Wednesday, 31 March 2021

ஏன் ஹனுமந்த வாகனம்

அனுமன் வாகனம்


ஸ்வாமி கோயில்களில் கருட வாகனம் புறப்பாடு என்பது சரி காரணம் பகவான் கருடாரூடன் - எப்போதும் கருடவாகனத்தில் பயணிப்பவன் ஆனால் இந்த ஹனுமந்த வாகனம் ஏன் ஏற்படுத்தினார்கள்

ஹனுமன் கருடனை போல் நித்யசூரி இல்லை அவன் ஒரு சிரஞ்சீவி இன்னும் பூமியில் தானே வசிக்கிறான் அப்படியிருக்க ஏன் ஹனுமந்த வாகனம் என ஒரு அன்பர் வாட்ஸ்அப் கேள்வி அனுப்பியிருந்தார்

அவருக்கு அனுப்பிய பதில் உங்களுக்காகவும்

இராமாயணத்தில் ஶ்ரீஇராம இராவண யுத்ததத்தில் ஒரு நிகழ்வு

ஶ்ரீராமனுடன் போரிட வந்த இராவணனை ஶ்ரீராமானுஜனான லக்குமணன் முதலில் எதிர்த்து போரிடுகிறான்

இராவணன் எய்யும் ஒவ்வொரு அஸ்திரத்தையும் செயலிழகச்செய்து கொண்டே வருகிறான் 

ஒரு சில நிமுடத்துளியில் லக்குமணன் விட்ட அம்பு இராவணனின் பத்து கைகளிலில் இருந்த ஆயுதங்களையும் கீழே விழச்செய்ததுடன் மேலும் தீவீரமாக ராவணனுடன் போர் புரிய தொடங்குகிறான்

ஶ்ரீலக்குமணனின் போர் திறமையை கண்டு வியந்த ராவணன் இலக்குமணனை அவ்வளவு எளிதில் அழிக்க முடியாது என கண்டு கொண்டு பிரம்மா விசேடமாக தனக்கு தந்த வேலை இலக்குமணன் மேல் ஏவுகிறான் 

தன் மார்பை நோக்கி வரும் வேலின் மகிமையை உணர்ந்த லக்குமணன் அதனை எதிர்க்காமல் விட அந்த வேல் மார்பில் பட்டு இலக்குமணன் மூர்ச்சை ஆகிறான்

இராவணன் வேகமாக வந்து இலக்குமணனை இலங்கையின் உள்ளே தூக்கி செல்ல எத்தனிக்கிறான் அவனால் துளிகூட லக்ஷ்மணன் உடலை அசைக்க முடியவில்லை பத்து கைகளை கொண்டும் முயல்கிறான் முடியவில்லை

இதை தூரத்தில் இருந்த கவனித்த ஹனுமான் இலக்குமணன் உடல் அருகே வேகமாக வந்து

ஒரு குழந்தையை நெஞ்சோடு அணைத்துக் காக்கும் தாயைப் போல இலக்ஷ்மணனை கைகலால் தூக்கி கொண்டு இராவணன் கண்முன்னாடியே வேகவேகமாக ஶ்ரீஇராமன் இருக்குமிடம் சென்றடைந்தான் 

மூர்ச்சையாகிக் கிடந்த இலக்ஷ்மணனை அவனெதிரே கிடத்தினான்

செயலற்றவனாய் மூர்ச்சையாகி கிடந்த இலக்ஷ்மணனைப் பார்த்து தன்னிலை இழந்த இராமன் சற்றைக்கெல்லாம் தன்னைச் சுதாரித்துக்கொண்டு

மிகுந்த சினம் கொண்டு தம்பியை இந்நிலைக்கு ஆளாக்கிய இராவணனை போரில் சந்திக்கப் புறப்பட்டான்

அதே நேரம் இராவணனும் ஶ்ரீஇராமனுடன் போர் புரிய எண்ணி ஶ்ரீஇராமன்முன் தனது தேரை கொண்டுவந்து நிறுத்த

அதர்மத்தையே தொழிலாக கொண்ட இராவணன் தேரில் போரிட வருகின்றபோது

தர்மத்தின் தலைவனான ஶ்ரீராமன் அவனெதிரே வெறும்தரையில் நின்று கொண்டிருப்பதை கண்ட வாயுபுத்திரன்

மனம் நெகிழவ விழிகளில் அவனறியாமல் கண்ணீர் சுரக்க

ஶ்ரீராமன் அருகே சென்று இருகரம் கூப்பி நாத்தழுதழுக்க ஶ்ரீஇராமனை பார்த்து

ஐயனே அந்த அதர்ம சொரூபமான ராவணன் ஆயிரம் குதிரை பூட்டின தேரில் உங்கள் முன் போரிட வந்துள்ளான்

அவன் எதிரில் தர்மமே வடிவமான தாங்கள் வெறும்தரையில நின்று போரிட போவது எனக்கு ரொம்ப வருத்தமாக உள்ளது

தேவரீர் அடியேனை ஒரு அல்பமான வானரம் என எண்ணாமல் பெரிய மனது கொண்டு என்னோட தோள்மேல ஏறிகொண்டு அவனுடன் போரிட வேண்டும் என வேண்ட

அனுமனின் அன்பு வார்த்தைகளைக் கேட்டு ஆனந்தித்த இராமனின் விழியோரம் நீர்துளிர்க்க

ஹே வாயுபுத்ரா எனக்கு இதவிடச் சிறந்த உபகாரம் இந்நேரத்தில் வேறென்ன இருக்கமுடியும்

அதுவும் இல்லாமல் உன்னை போன்ற அன்பான சீடன் என்னுடன் இருக்கும் போது எனக்கு ஏதுகுறை என சொல்லிக்கொண்டே அனுமனின் தோள்களில் ஏறி அமர்ந்தான் தசரத நந்தன்

அவ்வளவுதான் ஹனுமன் இக்காலத்தில் தான்னால் மனைவியின் மூலம் பெறப்பட்ட சேயை தலைமேல் பெருமையுடன் தாங்கி செல்லும் தகப்பன்மார்கள் போல் ஆனந்தத்தில் ஜொலி ஜொலித்தான் 

ஶ்ரீராமனோ மேன்மை மிகுந்த மேருமலை மேல் கம்பீரமாய் அமர்ந்திருக்கும் ஒரு ஆண்சிங்கம் போல் ஹனுமன் தோளில் காட்சி கொடுக்க

இந்தக் காட்சியை கண்ட விண்ணுலக தேவர்கள் தங்களது நல்லாசியை இருவருக்கும் பூமாரி பொழிந்து வாரி வழங்க

காலம் காலமாய் நடந்தால் குடையாக நின்றால் மரவடியாக சயனித்தால் படுக்கையாக திருமாலை தாங்குகின்ற பெருமையை கொண்டிருந்த ஆதிசேனும் 

திருமாலுக்கு ஊர்தியாய் வாயுவேக மனோவேகமாய் எப்போதும் சுமந்து செல்லும் பெரிய திருவடியான கருடனும் பொறாமைகொண்டு நாணி தலைகுனிந்தனர்

ஹனுமனின் மீதமர்ந்த ஶ்ரீஇராமனோ ஹே வானரவீரா

வெகுகாலமாக நான் தேடிய எனக்கேற்ற வாகனம் ஆசனம் இன்றே கிட்டியது என்னும் விதமாக அனுமனின் தோள்களில் வெகு பாந்தமாய் ஆரோகணித்திருந்தான்

அதே கோலத்துடன் இராவணனுடன் அதிதீவீரமாக போர் புரிந்து அவனது அரக்கர் படைகளையும் அழகிய தேரையும் பலவித அஸ்திரங்களையும் அவனின் வில்லையும் செயலிழக்கச்செய்து நிராயுத பாணியாக நிறுத்தி 

ஹே ராவணா நிராயுதபாணியான உன்னை இன்று கொல்ல மனம் ஒப்பவில்லை நீ இன்றுபோய் நாளை வேறு மீதமுள்ள படைகளுடன் வா என கூறி அனுப்பியது வரலாறு

அந்த போர்கள ஶ்ரீராமனின் வாகனமான ஹனுமந்த வாகனத்தை நினைவு கூறவே இன்றும் பூர்வர்களால் ஏற்படுத்தபட்டு இன்றும் வைணவ திவ்ய அபிமான கோயில்களில் ஹனுமந்த வாகனம் மேல் பகவான் புறப்பாடு கண்டருளபடுகிறது

எப்போதெல்லாம் ஹனுமந்த வாகனத்தில் பகவானை காண்கிறோமோ அப்போது எல்லாம் இந்த நிகழ்வு நினைவுக்கு வரவேண்டும்

ஶ்ரீராமதூதனான ஹனுமனை போல் பகவத் கைங்கர்யம் செய்ய மனம் துடிக்க வேண்டும் 

ஹனுமன் வானரமோ மானுடமோ அல்ல அவன் அளப்பறிய இயலாத சக்தி கொண்ட ஶ்ரீராம தூதன் 

எனவே ஹனுமந்தனை போல் ஶ்ரீராமனை தூக்கி கொண்டு போக இயலாவிடினும் அந்த வாகனத்தை எழுந்தருள பண்ணும் ஒரு ஶ்ரீபாதம் தாங்கியாகவாவது இருப்போம்

அனைத்து பகவத் ஶ்ரீபாதம் தாங்கும் அன்பர்களுக்கும் இக்கேள்வி பதில் சமர்ப்பணம்

ஜெய் ஶ்ரீராம்

Saturday, 27 March 2021

மட்டையடி என்னும் ப்ரணயகலஹம்

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: 
*முகவுரை*
ஸ்ரீரங்கநாதன், ஸ்ரீரங்கம் என்னும் விமானத்தோடு திருப்பாற்கடலிலிருந்து ஆவிர்ப்பவித்து, ஸத்யலோகத்தில் ப்ரஹ்மாவால் ஆராதிக்கப்பெற்று, பிறகு திருவயோத்தியில் இக்ஷ்வாகு மஹாராஜாவாலும் அவர் வம்சத்தரான சக்ரவர்த்திகளாலும் ஆராதிக்கப்பட்டு, சக்ரவர்த்தித் திருமகனிடத்திலிருந்து விபிஷண ஆழ்வானால் அடையப்பட்டு, திருக்காவேரியின் மத்தியில் சந்திரபுஷ்கரணி தீரத்தில் எழுந்தருளி, உறையூருக்கு அரசனான தர்மவர்மாவினால் ஆராதிக்கப் பட்டார். பூலோக வைகுண்டமாகிய மேற்படி ஸ்ரீரங்கத்தில் வசிக்கிற புண்யவான்கள் ப்ரஹ்மாவாலும், இக்ஷ்வாகு முதலானவர்களாலும் நடத்திவந்த பங்குனி மாதத்து சுக்லபக்ஷத்திய ஆதிப்ரஹ்மோத்ஸவத்தில் பங்குனி உத்திரம் என்கிற பெருமாள் - நாச்சியார் ப்ரணய கலகத்தைப் பெருமாளுக்கான அரையரைக் கொண்டும், நாச்சியாருக்காக நாச்சியார் பண்டாரிகளைக் கொண்டும் வாதிக்கும்படி செய்கிறார்கள். 

