரணை (விரதத்தை உணவு உட்கொண்டு முடித்து கொள்வது) செய்ய வேண்டும்.

பாரணையில், அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் போன்றவைகளுடன் நல்ல காய்கறிகளையும் சேர்த்து, உணவு சமைக்க வேண்டும். பாரணையை முடித்த பின், அன்று முழுவதும் உறங்கக் கூடாது. ஏகாதசியன்று, எக்காரணத்தைக் கொண்டும், துளசி இலையை பறிக்கக்கூடாது.

எனவே, தேவையான துளசி இலையை, முன்தினமே பறித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த விரதத்தை மேற்கொண்டு தேவர்களும், முனிவர்களும் திருமாலின் அருளைப் பெற்றனர். சகல சௌபாக்கியங்களோடு உடல் ஆரோக்கியமும் கிடைக்கும்.

சிவபெருமானே பார்வதி தேவிக்கு இவ்விரதத்தின் மகிமை பற்றி கூறினார் எனில், கூறுவதற்கு வேறு சிறப்பு இல்லை. கிருஷ்ண பட்சத்தில் வரும் உற்பத்தி ஏகாதசியைப் போல, சுக்ல பட்சத்தில் வரும் மற்றொரு ஏகாதசி, "மோட்ச ஏகாதசி'' என்றும் அழைப்பார்கள்.

வைகுண்ட ஏகாதசியன்று விரதமிருந்தால் வைகுண்ட பதவி கிடைக்கும் என்பதும், அன்று இயற்கை மரணமடைந்தவர்கள் வைகுண்டம் செல்வார்கள் என்பதும் நம்பிக்கை. திருமால் ஆலயங்களிலும் வைணவ ஆலயங்களிலும் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்க வாசல் எனப்படும் கதவுகள் திறக்கப்படும். அதன் வழியாக ஆலயத்திற்குள் சென்று திருமாலை வழிபட வேண்டும்.

திருமாலை வேண்டி இருக்கும் இவ்விரதத்தன்று, காலையில் எழுந்து நீராடிவிட்டு, திருமால் கோவிலுக்கோ அல்லது வீட்டிலேயோ திருமாலின் படத்தின் முன் அமர்ந்தோ, விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லி வணங்க வேண்டும்.

பின், ஏகாதசியன்று விரதமிருந்து, துவாதசியில் பாரணை செய்ய வேண்டும். அன்று, பசுக்களுக்கு அகத்திக் கீரை தருவது மிகவும் புண்ணியமாகும். மகாவிஷ்ணு, லட்சுமி கடாட்சம் ஏற்பட்டு வறுமை நீங்கிச் செல்வம் சேரும். சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.
ஏகாதசி விரதம் இருக்கும் முறை

நாளை வைகுண்ட ஏகாதசி; (11-01-2014) ஏகாதசி விரதம் இருக்கும் முறை

1.ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள இருப்பவர்கள் ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று பகலில் ஒரு_வேளை மட்டுமே உணவு சாப்பிடவேண்டும்

 2 , ஏகாதசி அன்று அதிகாலையிலேயே கண்விழித்து குளித்து விட்டு, பூஜைசெய்து விரதத்தை மேற்க்கொள்ள வேண்டும். 

3 , ஏகாதசி திதி_முழுவதும் முடிந்தவரை பூரண உபவாசம் (பட்டினியாக) இருக்கவேண்டும். குளிர்ந்த நீரை குடிக்கலாம் . ஏழு_முறை துளசி இலையை சாப்பிடலாம் . ஏகாதசி குளிர்_மாதமான மார்கழியில் வருவதனால், உடலுக்கு வெப்பம்கிடைக்க துளசியை சாப்பிடவேண்டும். பட்டினி கிடப்பதினால் , ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வுகிடைக்கிறது. குளிர்ந்த_நீர் வயிறை சுத்தமாக்குகிறது. அப்படி முழுவதும் பட்டினியாக இருக்க முடியாதவர்கள் நெய், காய்கனிகள்,பழங்கள், நிலக்கடலை, பால், தயிர் போன்றவற்றை இறைவனுக்கு படைத்து (பிரசாதமாக)_உண்ணலாம். 