*அதாவது:*
பங்குனி மாதம் சுக்லபக்ஷம் உத்திர நக்ஷத்திரத்தில் சூர்யோதய காலத்தில் ஸ்ரீரங்கநாதன் திருப்பல்லக்கில் ஏறியருளி, முன்னும் பின்னும் ஸ்ரீவைஷ்ணவோத்தமர்கள் ஸ்தோத்திரம் பண்ண, திருவெண்சாமரம், திருமுத்துக்குடை முதலிய உபசாரத்தோடு ஒவ்வொரு திருமாளிகையிலும் திருக்காவனம் பரிமாறி வாழைமரம், பாக்குக்குலை, முத்து, பவழங்களால் அலங்கரித்து ரமணீயமாய் இருக்கிற உள்திருவீதி, சித்திரை வீதிகளை வலம்வந்து ஸ்ரீரங்க நாச்சியார் திருச்சன்னதிக்கு அதிகமான ப்ரேமையுடன் எழுந்தருளும்போது, பெருமாள் உறையூர் நாச்சியாரிடம் போய் வந்தாரென்று கோபத்தாலே ஸ்ரீரங்கநாச்சியார் திருக்காப்புச் சேர்த்துக்கொண்டு பூப்பந்துக்களாலும், வாழைப்பழம், பலாச்சுளை முதலியவைகளாலும் எறிவித்து, வாசலிலேயே நிறுத்திவைக்கும்போது பெருமாளுக்கும் நாச்சியாருக்கும் நடக்கிற ஸம்வாதம்.

ஸ்ரீரங்கநாதருக்கும் ஸ்ரீரங்கநாச்சியாருக்கும் நடந்துவருகிற மட்டையடி என்னும் ப்ரணயகலஹம்

*பெருமாள் அருளிச்செய்த ப்ரகாரம்*
நாம் உத்ஸவார்த்தமாக புறப்பட்டருளி திருவீதிகளெல்லாம் வலம் வந்து தேவதைகள் புஷ்பவர்ஷம் வர்ஷிக்க ப்ராமணர்களெல்லோரும் ஸ்தோத்திரம் பண்ண, இப்படி பெரிய மனோரதத் தோடே தங்களிடத்தில் வந்தால் தாங்கள் எப்போதும் எதிரே விடைகொண்டு, திருக்கை கொடுத்து உள்ளே எழுந்தருளப் பண்ணிக் கொண்டு போய் திவ்ய சிம்மாசனத்திலேறியருளப்பண்ணி, திருவடி விளக்கி திருவொத்து வாடை சாத்தி, திருவால வட்டம் பரிமாறி, மங்களஹாரத்தி கண்டருளப் பண்ணி சுருளமுது திருத்தி ஸமர்ப்பித்து இப்படி அநேக உபசாரங்களெல்லாம் நடக்குமே இன்றைக்கு நாமெழுந்தருளின இடத்திலே திருப்பல்லக்கை தொட்டுத்தள்ளி திருக்காப்புச் சேர்த்துக்கொண்டு, திருமுக மண்டலத்தைத் திருப்பிக்கொண்டு, திருச்சேடிமார்கள் கைகளாலே பந்துகளாலும் பழங்களாலும் விட்டெறிவித்து, இப்படி ஒரு காலா காலங்களிலேயும் பண்ணாத அவமானங்களையெல்லாம் இன்றைக்கு பண்ண வந்த காரியம் ஏதென்று கேட்டுவரச் சொல்லிப் பெருமாளருளிச் செய்த ப்ரகாரம்.

*நாச்சியார் அருளிச்செய்த ப்ரகாரம்*
தாம் எப்போதும் போல எழுந்தருளினதே மெய்யானால் திருக்கண்களெல்லாம் சிவந்து இருப்பானேன்? திருவதநம் வெளுத்திருப்பானேன்? திருக்குழல் கற்றைகளெல்லாம் கலைந்திருப்பானேன்? திருக்கழுத்துக்களெல்லாம் நகக்ஷதங்களா இருப்பானேன்? கஸ்தூரி, திருமண்காப்பு கரைந்திருப்பானேன்? திருமேனியெல்லாம் குங்கும பொடிகளாயிருப்பானேன்? திருவடிகளெல்லாம் செம்பஞ்சுக் குழம்பாயிருப்பானேன்? திருப்பரி வட்டங்களெல்லாம் மஞ்சள் வர்ணமாயிருப்பனேன்? இப்படிப்பட்டிருக்கிற அடையாளங்களைப் பார்த்து நாச்சியாருக்கு மிகவும் திருவுள்ளங்கலங்கி இருக்கிறது, ஆனபடியினாலே உள்ளேயிருக்கிற பேரை வெளியிலே விடவேண்டாமென்றும், வெளியிலேயிருக்கிற பேரை உள்ளே விட வேண்டாமென்றும் இப்படி ஒரு கட்டுப்பாடு பண்ணிக் கொண்டிருக்கிற சமயத்திலே, இப்போது உள்ளே விண்ணப்பஞ்செய்ய சமயமில்லை, ஆனபடியினாலே நேற்றைக்கு எழுந்தருளின விடத்திலேதானே இன்றைக்கும் எழுந்தருளச் சொல்லி நாச்சியாரருளிச் செய்த ப்ரகாரம்.

*பெருமாள் அருளிச்செய்த ப்ரகாரம்*
திருக்கண்கள் சிவந்திருப்பானேன் என்றால் நாம் செங்கோலுடைய திருவரங்கச் செல்வனாரான படியினாலே கவரி முடித்து, கலிக்கச்சை கட்டி, வல்லபமேந்தி, குதிரை நம்பிரான் மேலே ராத்திரி முப்போதும் நித்திரையின்றி ஜகத்ரக்ஷணார்த்தமாக ஜாகரூகனாய் இருந்தபடியினாலே திருக்கண்கள் சிவந்து போச்சுது. திருக்குழல் கற்றைகள் எல்லாம் கலைந்திருப்பானேன் என்றால் காற்றடித்து கலைந்து போச்சுது. கஸ்தூரி திருமண்காப்பு கரைந்திருப்பானேன் என்றால் அதிகடோரமான சூரியகிரணத்தாலே கரைந்து போச்சுது. திருவதரம் வெளுத்திருப்பானேனென்றால் அசுர நிரஸனார்த்தமாக தேவதைகளுக்காக சங்கத்வானம் பண்ணினபடியினாலே ஸ்ரீபாஞ்சசன்ய ஸ்பர்ஸத்தாலே திருவதரம் வெளுத்துப் போச்சுது. திருக்கழுத்தெல்லாம் நகக்ஷதங்களாயிருப்பானேனென்றால் அதிபிரயாசமான காடுகளிலே போகிற போது பூ, முட்கள் கிழித்தது. திருமேனியெல்லாம் குங்குமப்பொடிகளாய் இருப்பானேன் என்றால் தேவதைகள் புஷ்பவர்ஷம் வர்ஷித்த படியினாலே புஷ்ப ரேணுக்கள் படிந்தது. திருப்பரி வட்டங்களெல்லாம் மஞ்சள் வர்ணமாயிருப்பானேன் என்றால் ஸந்த்யாராகம் போலேயிருக்கிற திவ்ய பீதாம்பரமானபடியினாலே உங்கள் கண்ணுக்கு மஞ்சள் வர்ணமாகத் தோற்றுகிறது. திருவடிகளெல்லாம் செம்பஞ்சுக்குழம்பாயிருப்பானே னென்றால், குதிரை நம்பிரான் மேலேறி அங்கவடி மேல் திருவடிகளை அழுத்திக்கொண்டு போனபடியினாலே திருவடிகள் சிவந்துபோச்சுது. இப்படிப்பட்ட அடையாளமேயொழிய வேறில்லை. ஆனால், போதுகழித்து வருவானேன் என்றால் வேட்டையாடி வேர்த்து விடாய்த்து வருகிற ஸமயத்திலே திருமங்கையாழ்வானென்பான் ஒருவன் வந்து ஸர்வ ஸ்வாபஹாரத்தையும் பண்ணிக்கொண்டு போனான், அவனைச் சில நல்ல வார்த்தைகளைச் சொல்லித் திருவாபரணங்களை மீள வாங்கிக் கொண்டு போய் கருவூலத்தில் எண்ணிப் பார்க்குமிடத்தில் கணையாழி மோதிரம் காணாமல் போச்சுது. அதற்காக விடிய பத்து நாழிகைக்குப் புறப்பட்டருளி திருவீதிகளெல்லாம் வலம்வந்து கணையாழி மோதிரத்தை கண்டெடுத்துக் கொண்டு மீளவாரா நிற்கச் செய்தே தேவதைகள் பாரிஜாத புஷ்பங்கள் கொண்டு ஸேவிக்க வந்தார்கள். நாம் நம்முடைய பெண்டுகள் அன்னியிலே சூட்டுகிறதில்லை யென்று தமக்கு முன்னமே வரக்காட்டி தாமும் பின்னே எழுந்தருளினோம். ஆனபடியினாலே நாம் கொடுத்த புஷ்பத்தையும் வாங்கிச்சூட்டிக்கொண்டு நம்மையும் உள்ளே அழைக்கச் சொல்லி பெருமாளருளிச் செய்த ப்ரகாரம்.

*நாச்சியார் அருளிச்செய்த ப்ரகாரம்*
கணையாழி மோதிரம் காணாமற் போனதுவே மெய்யானால் விடிய பத்து நாழிகைக்குப் புறப்பட்டு எழுந்தருளி உறையூரிலே போய், மின்னிடை மடவார் சேரிகளெல்லாம் புகுந்து யாதோமனோரதம் அனுபவித்து அவ்வனுபவத்தாலே உண்டாயிருக்கிற அடையாளங்கள் எல்லாம் திருமேனியிலே ஸ்பஷ்டமாக தோற்றா நிற்கச் செய்யாதேயும் அவ்வடையாளங்களையும் அந்நியதாவாகச் சொல்லிக்கொண்டு நாங்கள் ஸ்த்ரீ ஜாதிகள் ஏழைகளான படியினாலே இப்படிப்பட்டிருக்கிற வஞ்ச நோக்கிகளையெல்லாம் சொல்லவந்தாரே. இப்படிப்பட்டிருக்கிற பொய்களையெல்லாம் தனக்கு சரியென போனவிடத்திலே தானே சொல்லிக்கொண்டு நேற்றைக்கு எழுந்தருளின விடத்திலே தானே இன்றைக்கும் எழுந்தருளச் சொல்லி நாச்சியார் அருளிச் செய்த ப்ரகாரம்.

*பெருமாள் அருளிச்செய்த ப்ரகாரம்*
நாமானால் உறையூரைக் கண்ணாலே கண்டதும் இல்லை; காதாலே கேட்டதுமில்லை. துஷ்டர்களாய் இருக்கிறவர்கள் உம்மனதுக்கு சரிப்போனபடி சொன்னால் நீயும் அந்த வார்த்தைகளைத்தானே கேட்டுக்கொண்டு, நம்மை பண்ணாத அவமானங்களெல்லாம் பண்ணலாமா? நீங்கள் ஸ்திரீகளானபடியினாலே முன்பின் விசாரியாமல் படிக்கு அவமானங்களை பண்ணினீர்களாமென்கிற அவமானம் உங்களுக்கேயொழிய நமக்குத் தேவையில்லை. ஆனபடியினாலே நாம் கொடுத்த புஷ்பத்தையும் வாங்கிக்கொண்டு நம்மையும் உள்ளே அழைக்கச் சொல்லி பெருமாள் அருளிச் செய்த ப்ரகாரம்.

*நாச்சியார் அருளிச்செய்த ப்ரகாரம்*
முந்தா நாள் அழகியமணவாளப் பெருமாள் வேட்டையாடி, வேர்த்து, விடாய்த்து எழுந்தருளினார் என்று அடியோங்கள் அதிப்ரீதியுடனே எதிரே விடை கொண்டு திருக்கை கொடுத்து, திருஒத்து வாடை சாத்தி, திருவடிகள் விளக்கி, மங்களஹாரத்தி கண்டருளப்பண்ணி சுருளமுது திருத்தி சமர்ப்பித்து உள்ளே எழுந்தருளப் பண்ணிக் கொண்டு போய் திவ்ய சிம்மாஸனத்தில் எழுந்தருளப்பண்ணி திருவடி விளக்கி, திருவொத்து வாடை சாத்தி, திருவால வட்டம் பறிமாறினோம். அப்போ அதிக சிரமத்தோட எழுந்தருளியிருந்தார். ஆனால் இளைப்பே வென்னு வெந்நீர் திருமஞ்சனம் கொண்டுவந்து ஸமர்ப்பிவித்தோம். அதுவும் நீராடினது பாதியும், நீராடாதது பாதியுமாகே எழுந்தருளியிருந்தார். ஆனால் இளைப்போ என்று திருவரைக்குத் தகுதியான வல்லி, நுன்னின, சுன்னவாடையான திவ்ய பீதாம்பரம் கொண்டு வந்து ஸமர்ப்பித்தோம். அதையும் எப்போதும் போல சாத்திக் கொள்ளாமல் ஏதோ ஒருவிதமாய் சாத்தியருளினார். ஆனால் இளைப்போ வென்னும் கஸ்தூரித் திருமண்காப்பு சேர்த்து ஸமர்ப்பித்தோம். அதுவும் எப்போதும் போலே சாத்திக்கொள்ளாமல் ஏதோவிதமாய் சாத்தியருளினார். ஆனால் இப்போவென்று கஸ்தூரி திருமண்காப்பு சேர்த்து சமர்ப்பிவித்தோம். அதுவும் எப்போதும்போல சாத்திக்கொள்ளாமல் திருவேங்கடமுடையான் திருமண்காப்பு போல கோணாமாணாவென்று சாத்தியருளினார். ஆனால் இளைப்போ என்று தங்க பள்ளயத்தில் அப்பங்கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலில் கலந்து வர்க்க வகைகள் முதலானதுகளையும் சேர்த்து ஸமர்ப்பித்தோம். அதுவும் அமுது செய்தது பாதியும், அமுது செய்யாதது பாதியுமாகத்தானே எழுந்தருளியிருந்தார். ஆனால் இளைப்போ என்று திருவனந்தாழ்வானைத் திருப்படுக்கையாகவும் திருமெத்தையாகவும் விரித்து அதன் மேலே பெருமாளை திருக்கண் வளரப்பண்ணி அடியோங்கள் அதிப்ரீதியுடனே திருவடிகளைப் பிடித்துக் கொண்டிருந்தோம். தாம் வஞ்சக கள்வர் ஆனபடியினாலே எங்களுக்கு ஒரு மாயா நித்திரையை உண்டாக்கி, எங்கள் தாழ் எடுத்து எங்கள் கருகூலம் திறந்து, எங்கள் ஸ்திரீதனங்களான அம்மானை, பந்துகழஞ்சி, பீதாம்பர ஆபரணாதிகள் அனைத்தையும் கைக்கொண்டு, இன்னவிடத்துக்கு எழுந்தருளுகிறோம் என்று சொல்லாதபடிக்குத்தானே எழுந்தருளியிருந்தார். அந்த உத்தரக்ஷணமே அடியோங்கள் அச்சமுடன் திடுக்கிட்டு எழுந்திருந்து திருப்படுகையைப் பார்க்குமிடத்தில் பெருமாளைக் காணாமையாலே கைநெரித்து வாயடித்து அணுகவிடும் வாசற்காப்பாளரை அழைத்துகேட்கும் அளவில் அவர்கள் வந்து ஸ்திரீதனங்களான அம்மானை, பந்துகழஞ்சி, பீதாம்பர ஆபரணாதிகள் அனைத்தையும் கைக்கொண்டு இன்னவிடத்துக்கு எழுந்தருளுகின்றோம் என்று சொல்லாதபடிக்குத்தானே எழுந்தருளினார் என்று சொல்ல வந்தார்கள். அந்த உத்திரக்ஷணமே எங்கள் அந்தரங்க பரிஜனங்களாயிருக்கிற திருச்சேவடிமார்களை அழைப்புவித்தோம். கேட்குமளவில் அவர்கள் வந்து அடியைபிடித்து அடிமிதித்துக் கொண்டு போனவிடத்திலே உறையூரிலே கொண்டு போய்விட்டது. அங்கே பார்க்குமிடத்தில் தான் மற்றொருத்தியை மச்சினி என்று முறைமை சொல்லி மடியைப்பிடத்தும், கச்சணி பொன்முலை கண்ணால் விழித்ததும், கனிவாய்க்கொடுத்ததும், கையில் நகக்குறி மெய்யாகமானதும் கார்மேனியெங்கும் பசுமஞ்சள் பூத்ததும், கருப்பந்தோட்டத்திலே யானையானது சஞ்சரிக்குமாபோலே தேவரீர் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறீர் என்றும் நாங்கள் உசிதமாகப் போகவிட்ட தூதர்கள் ஓடிவந்து அங்க அடையாளம் உள்ளபடி வந்து சொன்னார்கள். ஐயா! உம்மாலே எங்கள் மனது உலைமெழுகாய் உருகுகிறது. இந்த வேளையிலே இங்கே ஒன்றும் சொல்லாதேயும் போம்போமென்று நாச்சியார் அருளிச் செய்த ப்ரகாரம்.

*பெருமாள் அருளிச்செய்த ப்ரகாரம்*
லோகத்திலே ஒருவருக்கொருவர் ஸம்சயப் பட்டால் அந்த ஸம்சயம் ஒரு ப்ரகாரத்தாலும் தீராமற் போனால் ப்ரமாணத்தாலே தீர்த்துக் கொள்வார்கள். அந்தப்படி நாம் ப்ரமாணம் பண்ணித் தருகிறோம்! நாம் தேவாதி தேவனான படியினாலே தேவதைகளைத் தாண்டித் தருகிறோம்! ஸமுத்திரத்திலே மூழ்குகிறோம்! அக்னி ப்ரவேசம் பண்ணுகிறோம்! பாம்புக் குடத்திலே கையிடுகிறோம்! மழுவேந்துகிறோம்! நெய்யிலே முழுகுகிறோம்! இப்படிப்பட்ட ப்ரமாணங்களையானாலும் வாங்கிக் கொண்டு நாம் கொடுத்த புஷ்பத்தையும் வாங்கி சூட்டிக்கொண்டு நம்மையும் உள்ளே அழைக்கச் சொல்லி பெருமாள் அருளிச்செய்த ப்ரகாரம்.

*நாச்சியார் அருளிச்செய்த ப்ரகாரம்*
லோகத்திலே ஒருவருக்கொருவர் ஸம்சயப்பட்டால் அந்த ஸம்சயம் ஒரு ப்ரகாரத்தாலும் தீராமல் போனால், ப்ரமாணத்தாலே தீர்த்துக் கொள்ளுவார்கள் என்றும், லோகத்திலே ப்ராஹ்மணனுக்கும் ப்ராஹ்மணனுக்கும் வாக்குவாதம் வந்தால் ப்ராஹ்மணன் ப்ராஹ்மணனை தாண்டிக் கொடுப்பார்கள் என்றும், தாம் தேவாதி தேவனான படியினாலே தேவதைகளைத் தாண்டித் தருகிறோமென்று சொல்லவந்தாரே! அந்த தேவதைகள் தேவரீருடைய திருவடிகளை எப்போ காணப்போகிறோம்! என்று அனேக கற்பகம் தோறும் சதா ப்ரார்த்தித்துக் கொண்டிருக்கிறவர்களை வலுவிலே தாண்டித் தருகிறோமென்றால் வேண்டா மென்பார்களா? சமுத்திரத்திலே மூழ்கிறோமென்று சொல்லவந்தாரே! ப்ரளய காலத்திலே ஸகல லோகங்களையும் தம்முடைய திருவயிற்றிலே வைத்து ரக்ஷித்துக்கொண்டு ஒரு ஆல இலைத் தளிரிலே திருக்கண்வளர்ந்தருளின தமக்கு ஸமுத்திரத்திலே முழுகிறது அருமையா? அக்னிப்பிரவேசம் பண்ணுகிறோம் என்று சொல்லவந்தீரே! ப்ரும்மாவுக்காக உத்திர வேதியிலே ஆவிர்பவித்த தமக்கு அக்னியிலே மூழ்கினால் அக்னி சுடுமா? பாம்புக் குடத்திலே கை இட்டுத் தருகிறோமென்று சொல்ல வந்தீரே! சென்றாற் குடையாம், இருந்தாற் சிங்காசனமாம் யென்று ஸதாஸர்வகாலம் திருவநந்தாழ்வான்மேலே திருக்கண்வளர்ந்திருக்கிற தமக்குப் பாம்புக் குடத்திலே கையிட்டால் பாம்பு கடிக்குமா? மழுவேந்துகிறோம் என்று சொல்லவந்தாரே! கோடி சூர்யப்ரகாசமான திருவாழியாழ்வானை ஸதா திருக்கையிலே தரித்துக்கொண்டிருக்கிற தமக்கு அப்ரயோஜகமாய் இருக்கிற இரும்பை மழுவாக ஏந்துகிறது அருமையா? நெய்க் குடத்திலே கையிடுகிறோ மென்று சொல்லவந்தாரே! கிருஷ்ண அவதாரத்திலே பஞ்சலக்ஷம் குடியிலுள்ள வெண்ணையுண்ட தமக்கு நெய்குடத்திலே கையிடுவது அருமையா? இப்படிப்பட்டிருக்கிற பரிஹாஸ ப்ரமாணங்களை எல்லாம் தமக்கு சரிப்போன இடத்திலேதானே பண்ணிக்கொடுத்துக்கொண்டு தாமும் இன்னைக்கு அங்கேயே தானே எழுந்தருளச் சொல்லி நாச்சியார் அருளிச் செய்த ப்ரகாரம்.