4.இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களை படிப்பதும்,விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு பாடல்கள் மற்றும் ரங்கநாதர் ஸ்துதி முதலியவற்றை ஓதுவதுமாக பொழுதுபோக்க வேண்டும். கண் விழிக்கிறோம் என்றபெயரில் சினிமா,டிவி பார்க்க கூடாது.

 5. ஏகாதசிக்கு அடுத்த நாள் துவாதசி வருகிறது . துவாதசி அன்று அதி காலையில் உணவு_அருந்துவதை பாரணை என அழைக்கிறோம் . துவாதசியன்று அதி காலையில் உப்பு, புளிப்பு போன்ற சுவை இல்லாத உணவாக நெல்லிக்கனி, சுண்டைக்காய், அகத்தி கீரை இவைகளைசேர்த்து பல்லில்_படாமல் கோவிந்தா! கோவிந்தா!, கோவிந்தா!!! என மூன்று முறை_கூறி ஆல் இலையில் உணவுவிட்டு சாப்பிட்டு விரதத்தை முடிக்கவேண்டும். (அகத்தி கீரை பொரியல், நெல்லிக்காய்_துவையல், வறுத்த சுண்டைக்காய் ஆகியவை முக்கியமானவை.) துவாதசி அன்று காலையில் 21 வகையான கறி சமைத்து உண்ணவேண்டும். இதில் அகத்தி கீரை, நெல்லிக்காய், சுண்டை காய் அவசியம் இடம்பெறவேண்டும்.

 6.துவாதசியன்று வைஷ்ணவ நாட்காட்டியில்_காட்டியபடி குறிப்பிட்டநேரத்தில் ஏகாதசி விரதத்தை முடிக்கவேண்டும். விரதத்தை முடிப் தேன்பது நீரை கூட அருந்தாமல் விரதம் இருந்தவர்கள் துளசி தீர்த்தத்தையும், மற்றவர்கள் பகவானுக்கு தானிய_உணவை படைத்து (பிரசாதமாக) உண்ணலாம். ஏகாதசிவிரதத்தை கடைபிடிப்பது போன்றே விரதத்தை முடிப்பதும் மிக மிக முக்கியமாகும் இல்லாவிடில் விரதம்இருந்த முழுபலனும் கிடைப்பதில்லை. 

7.உணவு சாப்பிடும் முன் அதை பெரியோர்களுக்கு வழங்க வேண்டும். அன்று பகலில் தூங்காமல் இருக்க வேண்டும். ஏகாதசி விரதம் பத்தாவது திதியாகிய தசமி, பதினொன்றாவது திதியாகிய ஏகாதசி, பன்னிரண்டாம் திதியாகிய துவாதசி என மூன்று திதிகளிலும் மேற் கொள்ளும் விரதமாக அமைந்து உள்ளது. ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகலவிதமான சவுபாக்கியங் களையும் அடைவர். இவ்விரதத்தால் உடல் நலமும் ஆரோக்கியத்துடன் திகழும்.

ஆன்மீகப் பணியில்- S.தன சேகருக்கு நன்றி.
வைகுந்த ஏகாதசி

   வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு விஷேட திருமஞ்சனம்,நாச்சியார் திருக்கோலம்-புறப்பாடு,ஊஞ்சல் சேவை ம்ற்றும் சனிக்கிழமை அதிகாலை 4.30மணிக்கு பரமபத வாசல் திறப்பு,ஊஞ்சல் சேவை திவ்யபிரபந்த கோஷ்டி சேவை நடைபெறும்.