*பெருமாள் அருளிச் செய்த ப்ரகாரம்*
நாம் உத்ஸவார்த்தமாகப் புறப்பட்டருளி திருவீதிகள் எல்லாம் வலம்வந்து தேவதைகள் புஷ்ப வர்ஷம் வர்ஷிக்க, ப்ராஹ்மணர்கள் எல்லோரும் ஸ்தோத்திரம் பண்ண, இப்படி பெரிய மநோரதத்தோடே தங்களிடத்தில் வந்தால் தாங்கள் எப்போதும் போல் ஆதரியாமற்படிக்கு அபராதங்களைப் பண்ணினோமென்றும் நாமானால் உறையூரைக் கண்ணாலே கண்டதுமில்லை. காதாலே கேட்டதும் இல்லை என்று சொன்னோம். அத்தை அப்ரமாணமாக ஒப்புக்கொண்டீர். ஆனால் ப்ரமாணமானாலும் பண்ணித் தருகிறோமென்று சொன்னோம். அத்தைப் பரிஹாஸம் பண்ணினீர். இப்படி நாம் எத்தனை சொன்னபோதிலும் அத்தனையும் அந்யதாவாகக் கொண்டு கோபத்தால் திருவுள்ளங் கலங்கித் திருமுகமண்டலம் கறுத்துத் திருக்கண்கள் சிவந்து இப்படி எழுந்தருளி இருந்தால் நமக்கென்ன வேறு கதி இருக்கிறது? அழகிய மணவாளப் பெருமாள் ஸ்ரீரங்கநாச்சியார் சந்நிதி வாசலிலே தள்ளுபட்டுக் கொண்டிருக்கிறாரென்கிற அவமானம் உங்களுக்கேயொழிய நமக்குத் தேவையில்லை. ஆனபடியினாலே நாம் கொடுத்த புஷ்பத்தையும் சூட்டிக் கொண்டு நம்மையும் உள்ளேயழைக்கச் சொல்லி பெருமாளருளிச்செய்த ப்ரகாரம்.

*நாச்சியார் அருளிச் செய்த ப்ரகாரம்*
தாம் பண்ணினதெல்லாம் தாறுமாறுமாக பண்ணிப்போட்டு தங்கள் வாசலிலே தள்ளுப்பட்டுக் கொண்டிருக்கிற அவமானம் எங்களுக்கே ஒழிய தமக்கு தேவையில்லையென்று சொல்ல வந்தாரே. இதுகளையெல்லாம் இப்படி வருஷத்திற்கொருதரம், வழிமாராட்டயாய் யெழுந்தருளி, தமக்கு சரிபோனபடி நடந்துபோட்டு, பின்னையும் இங்கே தானே வந்து, நாமானால் ஒன்றும் அறியோமென்றும், நாம் அத்தனை அபராதங்களை பண்ணினபோதிலும் பொருத்தருள வேணுமென்றும், இப்படிப்பட்டிருக்கிற ஆகாத்யங்களை பண்ணிக்கொண்டு வருகிறார். நாமானால் பொருக்கிறதில்லை. இதுகளையல்லாம் நம்முடைய அய்யா மகிழ்மாறன் நம்மாழ்வார் வந்து மங்கள வசனமாகச் சொன்ன வாய் மொழியினாலே, பொருத்தோம். பொருத்தோம். பெருமாளை உடனே உள்ளே எழுந்தருளப்பண்ணச்சொல்லி நாச்சியார் அருளிச்செய்த பிரகாரம்.

ப்ரணய கலகம் முடிந்தது. உடனே ஸ்ரீரங்கநாதன் ஸ்ரீரங்கநாச்சியாருடன் ஒரே ஸிம்ஹாசனத்திலெழுந்து அருளி சகல ஜனங்களுக்கும் ஸேவை ஸாதித்தருளுகின்றார்.
*ப்ரணய கலஹம் முற்றிற்று.*

Friday, 26 March 2021

இன்றைய பங்குனி மாத சுக்ர வாரம் த்ரயோதசி திதி


கோபுர தரிசனம் கோடி புண்ணியம்
திருச்சானூர் ஸ்ரீ பத்மாவதி தாயாரின்
திருவடிகளே சரணம்.

மஹா லஷ்மி கடாஷம் உண்டாகும்

ஓம் மஹா தேவ்யை ச வித்மஹே
விஷ்ணு பத்நீச தீமஹி
தந்நோ லஷ்மி ப்ரசோதயாத்
  
108 முறை

ஜெய் ஸ்ரீராம்
ஸர்வம் கிருஷ்ணார்பணமஸ்து.

Thursday, 25 March 2021

ஸ்ரீ_பஞ்சாயுத_ஸ்தோத்ரம்

⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
        🔥  #ஸ்ரீ_பஞ்சாயுத_ஸ்தோத்ரம்   🔥
🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊
🍁 இந்த ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்யுங்கள். நல்லதே நடக்கும். 
⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡

🌕 திருமாலின் திருக்கரங்களிலுள்ள பஞ்ச ஆயுதங்கள் உங்களுக்குத் தேனான வாழ்வு கிட்டச் செய்யும். திருமாலின் திருவருளும், அதனால் திருமகளின் அருளும் உங்கள் இல்லம் வந்து சேரும்.
குடும்பத்தில் நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் நிலைக்கும். எதிரிகள் சக்தியிழப்பர்.

🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋

❄1) சுதர்சனம் - சக்கரம்
###########################

❄ ஸ்புரத் ஸஹஸ்ரார ஸுகாதி தீவ்ரம்
ஸுதர்ஸநம் பாஸ்கர கோடி துல்யம்மி
ஸுரத்விஷாம் ப்ராணவிநாஸி விஷ்ணோ:
சக்ரம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே! ❄

❄ தீச்சுடரைப் போல பல மடங்கு ஒளி விட்டு பிரகாசிப்பதும்,
வல்லமை பொருந்தியதும், 
கோடி சூரியர்களின் கதிர்கள் ஒன்றாகத் திரண்டது போலப் பிரகாசமானதும், அசுரர்களை நாசப்படுத்துவதுமான ஸ்ரீவிஷ்ணு பகவானின் சுதர்சனம் என்னும் சக்கரத்தைப் போற்றி வணங்குகிறேன்.

❄❄❄❄❄❄❄❄❄❄❄❄❄❄❄❄❄

🎡 2) பாஞ்சஜன்யம் - சங்கு 🎡
##################################

🎡 விஷ்ணோர் முகோத்தாநில பூரிதஸ்ய
யஸ்யத்வநிர் தானவ தர்ப்பஹந்தா:
தம் பாஞ்ச ஜன்யம் சசி கோடி சுப்ரம்
சங்கம் ஸதா அஹம் சரணம் ப்ரபத்யே!  🎡

மகாவிஷ்ணுவின் பவளச் செவ்வாய் வழியே வெளி வரும் காற்றினால் ஒலி எழுப்பப்படுவதும், தனது கம்பீர ஓசையால்
அசுரர்களுக்கு அச்சத்தைக் கொடுக்கக் கூடியதும், வெண்மை வண்ணத்தில் ஒரு கோடி நிலவுகளின் ஒளிக்கு ஈடானதுமான பாஞ்சஜன்யம் என்ற சங்கை எப்போதும் சரணமடைகிறேன்.

🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡

🌕 3) கௌமோதகம் - கதை 🌕
##################################

🌕 ஹிரண்மயீம் மேரு ஸமான ஸாரம்
கௌமேதகீம் தைத்ய குலைக ஹந்த்ரீம் வைகுண்ட வாமாக்ரகரா பிம்ருஷ்டாம்
கதாம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே 🌕

பொன்மயமான மேரு மலையைப் போன்ற ஒளியுள்ளதும், அசுரர்களின் குலத்தையே அழிக்கக் கூடியதும், வைகுண்ட வாசனின் கைநுனிகளின் ஸ்பரிச பாக்யம் பெற்றதான கௌமோதகம் என்ற கதையை சதா சரணமடைகிறேன்.

🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕

⚡ 4) நந்தகம் - வாள் ⚡
###########################

⚡ ரக்ஷோ ஸுராணாம் கடிநோக்ர கண்டச்
சேதக்ஷரச் சோணித திக்ததாரம்
தம் நந்தகம் நாம ஹரே ப்ரதீப்தம்
கட்கம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே ⚡

கொடிய அரக்கர்களின் கழுத்தைத் துண்டிப்பதால் பிரவாகிக்கும் ரத்தத்தில் மூழ்கி, செந்நிற ஒளியுடன் காட்சி தரும் நந்தகம் எனும் பெயருடைய வீர வாளை என்றும் சரணமடைகிறேன்.

⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡

🏹  5) சார்ங்கம் - வில்  🏹
#############################

🏹 யஜ்ஜ்யாநீ நாத ஸ்ரவபணாத் ஸுராணாம்
சேதாம்ஸி நிர்முக்த பயாநி ஸத்ய:
பவந்தி தைத்யாஸநி பர்ணவர்ஷ
ஸார்ங்கம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே 🏹

🏹 தேவர்களின் மனதிலிருந்து அச்சத்தைப் போக்குவதும், எதிரிகளை அச்சுறுத்துவதுமான நாணோசை உடையதும், மின்னல் ஒளி வேகத்தில் அம்புகளை மாரியாகப் பொழியக்கூடிய வல்லமை மிக்கதுமான சார்ங்கம் என்னும் வில்லை எப்போதும் சரணமடைகிறேன்.

🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹

🍊 இமம் ஹரே: பஞ்சமஹாயுதாநாம
ஸ்தவம் படேத் யோ அநுதிநம் ப்ரபாதே
ஸமஸ்தது:காநி பயாநிஸத்ய:
பாபாநி நஸ்யந்தி ஸுகாநி ஸந்தி 🍊

உயர்வானவையும் பரந்தாமனின் கரங்களில் இருக்கும் பாக்யத்தைப் பெற்றவையுமான பஞ்ச மகா ஆயுதங்களைப் போற்றும் இந்தத் துதியை தினந்தோறும் படித்து வணங்குபவர்களும் அதைக் கேட்பவர்களும் எல்லா துன்பங்களிலிருந்தும் விடுபட்டு சகல பாக்யங்களையும் அடைகின்றனர்.

🍊 வநேரணே சத்ரு ஜலாக்நிமத்யே
யத்ருச்சயா பத்ஸு மஹாபயேஸுமி
இதம் படன் ஸ்தோத்ர நாகுலாத்மா
ஸுகிபவேத் தத்க்ருத ஸர்வரக்ஷ: 🍊

வனங்களிலும் யுத்த யூமியில் சத்ருக்களின் மத்தியிலும், எதிர்பாரா விபத்துகளின் போதும், அதீத பயத்தின் போதும் இந்தத் துதியைச் சொன்னாலும் படித்தாலும் ஆபத்துகளிலிருந்து விடுபட்டு சகல நன்மைகளையும் அடைவர்.
ஓம் நமோ நாராயணாய 🍒

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
       🔥  #ஸ்ரீ_வைஷ்ணவ_ஸாகரம்  🔥

உய்வதற்கு உதவும் வண்ணம்...

#எம்பெருமான் - பஞ்ச சம்ஸ்காரம்

#எம்பெருமானின் பஞ்சாயுதம்:
⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡

⚡ சங்கு - பாஞ்சச்சண்யம் 

⚡ சக்கரம் - சுதர்சனம் 

⚡ வில் - சார்ங்கம் 

⚡ வாள் - நந்தகம் 

⚡ கதை - தண்டாகி 

⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡

           🍁  #த்வாதச திருநாமம்:  🍁

🌺 எம்பெருமான் - பிராட்டி

🌺 கேசவன் - ஸ்ரீ 

🌺 நாராயணன் - அம்ருதோத்பாவ

🌺 மாதவன் - கமலா

🌺 கோவிந்தன் - சந்த்ரசோதரி

🌺 விஷ்ணு - விஷ்ணுபத்னி 

🌺 மதுசூதனன் - வைஷ்ணவி

🌺 திருவிக்ரமன் - வரரோஹா

🌺 வாமணன் - ஹரிவல்லபா

🌺 ஸ்ரீதரன் - சர்க்கினி

🌺 ரிஷிகேசன் - தேவதேவிக

🌺 பத்மநாபன் - மகாலட்சுமி

🌺 தாமோதரன் - லோகசுந்தரி

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

           🎡 #பஞ்ச_ரங்க_க்ஷேத்ரம்: 🎡

🍁 ஆதி ரங்கன் - ஸ்ரீ ரங்கப்பட்டினம் - கர்நாடகா 

🍁 அப்பக்குடத்தான் -  திருப்பேர்நகர் அல்லது கோவிலடி

🍁 கஸ்தூரி ரங்கன் - ஸ்ரீரங்கம்

🍁 ஆராவமுதன் - திருக்குடந்தை

🍁 பரிமள ரங்கபதி - திருஇன்தலூர் 

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

              ⭐  #பஞ்ச_சம்ஸ்காரம்:  ⭐

🍒 தப - சங்க சக்ர முத்திரைகளை தம் தோள்களில் பொறித்து கொள்ளுதல்

🍒 புண்ட்ர - திருமண், ஸ்ரீசூர்ணம் - உடலின் 12 இடங்களில் இட்டுகொள்ளுதல்

🍒 நாம - தாஸ்யநாமம் - ஆச்சர்யனிடம் இருந்து பெறுதல் 

🍒 மந்த்ர - ரஹஷ்யத்ரயம் - ஆச்சர்யனிடம் இருந்து பெறுதல் 

🍒 யாக - திருவாராதன க்ரமம் -  ஆச்சர்யனிடம் இருந்து பெறுதல்

🍒🍊🍒🍊🍒🍊🍒🍊🍒🍊🍒🍊🍒🍊🍒🍊🍒

Monday, 22 March 2021

நடக்காததை நடத்திக்காட்டும் நரசிம்ம மந்திரம் !!!


நீங்கள் ஒரு முயற்சி எடுக்கிறீர்கள்! என்னவெல்லாமோ செய்து பார்க்கிறீர்கள். ஆனால், ஏதோ தடங்கல், இடைஞ்சல் என்று தலை தூக்கி அந்த முயற்சி நிறைவேறாமல் போய்விட்டது. நீங்கள் மனவருத்தத்துடன் இருக்கிறீர்கள்.
அப்படியானால், நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம் இதுதான். இந்த மந்திரம் நடக்காததையும் நடத்திக்காட்டும் தன்மையுடையது.

யஸ்ப அபவத் பக்தஜன ஆர்த்திஹந்துபித்ருத்வம்
அந்யேஷு அவிசார்ய தூர்ணம்ஸ்தம்பே
அவதார தம் அநந்ய லப்யம்லக்ஷ்மி
ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே.

இந்த ஸ்லோகத்தைச் சொல்ல முடியாதவர்கள் பொருளைச் சொல்லுங்கள்.

"பக்தியற்றவர்களால் அடைய முடியாதவனே!
தாயின் கர்ப்பத்தில் அவதரித்தால்
தாமதமாகுமென்று தூணில் அவதரித்தவனே!
நினைத்த மாத்திரத்தில் பக்தர்களின்
துன்பத்தைப் போக்குபவனே!
லட்சுமி நரசிம்மனே!

Sunday, 21 March 2021

Pilava Tamil Year’s Festival & Important days14.04.2021 Wednesday Pilava Tamil Year/Chithrai month begins. Chaithra vishuPunyakaalam


18.04.2021 Sunday Sri Ramanujar Jayanthi
21.04.2021 Wednesday Sri raama navami
23.04.2021 Friday sarva ekAdasi
26.04.2021 Monday Chitraa Pournami
27.04.2021 Tuesday swAthi
03.05.2021 Monday sravaNa vratham
07.05.2021 Friday sarva ekAdasi
11.05.2021 Tuesday sarva amAvasai
14.05.2021 Friday akshaya thrutheeyai, vaikAsi mAsapiRappu
17.05.2021 Monday sri sankara jayanthi
23.05.2021 Sunday ekAdasi
24.05.2021 Monday swAthi
25.05.2021 Tuesday vaikAsi visAkam, sri nrusimha jayanthi
31.05.2021 Monday sravaNa vratham
06.06.2021 Sunday sarva ekAdasi
09.06.2021 Wednesday bhOdAyana amAvAsai
10.06.2021 Thursday amAvAsai
15.06.2021 Tuesday aani mAsapiRappu
21.06.2021 Monday sarva ekAdasi / swAthi
27.06.2021 Sunday sravaNa vratham
05.07.2021 Monday sarva ekAdasi
09.07.2021 Friday sarva amAvasai
16.07.2021 Friday dakshiNAyana puNyakAlam
17.07.2021 Saturday aadippaNdikai
18.07.2021 Sunday swAthi
20.07.2021 Tuesday sarva ekAdasi
24.07.2021 Saturday sravaNa vratham
04.04.2008 Wednesday sarva ekAdasi
08.08.2021 Sunday aadi amAvAsai
11.08.2021 Wednesday thirivaadippUram
14.08.2021 Saturday swAthi
17.08.2021 Tuesday aavaNi mAsapiRappu
18.08.2021 Wednesday sarva ekAdasi
20.08.2021 Friday Varalakshmi vratham
21.08.2021 Saturday rig upAkarma, hayagreeva jayanthi, thiruvONam, sravaNa vratham
22.08.2021 Sunday yajur upAkarma
23.08.2021 Monday gAyathri japam
30.08.2021 Monday Gokulashtami, vaikAnasa/munithraya srijayanthi
31.08.2021 Tuesday pAncharatra – Srimadam srijayanthi
03.09.2021 Friday sarva ekAdasi
06.09.2021 Monday sarva amAvasai
09.09.2021 Thursday sAma vEda upAkarma (kuja shanthi)
10.09.2021 Friday vinAyakar Chathurthi / Ganesh Chathurthi
11.09.2021 Saturday swAthi
17.09.2017 Friday PurattAsi mAsapiRappu, sarva ekAdasi, sravaNa vratham
21.09.2021 Tuesday mahALaya paksham begins
24.09.2021 Friday mahAbharaNi
29.09.2021 Wednesday madhyAshtami
02.10.2021 Saturday sarva ekAdasi
05.10.2021 Tuesday bhOdhayana amAvAsai
06.10.2021 Wednesday mahALaya amAvAsai
07.10.2021 Thursday Navaratri Pooja begins.
14.10.2021 Thursday mahAnavami, saraswathi pooja 
15.10.2021 Friday vijaya dasami, sravaNa vratham, sri vEdAntha dEsikar
thirunakshatram
16.10.2021 Saturday sarva ekAdasi
17.10.2021 Sunday thulA vishU puNyakAlam
18.10.2021 Monday thulA snAnam begins
01.11.2021 Monday sarva ekAdasi
03.11.2021 Wednesday Late night/04th early morning Naraka chathurthasi
04.11.2021 Thursday sarva amAvAsai, deepavaLi Festival, Lakshmi KubEra puja.  
08.11.2021 Monday maNavALa mAmunigal thirunakshatram
11.11.2021 Thursday sravaNa vratham
15.11.2021 Monday sarva ekAdasi
16.11.2021 Tuesday kadaimukam, thulA snAnam poorthi, kArthikai month begins.
17.11.2021 Wednesday mudavan muzhukku
18.11.2021 Thursday vaikAnasa deepam
19.11.2021 Friday pAncharAthra/Srimadam thirukkArthikai deepam
30.11.2021 Tuesday sarva ekAdasi
02.12.2021 Thursday swAthi
03.12.2021 Friday bhOdhAyana amAvAsai
04.12.2021 Saturday amAvAsai
08.12.2021 Wednesday sravaNa vratham
14.12.2021 Tuesday sarva ekAdasi (Srirangam temple vaikunda ekAdasi)
16.12.2021 Thursday mArgazhi mAsapiRappu, dhanur month Pooja begins
29.12.2021 Wednesday swAthi
30.12.2021 Thursday sarva ekAdasi
02.01.2022 Sunday sarva amAvasai, hanumath jayanthi
05.01.2022 Wednesday sravaNa vratham
11.01.2022 Tuesday koodaraivalli
13.01.2022 Thursday vaikunda ekAdasi (except temples) – bhOgi festival
14.01.2022 Friday thai month begins – utharAyaNa puNyakAlam, makara Sankranthi,
Pongal festival. Auspicious time for keeping Pongal Pot  between 1.45 – 2.30 PM (IST).
15.01.2022 Saturday kanu, mAttuppongal
25.01.2022 Tuesday swAthi
31.01.2022 Monday sarva thai amAvAsai
01.02.2022 Tuesday sravaNa vratham
08.02.2022 Tuesday radha sapthami
12.02.2022 Saturday sarva ekAdasi
13.02.2022 Sunday mAsi mAsapiRappu
17.02.2022 Thursday mAsi magam
22.02.2022 Tuesday swAthi
24.02.2022 Thursday ashtakA
25.02.2022 Friday anvashtakA
27.02.2022 Sunday ekAdasi
28.02.2022 Monday sravaNa vratham
02.03.2022 Wednesday sarva amAvasai
14.03.2022 Monday sarva ekAdasi, kAradayAr nOnbu, panguni mAsapiRappu auspicious time to wear mAsi charade between 8.00 and 8.45 pm.
18.03.2022 Friday panguni uthiram
21.03.2022 Monday swAthi
28.03.2022 Monday sarva ekAdasi, sravaNa vratham
31.03.2022 Thursday sarva amAvasai
02.04.2022 Saturday yugAdhi festival – Telugu new year
10.04.2023 Sunday sri rAma navami
12.04.2022 Tuesday sarva ekAdasi
14.04.2022 Thursday subhakruthu Tamil new year, Chithirai month begins, chaithra
vishu puNyakAlam. 
|| subhamasthu ||