கால நிர்ணயம்:

10.01.2014
வெள்ளிக்கிழமை     மாலை 5.00மணி       விஷேட திருமஞ்சனம்

10.01.2014
வெள்ளிக்கிழமை     மாலை 6.00மணி       நாச்சியார் திருக்கோலத்தோடு  
                                                                                  ஸ்ரீ கண்ணபிரான் புறப்பாடு


                                        மாலை 6.15மணி          ஊஞ்சலில் எழுந்தருளல்

                                        மாலை 6.20மணி         ஸ்ரீகண்ணபிரான் திவ்ய     
                                                                                    பிரபந்தங்கள்  கேட்டருளல்

                                      மாலை 7.00மணி           அர்த்த மண்டம் எழுந்தருளல்

11.01.2014
சனிக்கிழமை           அதிகாலை 4.00மணி    திருப்பள்ளியெழுச்சி

                                       அதிகாலை 4.10மணி    மூலஸ்த்தானத்தில் இருந்து
                                                                                      புறப்பாடு

                                      அதிகாலை 4.20மணி       பரமபத வாசல் பூசை

                                     அதிகாலை 4.30மணி       பெருமால் பரமபத வாசல் வழியாக 
                                                                                      எழுந்தருளி மஹாமண்டப
                                                                                       ஊஞ்சலில் எழுந்தருளி திருப்பாவை
                                                                                       பாசுரங்கள் கேட்டருளல்.

                                     காலை 7.00மணி               பிரகார வலம் வந்து அர்த்த 
                                                                                       மண்டபம்  எழுந்தருளல்


 மேலும் தகவலுக்கு

9942604383
9500264545
8056901601

Thursday, 9 January 2014

கண்ணிநுண்சிறுத்தாம்பு
 தனியன்கள்
அவிதித விஷயாந்தரசடாரே: உபநிஷதாமுபகாநமாத்ரபோக:
அபிசகுணவசாத் ததேகசேஷி மதுரகவிர் ஹ்ருதயே மமாவிரஸ்து
வேறொன்றும்நானறியேன் வேதம் தமிழ்செய்த
மாறன்சடகோபன் வண்குருகூர் - ஏறெங்கள்
வாழ்வாமென்றேத்தும் மதுரகவியார்
எம்மை ஆள்வாரவரே யரண்.
பாசுரங்கள்
* கண்ணிநுண்நிறுத்தாம்பினால் கட்டுண்ணப் -
பண்ணியபெருமாயன், என்னப்பனில்
நண்ணித்தென்குருகூர் நம்பியென்றக்கால்
அண்ணிக்குமமுதூறும் என்நாவுக்கே.                     ---1)

நாவினால்நவிற்றி இன்பமெய்தினேன்
மேவினே;ன அவன்பொன்னடிமெய்ம்மையே
தேவுமற்றறியேன் குருகூர்நம்பி
பாவினின்னிசை பாடித்திரிவனே.                            ---2)

திரிதந்தாகிலும் தேவபிரானுடைக்
கரியகோலத் திருவுருக்காண்பன்நான்
பெரியவண்குருகூர் நகர்நம்பிக்கா -
ளுரியனாய், அடியேன் பெற்றநன்மையே.             ---3)

நன்மையால்மிக்க நான்மறையாளர்கள்
புன்மையாகக் கருதுவராதலில்
அன்னையாயத்தனாய் என்னையாண்டிடும் -
தன்மையான், சடகோபனென்நம்பியே.                ---4)

நம்பினேன் பிறர்நன்பொருள் தன்னையும்
நம்பினேன் மடவாரையுமுன்னெலாம்
செம்பொன்மாடத் திருக்குருகூர்நம்பிக்கு -
அன்பனாய், அடியேன் சதிர்த்தேனின்றே.            ---5)

இன்றுதொட்டும் எழுமையுமெம்பிரான்
நின்றுதன்புகழ் ஏத்தவருளினான்
குன்றமாடத் திருக்குருகூர்நம்பி
என்றுமென்னை இகழ்விலன் காண்மினே.          ---6)

கண்டுகொண்டென்னைக் காரிமாறப்பிரான்
பண்டைவல்வினை பாற்றியருளினான்
எண்டிசையும் அறியவியம்புகேன்
ஒண்டமிழ்ச் சடகோபனருளையே.                        ---7)

அருள்கொண்டாடும் அடியவரின்புற
அருளினான் அவ்வருமறையின் பொருள்
அருள்கொண்டு ஆயிரமின்தமிழ்பாடினான்
அருள்கண்டீர் இவ்வுலகினில்மிக்கதே.                ---8)