Wednesday, 17 March 2021

அச்யுதம் கேசவம்

அச்யுதம் கேசவம் ராம நாராயணம்
க்ருஷ்ண தாமோதரம் வாஸுதேவம் ஹரிம்
ஸ்ரீதரம் மாதவம் கோபிகாவல்லபம்
ஜானகீநாயகம் ராமசந்த்ரம் பஜே


அச்யுதம் - என்றும் ஒரே நிலையில் இருப்பவன்! தன்னை அண்டியவர்கள் கீழ் நிலையை அடைய விடாதவன்! இவனை அடைந்தவர்களுக்கு மீண்டும் பிறப்பிறப்பு சுழல் கரும வசத்தால் அமைவதில்லை!

கேசவம் - அழகிய சுருண்ட முடிகளை உடையவன்! கேசி என்னும் அரக்கனை வதைத்தவன்! அரன் அயன் என்று உலகு அழித்து அமைத்து உளனே என்று ஆழ்வார் பாடியதைப் போல் க என்ற பிரம்மனுக்கும் ஈச என்ற ஈசானனுக்கும் அந்தர்யாமி ஆனவன்!

ராம - மகிழ்ச்சியைத் தருபவன்! மகிழ்ச்சியே உருவானவன்! கவர்பவன்!

நாராயணம் - நாரங்கள் என்னும் உயிர்கள், உலகங்கள் அனைத்திற்கும் இருப்பிடமானவன்! நாரங்களை இருப்பிடமாகக் கொண்டவன்! நாரங்களை நடத்துபவன்! நீர்மையன்! நீரைப் போன்ற தன்மை கொண்டவன்! அடியவர் தரும் உருவங்களை எல்லாம் ஏற்று அதில் நிறைபவன்!

க்ருஷ்ண - கவர்பவன்! களையெடுப்பவன்! கருப்பன்! பண்படுத்துபவன்! கண்ணன்!

தாமோதரம் - அன்பிற்கு வசப்படுபவன்! யசோதையாலும் சகாதேவனாலும் கட்டப்பட்ட கயிற்றைத் தாங்கியவன்!

வாஸுதேவம் - வசுதேவன் மைந்தன்! எங்கும் வசிப்பவன்! ஒளி வடிவானவன்!

ஹரிம் - கவர்பவன்! பொருளைக் கவர்பவன்! உள்ளத்தைக் கவர்பவன்! உயிரைக் கவர்பவன்! திருடன்!

ஸ்ரீதரம் - திருவாளன்! திருவைத் தன் மார்பில் தாங்குபவன்! செல்வன்!

மாதவன் - திருமகள் கேள்வன்! திருமால்! பெருந்தவ வடிவானவன்!

கோபிகா வல்லபம் - கோபியர் கொஞ்சும் ரமணன்! கோபியர் உள்ளத்திற்கு நெருங்கியவன்! கோபியர்களின் அந்தரங்கன்!

ஜானகீ நாயகம் - ஜனக குமாரியின் நாயகன்!

ராமசந்த்ரம் - சந்திரனைப் போல் கவர்பவன்!

பஜே - என்றும் துதிக்கிறேன்!

தன் அன்பர்கள் நிலை தாழ விடாதவனும், சுருள்முடி அழகனும், மகிழ்ச்சியைத் தருபவனும், நீர்மையாளனும், கண்ணனும், அன்பிற்கு வசப்படுபவனும், எங்கும் வசிப்பவனும், கவர்பவனும், செல்வனும், திருமகள் கேள்வனும், கோபியர் உள்ளம் நிறைபவனும், சீதை மணாளனும் ஆன ராமசந்திரனை என்றும் பஜிக்கிறேன்!

பெண்கள் வெளியே செல்லும் போது இதை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு போனாலே போதும்



கண் திருஷ்டி, கெட்ட சக்தி, எதிர்மறை ஆற்றல் எதுவும் பெண்களை நெருங்கவே நெருங்காது.

பெண்கள் எல்லோருமே மஹாலக்ஷ்மி மற்றும் பராசக்தியின் அம்சமே..!!
பெண்கள் என்றாலே அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் தான். 

கண்ணுக்கு தெரிந்த சில பிரச்சனைகளிலிருந்து பெண்களை பாதுகாப்பது ஒரு கஷ்டம் என்றால், கண்ணுக்குத் தெரியாத எதிர்மறை ஆற்றல், கண் திருஷ்டி கெட்ட சக்தி இவைகளிடமிருந்தும் பெண்களைப் பாதுகாக்க வேண்டியது மிக மிக அவசியம். 

அந்த காலம் போன்று இந்த காலம் இல்லை. 

பெண்களும் நேரம் காலம் பார்க்காமல் வெளியே சென்று வரவேண்டிய சூழ்நிலை. 

ஸ்ரீ கிருஷ்ணர் கூறியது போல இக்கலியுகத்தில் ஆண்களும் பெண்களும் சமம் என்ற சூழ்நிலை வந்துவிட்டது. 

இருப்பினும் பெண்களுக்கு உண்டான பிரச்சனைகள் மட்டும் குறைந்த பாடில்லை.

ஆன்மீக ரீதியாக பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள என்ன செய்யலாம், எந்த பொருளை தங்களுடைய கையில் வைத்துக் கொள்ளலாம் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். 

பெண்கள் என்றாலே அவர்கள் தினம்தோறும் அம்பாளை மனதார நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். 

உலகுக்கே தாயாக இருப்பவள் அந்த சக்தி தேவி! அந்த சக்தி தேவியின் ஸ்வரூபத்தில் தான் பெண்கள் இந்த பூலோகத்தில் படைக்கப் பட்டிருக்கிறார்கள்.

ஆக பெண்களின் மனம் உறுதி அடைய, பெண்கள் தைரியமாக வாழ்க்கையை எதிர்கொள்ள அம்பாள் வழிபாடு நிச்சயமாக கை கொடுக்கும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகமே இல்லை.

முதலில் பெண்கள் நெற்றியில் நடு வகிட்டில் குங்குமம் வைத்து கொண்டாலே எந்தவொரு தீய சக்திகளும் அண்டவே அண்டாது.

குங்குமம் என்றால அது அரக்கு குங்குமம்.

ஆனால் தற்போது உள்ள கலியுகத்தில் இதெல்லாம் சாத்தியமே இல்லை கேட்டால் ஃபேஷன் என்கிறார்கள்.

ஞாபகமிருக்கட்டும் எவ்வளவுக்கு எவ்வளவு குங்குமம் பெரியதாக நெற்றியில் வைக்கிறீர்களோ அது உங்கள் கணவனின் ஆயுளை அதிகரிக்கும்.

சரி பெண்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள ஆன்மீக ரீதியாக, ஒரே ஒரு விரலி மஞ்சளை பூஜை செய்து கையில் வைத்துக் கொண்டாலே போதும். 

காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு, ஒரு விரலி மஞ்சளை எடுத்துக் கொள்ளுங்கள்

உங்களுடைய வீட்டு பூஜை அறையில் கட்டாயம் ஏதாவது ஒரு அம்மனின் திருவுருவ படம் அல்லது மஹாலக்ஷ்மி படம் இருக்கும். 

அந்த திருவுருவ படத்திற்கு முன்பாக இரண்டு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, அந்த அம்மனின் பாதத்தில் இந்த ஒரு மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள். 

உங்களை எந்த துர் சக்திகளும் அண்டக் கூடாது, கண் திருஷ்டியால் பிரச்சனைகள் ஏற்படக் கூடாது. 

எந்தவித எதிர்மறையான பிரச்சனையும் நீங்கள் வெளியே செல்லும் போது, உங்களுக்கு நேரக்கூடாது, என்றபடி மனதார பிரார்த்தனை செய்துகொண்டு, மூன்று முறை ‘ஓம் சக்தி பராசக்தி’ அல்லது 'ஓம் தூம் தூர்காலஷ்ம்யை நம' என்று 108 முறை உச்சரித்து தூப தீபம் காட்டி பூஜையை சிறிய அளவில் நிறைவு செய்து கொள்ள வேண்டும். 

அந்த விரலி மஞ்சளை எடுத்து முடிந்தால் உங்களுடைய முந்தானையில் முடிந்து வைத்துக் கொள்ளலாம்.

அல்லது ஒரு மஞ்சள் துணியில் கட்டி உங்கள் ஹேண்ட் பேக்கில் பர்ஸில் வைத்து கொள்ளுங்கள்.

மீண்டும் வீடு திரும்பிய பின்பு அந்த மஞ்சளை ஸ்வாமியின் படத்திற்கு முன்பாகவே வைத்துவிடுங்கள். 

ஞாபகமிருக்கட்டும் மாத விலக்காகும் போது மட்டும் கண்டிப்பாக அந்த மஞ்சள் துணியை தொட வேண்டாம்.

மீண்டும் தினம்தோறும் அந்த மஞ்சளை கையோடு எடுத்துச் சென்றால், கண்ணுக்கு தெரியாத எதிர்மறை ஆற்றலிலிருந்து நீங்கள் உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.

பொதுவாகவே நல்ல விசேஷங்களுக்கு விரலி மஞ்சளை, மஞ்சள் கயிற்றில் கட்டி, கையில் காப்பு கட்டும் பழக்கம் இருக்கும். 

எதற்காக இந்த காப்பு? 

விசேஷ தினங்களில் அழகாக அலங்காரம் செய்து கொள்ளும் ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு கண்ணுக்கு தெரியாத எதிர்மறை ஆற்றலின் மூலம் எந்த ஒரு பிரச்சினையும் வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான். 

மஞ்சளுக்கு என்று எப்போதுமே தனி மகத்துவம் உண்டு. 

மஞ்சள் நவக்கிரகங்களில் குரு பகவானுக்கு உரியது ஆகவே நம்பிக்கையோடு எங்கு சென்றாலும் 
அந்த மந்திரத்தை உச்சரித்து கொண்டு செல்லுங்கள் போதும்.

இன்னொன்று கோவிலுக்கு சென்று அர்ச்சகரிடம் அந்த மஞ்சளை அம்பாள் பாதத்தில் வைத்து அஷ்டோத்திரம் சொல்லி மீண்டும் உங்களிடம் கொடுப்பார் அதை உங்கள் பர்ஸில் வைத்து கொள்ளுங்கள் இது அதி சிறந்த பலனைத் தரும். 

அதிலும் மஹாலக்ஷ்மி மற்றும் அம்பாள் பாதத்தில் இருந்து வைத்து எடுத்த மஞ்சள் என்றால், அதில் கெட்ட சக்தி நெருங்குவதற்கு வாய்ப்பே கிடையாது. 

உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நீங்களும் முயற்சி செய்துதான் பார்க்கலாமே. 
நல்லதே நடக்கும். 

ஜெய் ஸ்ரீராம்
ஸர்வம் கிருஷ்ணார்பணமஸ்து.

ஏன் முதலில் மஹாலக்ஷ்மியையும்… பிறகு, பெருமாளையும் சேவிக்க வேண்டும் ?

முதலில் சீதா பிராட்டியாரையும், தொடர்ந்து லட்சுமணனையும் குகனை ஏற்றுக் கொள்ளும்படியாகச் செய்த பிறகே, குகனை கடாக்ஷிக்கிறாராம் ராமபிரான்.
ஸ்ரீரங்கநாதரிடம் பிரார்த்திக்கும்போது, ஸ்ரீரங்கநாச்சியாரை முன்னிட்டே பிரார்த்திக்கிறார் ஸ்ரீராமாநுஜர். ஏன் நாம் நேராக பெருமாளிடம் போய் கேட்டுக்கொள்ளக் கூடாதா?
பெறவேண்டியவன் நானாகவும், கொடுக்க வேண்டியவன் பெருமாளாகவும் இருக்கும் போது, நேராக பெருமாளிடமே பெற்றுக்கொள்ளலாமே. இடையில் பிராட்டியார் எதற்கு?


இதற்கு, பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானம் செய்யும்போது சொல்கிறார்:
கொடுப்பவன் பகவானாக இருந்தாலும், அந்த பகவானே உபாயம் என்பதில் நமக்கு உறுதியான எண்ணம் இருக்க வேண்டும் அல்லவா? அந்த உறுதியான எண்ணத்தை, அதாவது உபாய நிஷ்டையை நமக்கு அருள்பவள்தான் மஹாலக்ஷ்மி பிராட்டியார்.
மஹாலக்ஷ்மியின் கடாக்ஷத்தால் பகவானிடம் உறுதியான பக்தி ஏற்பட்டுவிட்ட பிறகு நடப்பது நடக்கட்டும் என்று கவலை இல்லாமல் விச்ராந்தியாக இருந்துவிடலாம். இல்லையென்றால், தினமும் கவலைப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டியதுதான்.
ஒருவர் இருக்கிறார். அவர் காலையில் எழுந்ததில் இருந்தே எதற்காவது கவலைப்பட்டுக் கொண்டே இருப்பார். அதேசமயத்தில் பகவான் கிருஷ்ணர் அருளிய,
ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாமேஹம் சரணம் வ்ரஜ
அஹம்த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸுச:
என்ற சுலோகத்தையும் சொல்லிக் கொண்டே இருப்பார். ’உன்னுடைய எல்லா பாவங்களில் இருந்தும் உன்னை நான் விடுவிக்கிறேன். அப்படி இருக்க நீ ஏன் சோகப்படுகிறாய்?’ என்ற அர்த்தத்தில், கிருஷ்ணர் அருளிய இந்த சுலோகத்தைச் சொல்லிக்கொண்டே அவர் நாள்முழுவதும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால், அவருக்கு பகவானிடத்தில் உறுதியான நம்பிக்கை ஏற்படவில்லை என்றுதான் பொருள். காரணம், மஹாலக்ஷ்மியின் கடாக்ஷம் அவருக்குக் கிடைக்கவில்லை.
நாம் எல்லோரும் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்றால், நாம் தான் நம் குடும்பத்தையே காப்பாற்றிக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். அந்த நினைப்புதான் நம்மை எப்போதும் கவலையில் ஆழ்த்திவிடுகிறது. உண்மையில் நாமா எல்லோரையும் காப்பாற்றுகிறோம்?
கூரத்தாழ்வார் ஒரு சுலோகத்தில், ‘நான் போன பிறகு, என் மனைவியை யார் காப்பாற்றுவார்கள் என்று இத்தனைநாள் நான் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். சட்டென்று ஒருநாள் நான் புரிந்து கொண்டேன். எனக்குப் பிறகு அவர்கள் இன்னும் நன்றாக இருப்பார்கள் என்று அப்போதுதான் நான் புரிந்துகொண்டேன். இத்தனை நாளாக நான்தான் அவளை ரக்ஷித்துக் கொண்டிருந்ததாக நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், பகவான்தான் அவளை மட்டுமல்ல என்னையும் சேர்த்தே ரக்ஷித்துக்கொண்டிருக்கிறார் என்பதை இப்போது நான் புரிந்துகொண்டேன். இதுவரை என்னையும் என் மனைவியையும் ரக்ஷித்து வந்த பகவான், என் மனைவியை நான் போன பிறகும்கூட ரக்ஷிக்கத்தான் போகிறான்’ என்கிறார்.
இந்த ஜகம் முழுவதையும் பகவான் ஒருவன்தான் ரக்ஷிக்கிறானே தவிர, கணவன் ரக்ஷிக்கிறான், மாதா பிதாக்கள் ரக்ஷிக்கிறார்கள், சொத்துக்கள் ரக்ஷிக்கும் என்றெல்லாம் நினைப்பது அபத்தம். பகவான் மட்டுமே ரக்ஷகர். ஆனால், அவர் அப்படி ரக்ஷிக்க வேண்டுமானால், அவர் திருமகளோடு சேர்ந்து இருக்க வேண்டும். அதனால்தான் ஆழ்வார் பாடுகிறார்:
’ஞாலத்தோடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்
சாலப்பலநாள் உகந்தோறு உயிர்கள் காப்பானே
கோலத்திருமாமகளோடு உன்னைக் கூடாதே
சாலப்பலநாள் அடியேன் இன்னும் தளர்வேனோ’
திருமகளோடு சேர்ந்திருந்து இந்த உலக உயிர்களை யுகங்கள்தோறும் காத்து ரக்ஷிக்கும் உன் திருவடிகளை அடையாமல் நான் இன்னும் எத்தனை நாள்தான் துன்பப்படுவது என்று கேட்கிறார்.
எனவே, முதலில் மஹாலக்ஷ்மியையும்… பிறகு, பெருமாளையும் சேவிக்க வேண்டும். ஒருவரை சேவித்து விட்டு மற்றவரை சேவிக்காமல் இருக்கக் கூடாது. அதாவது, இருவருடைய திருவடிகளையும் ஒருசேரப் பற்றிக் கொள்ள வேண்டும். இருவரிடமும் பற்றுகொள்ள வேண்டும். ராமனிடம் மட்டும் பற்றுகொண்டாள் சூர்ப்பணகை. அவள் நிலைமை என்ன ஆயிற்று? காதும் மூக்கும் அறுந்ததுதான் மிச்சம்; சீதையிடம் மட்டும் பற்றுகொண்டான் ராவணன். என்ன ஆயிற்று? தலையே போனதுதான் கண்ட பலன். அதே சீதையை முன்னிட்டு ராமனைப் பற்றினான் விபீஷணன். அவனுக்கு பேரின்ப வாழ்க்கையே கிடைத்துவிட்டது.
வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் அருளியது.

நரசிம்ம அவதாரம்

பகவான் மகா விஷ்ணு எடுத்த அவதாரங்களில் தனிச் சிறப்பு கொண்டதாகத் திகழ்வது நரசிம்ம அவதாரம். பகவான் நரசிம்மர் அரூபமாக எங்கும் நிறைந்திருப்பவன்தான் என்றாலும், ஓர் உருவத்துடன் தூணில் மட்டுமல்ல, காணும் இடம் எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருந்த அவதாரம் நரசிம்ம அவதாரம். இரண்யன் எந்த இடத்தைத் தாக்கினாலும், அந்த இடத்தில் இருந்து வெளிபட்டு இரண்யனை வதம் செய்யத் தயாரான உருவத்துடனே எங்கெங்கும் வியாபித்திருந்தார்.

பிரகலாதன் காட்டிய தூணை இரண்யன் பிளக்க, தூணில் இருந்து வெளிப்பட்ட நரசிம்மர், இரண்யனை வதம் செய்தார். இரண்யனை நரசிம்மர் வதம் செய்த திருத்தலம்தான் அகோபிலம்.

ஆனால், நரசிம்மரின் அவதாரக் காலம் வெறும் இரண்டு நாழிகையே. இதனால், காச்யப முனிவர், நாரதர், வருணன், சுகோசன் ஆகியோர் நரசிம்மரின் திருக்கோலத்தை தரிசிக்க விரும்பினர். அவர்கள் மகா விஷ்ணுவை பிரார்த்தித்தனர்.