மிக்கவேதியர் வேதத்தினுட்பொருள்
நிற்கப்பாடி என்நெஞ்சுள்நிறுத்தினான்
தக்கசீர்ச் சடகோபனென்நம்பிக்கு, ஆட் -
புக்ககாதல் அடிமைப்பயனன்றே.                        ---9)

* பயனன்றாகிலும் பாங்கலராகிலும்
செயல்நன்றாகத்திருத்திப் பணிகொள்வான்
குயில்நின்றார்பொழில்சூழ் குருகூர்நம்பி!
முயல்கின்றேன் உன்தன்மொய்கழற்கன்பையே.--10)

 *அன்பன்தன்னை அடைந்தவர்கட்கெல்லா -
மன்பன், தென்குருகூர் நகர்நம்பிக்கு
அன்பனாய் மதுரகவிசொன்னசொல் -
நம்புவார்பதி, வைகுந்தங்காண்மினே.

( கண்ணிநுண்சிறுத்தாம்பினால் கட்டுண்ணப் -
பண்ணியபெருமாயன் என்னப்பனில்
நண்ணித்தென்குருகூர் நம்பியென்றக்கால்
அண்ணிக்குமமுதூறும் என்நாவுக்கே. )

*இக்குறியிட்ட பாசுரங்கள், இரண்டுமுறை சொல்லவேண்டும்.  

அமலனாதிப்பிரான்
 தனியன்கள்
ஆபாதசூடமநுபூய ஹரிம் சயாநம்
மத்யே கவேரதுஹிதுர் முதிதாந்தராத்மா
அத்ரஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந்தராணாம்
யோ நிச்சிகாய மநவை முநிவாஹநம் தம்
காட்டவேகண்டபாத கமலநல்லாடையுந்தி
தேட்டருமுதரபந்தம் திருமார்வு கண்டம் செவ்வாய்
வாட்டமில்கண்கள்மேனி முனியேறித்தனிபுகுந்து
பாட்டினால் கண்டுவாழும் பாணர்தாள்பரவினோமே
பாசுரங்கள்
*அமலனாதிபிரான் அடியார்க்கென்னை யாட்படுத்த
விமலன், விண்ணவர்கோன் விரையார்பொழில் வேங்கடவன்
நிமலன்நின்மலன் நீதிவானவன் நீள்மதிளரங்கத்தம்மான், திருக் -
கமலபாதமவந்து என்கண்ணிலுள்ளனவொக்கின்றவே. .     --- (1)

உவந்தவுள்ளத்தனாய் உலகமளந்தண்டமுற
நிவந்தநீள்முடியன் அன்றுநேர்ந்தநிசாசரரைக்
கவர்ந்தவெங்கணைக்காகுத்தன் கடியார்பொழிலரங்கத்தம்மான்,
அரைச்சிவந்தவாடையின்மேல் சென்றதாமெனசிந்தனையே.--(2)

* மந்திபாய் வடவேங்கடமாமலை, வானவர்கள் -
சந்திசெய்யநின்றான் அரங்கத்தரவினணையான்
அந்திபோல்நிறத்தாடையும அதன்மேலயனைப்படைத்ததோரெழில்
உந்திமேலதன்றோ அடியேனுள்ளத்தின்னுயிரே.                  ---(3)

சதுரமாமதிள்சூழ் இலங்கைக்கிறைவன் தலைபத்து -
உதிரவோட்டி, ஓர்வெங்கணையுய்த்தவன் ஓதவண்ணன்
மதுரமாவண்டுபாட மாமயிலாடரங்கத்தம்மான், திருவயிற் -
றுதரபந்தம் என்னுள்ளத்துள்நின்றுலாகின்றதே.                    ---(4)

பாரமாய பழவினைபற்றறுத்து, என்னைத்தன்
வாரமாக்கிவைத்தான் வைத்ததன்றியென்னுள்புகுந்தான்
கோரமாதவம் செய்தனன்கொலறியேன் அரங்கத்தம்மான்,
திருவாரமார்பதன்றோ அடியேனையாட்கொண்டதே.          ---(5)

துண்டவெண்பிறையன் துயர்தீர்த்தவன், அஞ்சிறைய -
வண்டுவாழ்பொழில்சூழ் அரங்கநகர்மேயவப்பன்
அண்டரண்டபகிரண்டத்து ஒருமாநிலமெழுமால்வரை, முற்றும்
உண்டகண்டம்கண்டீர் அடியேனையுய்யக்கொண்டதே.     ---(6)

கையினார்சுரிசங்கனலாழியர் நீள்வரைபோல் -
மெய்யனார், துளபவிரையார் கமழ்நீள்முடியெம் - ஐயனார்,
அணியரங்கனார் அரவினணைமிசைமேயமாயனார்
செய்யவாய் ஐயோ! என்னைச்சிந்தைகவர்ந்ததுவே.               --(7)

பரியனாகிவந்த அவுணனுடல்கீண்ட, அமரர்க் கரியவாதிப்பிரான்
அரங்கத்தமலன்முகத்துக் கரியவாகிப்புடைபரந்து
மிளிர்ந்துசெவ்வரியோடி, நீண்டவப் - பெரியவாயகண்கள்
என்னைப்பேதைமைசெய்தனவே.                                            ---(8)

*  ஆலமாமரத்தினிலைமேல் ஓருபாலகனாய்
ஞாலமேழுமுண்டான் அரங்கத்தரவினணையான்
கோலமாமணியாரமும் முத்துத்தாமமும் முடிவில்லதோரெழில்
நீலமேனிஐயோ! நிறைகொண்டதென்நெஞ்சினையே.         ---(9)

*  கொண்டல்வண்ணனைக் கோவலனாய்வெண்ணெய்
உண்டவாயன், என்னுள்ளம்கவர்ந்தானை
அண்டர்கோனணியரங்கன் என்னமுதினைக்
கண்டகண்கள்  மற்றொன்றினைக்காணாவே.                     --- (10)



அடிவரவு: கதிர்,கொழு,சுடர்,மேட்டு,புலம்,இரவி,அந்தரம்,வம்பவிழ்,ஏதம்,கடி.  *இக்குறியிட்ட பாசுரங்கள், இரண்டுமுறை சொல்லவேண்டும்.
காப்பிடல்
 தனியன்கள்
குருமுகமநதீத்ய ப்ராஹ வேதாநசேஷாந்
நரபதி பரிக்லுப்தம் சுல்கமாதாது காம: !
ச்வசுரமமர வந்த்யம் ரங்கநாதஸ்ய ஸாக்ஷாத்
த்விஜகுல திலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி !!
மின்னார் தடமதிள்சூழ் வில்லிபுத்தூ ரென்றொருகால்
சொன்னார் கழற்கமலம் சூடினோம் - முன்னாள்
கிழியறுத்தா னென்றுரைத்தோம்கீழ்மையினிற் சேரும்
வழியறுத்தோம் நெஞ்சமே! வந்து.
பாசுரங்கள்
*இந்திரனோடு பிரமன் ஈசனிமையவரெல்லாம்
மந்திர மாமலர்கொண்டு மறைந்துவராய் வந்துநின்றார்
சந்திரன் மாளிகை சேரும் சதுரர்கள் வெள்ளரை நின்றாய்!
அந்தியம்போதிதுவாகும் அழகனே! காப்பிடவராராய்  . ..... . . . . 1 .

கன்றுகளில்லம் புகுந்து கதறுகின்ற பசுவெல்லாம்
நின்றொழிந்தேனுன்னைக் கூவி நேசமேலொன்றுமிலாதாய்!
மன்றில்நில்லேலந்திப்போது மதிள்திருவெள்ளறை நின்றாய்!
நன்றுகண்டாயென்தன் சொல்லு நானுன்னைக் காப்பிடவாராய்.. 2 .

செப்போது மென்முலையார்கள் சிறுசோறுமில்லும் சிதைத்திட்டு
அப்போது நானுரைப்பப்போய் அடிசிலுமுண்டிலையாள்வாய்!
முப்போதும் வானவரேத்தும் முனிவர்கள் வெள்ளறை நின்றாய்!
இப்போது நானொன்றும் செய்யேன் எம்பிரான்! காப்பிடவாராய்...3

கண்ணில் மணல்கொடுதூவிக் காலினால் பாய்ந்தனையென்றென்று
எண்ணரும் பிள்ளைகள் வந்திட்டு இவரால் முறைப்படுகின்றார்
கண்ணனே! வெள்ளறைநின்றாய்! கண்டாரோடேதீமைசெய்வாய்
வண்ணமே வேலையதொப்பாய்! வள்ளலே! காப்பிடவராராய் ...4

பல்லாயிரவர் இவ்வூரில் பிள்ளைகள் தீமைகள் செய்வார்
எல்லாமுன்மேலன்றிப்போகாது எம்பிரான்! நீயிங்கேவாராய்
நல்லார்கள் வெள்ளறைநின்றாய்! ஞானச்சுடரே உன்மேனி
சொல்லார வாழ்த்திநின்றேத்திச் சொப்படக் காப்பிடவராராய் ...5

கஞ்சன் கறுக்கொண்டுநின்மேல் கருநிறச் செம்மயிர்பேயை
வஞ்சிப்பதற்குவிடுத்தான் என்பதோர் வார்த்தையுமுண்டு
மஞ்சுதவழ் மணிமாட மதிள்திருவெள்ளறை நின்றாய்!
அஞ்சவன் நீயங்குநிற்க அழகனே! காப்பிடவாராய். ....................6

கள்ளச்சகடும் மருதும் கலக்கழியவுதை செய்த
பிள்ளையரசே! நீ பேயைப்பிடித்து முலையுண்டபின்னை
உள்ளவாறொன்றுமறியேன் ஒளியுடை வெள்ளறை நின்றாய்!
பள்ளிகொள்போதிதுவாகும் பரமனே! கர்ப்பிடவாராய். . . . . . . . .7

இன்பமதயுயர்த்தாய்! இமையவர்கென்றுமரியாய்!
கும்பக்களிறட்டகோவெ! கொடுங்கஞ்சன் நெஞ்சினில் கூற்றே!
செம்பொன்மதிள் வெள்ளறையாய்! செல்வத்தினால்வளர்பிள்ளாய்!
கம்பக்கபாலி காணங்குக் கடிதோடிக் காப்பிடவாராய்.  . . . . . .   8

இருக்கொடு நீர்சங்கில் கொண்டிட்டு எழில் மறையோர் வந்துநின்றார்
தருக்கோல்நம்பி! சந்திநின்று தாய்சொல்லுக்கொள்ளாய் சிலநாள்!
திருக்காப்புநான் உன்னைச்சாத்த தேசுடைவெள்ளறை நின்றாய்!
உருக்காட்டுமந்திவிளக்கு இன்றுஒளிகொள்ள ஏற்றுகேன்வாராய் ..9

*போதமர்செல்வக்கொழுந்து புணர்திருவெள்ளறையானை
மாதர்க்குயர்ந்தவசோதை மகன்தன்னைக் காப்பிட்டமாற்றம்
வேதப்பயன் கொள்ளவல்ல விட்டுசித்தன் சொன்னமாலை
பாதப்பயன் கொள்ளவல்ல பத்தருள்ளார் வினைபோமே. . . . . . .  . 10

அடிவரவு: - இந்திரன், கன்று, செப்பு, கண்ணில், பல்லாயிரவர். கஞ்சன், கள்ளம், இன்பம், இருக்கு, போதமர்.

 
*இக்குறியிட்ட பாசுரங்கள், இரண்டுமுறை சொல்லவேண்டும்.   
நீராட்டம்
 தனியன்கள்
குருமுகமநதீத்ய ப்ராஹ வேதாநசேஷாந்
நரபதி பரிக்லுப்தம் சுல்கமாதாது காம: !
ச்வசுரமமர வந்த்யம் ரங்கநாதஸ்ய ஸாக்ஷாத்
த்விஜகுல திலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி !!

மின்னார் தடமதிள்சூழ் வில்லிபுத்தூ ரென்றொருகால்
சொன்னார் கழற்கமலம் சூடினோம் - முன்னாள்
கிழியறுத்தா னென்றுரைத்தோம்கீழ்மையினிற் சேரும்
வழியறுத்தோம் நெஞ்சமே! வந்து.

பாசுரங்கள்

வெண்ணையளைந்த குணுங்கும்
விளையாடு புழுதியும் கொண்டு,
திண்ணென இவ்விராவுன்னைத்
தேய்த்துக்கிடக்க நானொட்டேன்,
எண்ணெய் புளிப்பழங் கொண்டிங்
கெத்தனைபோதுமிருந்தேன்
நண்ணலரிய பிரானே‚
நாரணா நீராட வாராய் . . . . . . . . . . . ........ . . . . 1 .

கன்றுகளோடச் செவியில்
கட்டெறும்பு பிடித்திட்டால்,
தென்றிக்கெடுமாகில்
வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன்,
நின்ற மராமரம் சாய்த்தாய்‚
நீ பிறந்த திரு வோணம்
இன்று நீ நீராடவேண்டும்
எம்பிரான்‚ ஓடாதே வாராய். . . . . . . . . . . . . . 2 .

பேய்ச்சி முலையுண்ணக் கண்டு
பின்னையும் நில்லாதென்னெஞ்சம்,
ஆய்சியரெல்லாருங் கூடி
அழைக்கவும் நான் முலை தந்தேன்,
காய்ச்சின நீரொடு நெல்லி
கடாரத்தில் பூரித்து வைத்தேன்,
வாய்த்த புகழ்மணிவண்ணா‚
மஞ்சன மாட நீ வாராய். . . . . . . . . . . .. . . . . . 3 .

கஞ்சன் புணர்ப்பினில் வந்த
கடிய சகடமுதைத்து,
வஞ்சகப் பேய்மகள் துஞ்ச
வாய் முலை வைத்த பிரானே‚
மஞ்சளும் செங்கழுநீரின்
வாசிகையும் நாறு சாந்தும்
அஞ்சன மும்கொண்டு வைத்தேன்
அழகனே‚ நீராட வாராய். . . . . . . . . . . .. . . . . . 4

அப்பம் கலந்த சிற்றுண்டி
அக்காரம் பாலில் கலந்து
சொப்பட நான் சுட்டு வைத்தேன்
தின்னலுறுதியேல் நம்பி
செப்பிள மென்முலையார்கள்
சிறுபுறம் பேசிச்சிரிப்பர்
சொப்பட நீராடவேண்டும்
சோத்தம்பிரான் இங்கே வாராய் . . . . . . . . . .. . . . . . 5

எண்ணைக் குடத்தையுருட்டி
இளம்பிள்ளை கிள்ளியெழுப்பிக்
கண்ணைப் புரட்டி விழித்துக்
கழகண்டு செய்யும்பிரானே‚
உண்ணக் கனிகள் தருவன்
ஒலிகடலோத நீர்போலே
வண்ணமழகிய நம்பீ ‚
மஞ்சனமாட நீ வாராய். . . . . . . . . . .. . . . . . . . . . . 6

கறந்த நற்பாலும் தயிரும்
கடைந்துறிமேல் வைத்த வெண்ணெய்
பிறந்ததுவே முதலாகப்
பெற்றறியேனெம்பிரானே‚
சிறந்தநற்றாயலர் து}ற்றும்
என்பதனால் பிறர்முன்னே
மறந்தும் உரையாடமாட்டேன்
மஞ்சனமாட நீவாராய் . . . . . . . . . .. . . . . . . . . . . 7

கன்றினை வாலோலைகட்டிக்
கனிகளுதிரவெறிந்து
பின்தொடர்ந் தோடியோர் பாம்பைப்
பிடித்துக்கொண்டாட்டினாய் போலும்
நின்திறத்தேனல்லேன் நம்பி ‚
நீ பிறந்த திரு நன்னாள்
நன்று நீ நீராடவேண்டும்
நாரணா ஓடாதே வாராய் . . . . . . . . . .. . . . . . . . .. 8

பூணித்தொழுவினில் புக்குப்
புழுதியளைந்த பொன்மேனி
காணப் பெரிதுமுகப்பன்
ஆகிலும் கண்டார் பழிப்பர்
நாணனெத்தனையுமிலாதாய்‚
நப்பின்னை காணிற் சிரிக்கும்
மாணிக்கமே என் மணியே‚
மஞ்சனமாட நீ வாராய். . . . . . . . . . .. . . . . . . . . . .9

கார்மலி மேனி நிறத்துக்
கண்ணபிரானையுகந்து
வார்மலி கொங்கையசோதை
மஞ்சனமாட்டியவாற்றைப்
பார்மலி தொல் புதுவைக்கோன்
பட்டர்பிரான் சொன்னபாடல்
சீர்மலி செந்தமிழ் வல்லார்
தீவினையாதுமிலரே. . . . . . . . . . .. . . . . . . . . . . .10


*இக்குறியிட்ட பாசுரங்கள், இரண்டுமுறை சொல்லவேண்டும்.   







வைகுண்ட ஏகாதசி - 10ம் திருநாள் (மோகனாவதாரம்)

எல்லையில்லா அன்பைப் பொழிவதும் பெண்மையே..! அளவு கடந்த அட்டகாசத்தினை ஒழிப்பதும் பெண்மையே..! வைணவத்தில் பெண்மையின் பக்தி ஈடு இணையற்றது..! அளவற்ற காதலால் அரங்கனோடு ஜோதிர்மயமாய் கலந்தவர்கள் இருவர்.. ! ஒருவர் திருப்பாணாழ்வார் மற்றொருவர் ஆண்டாள்..!

அரங்கன் ஆசைப்பட்டு ஏற்றுக்கொள்ளும் ஒரே மாறுவேடமும் இந்தமோகனாவதாரம்மட்டுமே..! ஆழ்வார்கள் அரங்கனைத் தாயாகவும் கொண்டாடியுள்ளனர். “திருவரங்கத்தாய்என போற்றியுள்ளனர்..!

த்வமேவ மாதா பிதா த்வமேவ -
த்வமேவ பந்துஸ்ச சகா த்வமேவ,
த்வமேவ வித்யா திரவிணம் த்வமேவ
த்வமேவ ஸர்வம் மம தேவ தேவா..”

நீயே எனக்கு தாய், தந்தை, சகோதரன், பந்து, கல்வி, செல்வம் மற்றும் அனைத்துமே..!”

இவையனைத்திலும் தாயாக பாவிப்பது அவனது எல்லையற்றக் கருணையை நம்பால் பொழிய வைக்கும். ஏனெனில் நாம் எப்படி அவனை பாவிக்கின்றோமோ, அப்படி அவன் மாறும் சுபாவமுள்ளவன். (யத் பாவோ - தத் பவதி..!) தாய் - இயற்கையிலேயே பாசம் மிகுந்தவள் ஆவாள். ஆகவே அரங்கனைத் தாயாக பாவிப்பது சிறந்த பக்தி.

இத்திருநாளில் இளங்காடு ஸ்ரீ கண்ணன் திருக்கோயிலிலும் வந்து ஸ்ரீ கண்ணபிரானின் நாச்சியார் திருக்கோலத்தினை கண்ணார கண்டு , திருவடி பணிவோம்..! உய்வு பெறுவோம்..!

Saturday, 4 January 2014

காரொளி மேனியனான கண்ணன் இளங்காட்டில் சேவை ஸாதிப்பது யாவரும் அறிந்ததே. தன்னை வணங்கும் அன்பர்களின் குறைகளைப் போக்கும் பெருமானக இக்கண்ணபிரான் விளங்குகிறார்.இக்கோயிலின் வழிபாடுகள், ஆராதனைகள் அன்பர்களின் உபயங்கள் மூலம் மட்டுமே நடைபெற்று வருகின்றன.இக்கோயிலிற்கு என்று நிரந்தர வருமானம் ஏதுமில்லை.எனவே கண்ணபெருமானின் ஒருநாள் நைவேத்தியத்திற்காக ரூபாய் 1000/- மட்டும் செலுத்தி நீங்கள் விரும்பும் நாளில் தங்களின் ஆயுட்காலம் முழுவதும் கண்ணபிரானுக்கு இக்கைங்கரியத்தை செய்யலாம்.தாங்கள் குறிப்பிட்ட நாளில் ஆண்டுதோறும் அர்ச்சனை செய்து அருட்பிரசாதம் அனுப்பப்படும்.
மேலும் தகவல் பெற:

9942604383
9500264545
8056901601