அவர்களின் பிரார்த்தனைக்கு இரங்கிய மகா விஷ்ணு, "பொதிகை மலைச்சாரலில் அகத்திய முனிவரால் உருவாக்கப்பட்ட மனிமுத்தா தீர்த்தத்தில் நீராடி, பின் 40 கல் தொலைவில் உள்ள சித்ரா நதிக்கரையில் என்னை நோக்கித் தவம் இருங்கள்" என்று சொல்லி மறைந்தார். 
அதன்படியே தவம் இருக்க, தவத்தில் மகிழ்ந்த பகவான் ஶ்ரீதேவி மற்றும் பூதேவி சமேத நரசிம்மராக 16 திருக்கரங்களுடன் காட்சி தந்தார். பகவானை மனம் குளிர தரிசித்து வணங்கிய காச்யப முனிவரும், மற்றவர்களும் நரசிம்மர் அந்தத் தலத்திலேயே எழுந்தருளி, காலம்தோறும் வழிபடும் பக்தர்களுக்கு அருள் புரியவேண்டும் என்று பிரார்த்தித்தனர். நரசிம்மரும் அங்கேயே எழுந்தருளினார். 
கருவறையில், இரண்யனை தனது மடியில் கிடத்தி, இரண்டு கரங்களால் அவனைப் பற்றி, நான்கு கரங்களால்  வயிற்றைக் கிழித்து, மேலும் இரண்டு கரங்களால் குடலை உருவி, மீதமுள்ள எட்டு கரங்களில், பலமான  ஆயுதங்களுடன் காட்சி தருகிறார் நரசிம்மர்.
திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா கீழப்பாவூர் கிராமத்தில் நரசிம்மர் திருக்கோயில் உள்ளது. வயல்வெளிகள் நிறைந்த பசுமையான சூழலில் கோயில் அமைந்துள்ளது. இது சுமார் 1100 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்டது. இந்த  இடம் சோழர்கள் காலத்தில் 'சத்திரிய சிகாமணி' என்று அழைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. 

கருவறையில் நரசிம்மர் உக்கிரமாக இருப்பதால், ஊர் அடிக்கடி தீப்பற்றி எறிந்தது. நரசிம்மரின் சீற்றத்தைத் தணிக்க லட்சுமி தேவியை அனுப்பி வைத்தார், பிரம்மதேவன். நரசிம்மரின் சீற்றம் தணிந்தது. நாம்  இங்கு சென்று பகவானை தரிசிக்கும் போது, நரசிம்மரின் மார்பில் வீற்றிருக்கும் லட்சுமிதேவியையும் தரிசிக்க முடியும். ஆலயத்துக்கு முன்பாக நரசிம்ம தீர்த்தமும் நரசிம்மப் பெருமானின் உக்கிரத்தை தணிக்கிறது. 

நரசிம்மருக்கு இளநீர், பால், பானகம் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும். 
நெய்தீபம் ஏற்றி வழிபட பிரார்த்தனைகள் உடனே நிறைவேறும்.

நரசிம்மர் எங்கும் நிறைந்திருப்பவர், நாம் கேட்காமலேயே நமக்கு அருள் புரிவார்.

Tuesday, 16 March 2021

கிழவிக்கு_பயந்துகொண்டு போகும் பெருமாள்


திருப்பதி அருகிலுள்ள மங்காபுரம் கிராமத்தில் ஒரு மூதாட்டி இருந்தாள். அவளது பெயர் கங்கம்மா. சுண்டல் விற்பது அவளுக்குத் தொழில். அதில் கிடைத்த சொற்ப வருமானத்தில் வாழ்க்கை நடத்தினாள். கணவர் போய்விட்டார். பிள்ளைகளும் இல்லை. 

"ஏண்டா பிறந்தோம்" என்று அடிக்கடி புலம்புவாள். அந்தக் காலத்தில், காட்டுப்பாதையில் மக்கள் கூட்டம் கூட்டமாக நடந்துதான் திருமலைக்குச் செல்வார்கள். அப்படி ஒருநாள் பக்தர்கள் கூட்டம் அதிகாலைப் பொழுதில் மலையேறிக் கொண்டிருந்தது. அந்தக் கூட்டத்தை மலை அடிவாரத்தில் கண்ட பாட்டி, மலையேறுபவர்களிடம் சென்று, "ஐயா! நீங்க எல்லாரும் மலைக்கு எதற்காகச் செல்கிறீர்கள்?'' என்று ஒன்றும் அறியாதவளாய்க் கேட்டாள். 

அவளுடைய அப்பாவித்தனமான கேள்வியைக் கேட்டதும் அவர்கள் சிரித்து விட்டனர். "என்ன பாட்டி இது கேள்வி? திருமலையின் அடிவாரத்தில் இப்படியும் ஒருத்தி இருக்கியே! மேலே பெருமாள் கோயில் இருப்பது திருப்பதிகாரியான உனக்கே தெரியாதா?'' என்று கோபித்துக் கொண்டனர். 

உண்மையில், மலையில் கோயில் இருப்பதைக் கூட அறியாமல் இருந்தாள் அவள். ஒரு பக்தர் மட்டும் அவள் மீது இரக்கம் கொண்டு, "அம்மா! மலை மேல் ஒரு சுவாமி இருக்கிறார். அவரைப் போய் தரிசித்தால் இனிமேல் இப்படி பிறந்து சுண்டல் விற்கும் நிலை இருக்காது. அவனை "கோவிந்தா" எனச் சொல்லி கும்பிட வேண்டும். அப்படி செய்தால் நீ செய்த பாவங்களெல்லாம் தீர்ந்து விடும்,'' என்று அவளுக்குப் புரியும் வகையில் எளிமையாக எடுத்துச் சொன்னார். 

இதைக் கேட்டாளோ இல்லையோ! சுண்டல் கூடையோடு திருமலைக்கு ஏறினாள். ஏழுமலையப்பனைக் கண்குளிரக் கண்டாள். "அப்பனே! கோவிந்தா, உன்னை வணங்கினால் இனி பிறக்கவே மாட்டேனாமே! அந்த பக்தர் சொன்னாரே! எனக்கும் இனி பிறவி வேண்டாமையா'' என்று மனம் உருகிச் சொன்னாள். தரிசிக்க வந்த பக்தர்கள் மலையை விட்டுக் கிளம்பினார்கள். 

அவள் மட்டும் அங்கேயே தங்கிவிட்டாள். அப்போது, ஒரு வயோதிகர் அங்கு வந்தார். "அம்மா! சுண்டல் கொடு'' என்று கேட்டார். அவளும் கொடுக்க, சாப்பிட்டு விட்டு நடையைக் கட்டினார்."ஐயா! சுண்டலுக்கு காசு கொடுத்துட்டு போங்க,'' என்றாள் பாட்டி."அம்மா! நான் ஒரு கடன்காரன், கல்யாணத்துக்குக் கடன் வாங்கிவிட்டு, வருமானத்தையெல்லாம் வட்டியாகக் கட்டிவிட்டு கஷ்டப்படுகிறேன். சுண்டலுக்கு கூட பணமில்லை. நாளை இங்கே வருவேன். அப்போது காசு தருகிறேனே!'' என்றார் கெஞ்சலாக. 

"சரி, நாளை கொண்டு வாங்க,'' என விட்டுவிட்டாள் மூதாட்டி. தன் முன்னால் வந்து நின்றது உலகிற்கே படியளக்கும் ஏழுமலையான் என்பதைப் பாமரப் பெண்ணான கங்கம்மா எப்படி அறிவாள்! 

மறுநாள், சொன்னபடி அந்த வயோதிகர் வரவில்லை. "இப்படி ஏமாற்றி விட்டாரே கிழவர்" என அவள் பொருமிக் கொண்டே இருந்தாள். ஒரு கட்டத்தில் அவள் இறந்தும் போய்விட்டாள். 

பாட்டிக்கு பணத்துக்கு பதிலாக, மேலான வைகுண்டத்தையே கொடுத்து விட்டார் பரந்தாமன். ஆனாலும், அவர் மானிடப்பிறப்பெடுத்து சீனிவாசனாக பூமிக்கு வந்தவர் இல்லையா! 

பாட்டிக்கு மறுநாள் காசு கொடுப்பதாக வாக்களித்து விட்டு, கொடுக்கவில்லையே! 

இதனால் தெற்குமாடவீதியிலுள்ள அசுவ சாலையில், இப்போதும் விழாக்காலங்களில் அவர் பவனியாக வரும் போது, பாட்டிக்கு பயந்து கொண்டு மேளதாளம் இல்லாமல் ஒளிந்து கொண்டு செல்கிறார். 

இந்தக் கதையைப் படித்தவர்களெல்லாம், தீர்க்காயுளுடன் வாழ்ந்து, பிறப்பற்ற நிலையை அடைவர் என்பது ஐதீகம்.

Friday, 12 March 2021

ஸஹஸ்ர நாம த்யான ஸ்லோகம் - 7

ஶ்ரீராமஜெயம் 🙏

ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் 30

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம த்யான ஸ்லோகம் - 7

சந்த்ராநநம் சதுர்பாஹும் ஸ்ரீவத்ஸாங்கித வக்ஷஸம்
ருக்மிணீ ஸத்ய பாமாப்யாம் ஸஹிதம் க்ருஷ்ண மாஸ்ரயே

சந்திரன் போன்ற முகத்தினரும், நான்கு திருக்கரங்களை உடையவரும், ஸ்ரீவத்ஸம் தோன்றும் திருமார்பினரும், ருக்மணி சத்யபாமை ஆகிய இருவருடனும் சேர்ந்து விளங்குபவருமாகிய ஸ்ரீகிருஷ்ணரைச் சரணடைகிறேன்.
த்யான ஸ்லோகங்கள் முடிவுற்றன!!

ஓம் நமோ நாராயணாய 🙏

எம்பெருமான் திருவாசல்

ஸ்ரீமதே ராமாநுஜாய நம

"எம்பெருமான் திருவாசல்...."

திருவரங்கம்....

அமைதி.......
உடையவர்  திருக்கண்களை மூடி வெகுநேரம் யோசித்துக் கொண்டே இருந்தார்.... கந்தாடையாண்டான் காத்திருந்தார்.....மடத்தில் இருந்த சீடர்கள்.... உடையவர் என்ன சொல்லப் போகிறார்..... என்று அறிய சுற்றி வந்து சூழ்ந்து நின்றார்கள்.... "ஸ்ரீபெரும்புதூர் "அவர் அவதரித்த மண்.... அந்த திருத்தலத்தில் உடையவரின் திருமேனித் திரு ஒன்று நிறுவ நினைப்பது நியாயமே..... பதிமூன்று ஆண்டுகாலம் திருப்பாதம் பதித்து விட்டு திரும்பிய திருநாராயணபுரத்துக்கு தனது திருமேனித் திருவை செய்து வைத்துக் கொள்ள அனுமதித்தவர்.... இதற்கு எதற்கு இவ்வளவு யோசிக்க வேண்டும்....?

யாருக்கும் புரியவில்லை.... நெடுநேரம் கழித்து ராமானுஜர் திருக்கண்களைத் திறந்தார்...."சரி ஆண்டான்.... உமது விருப்பப்படியே நடக்கட்டும் " என்றார்....

சட்டென்று அங்கே மகிழ்ச்சிப் பெருக்கு நிறைந்து பரவியது....தாமதமின்றி வல்லுனரான சிற்பி ஒருவர் வரவழைக்கப்பட்டார் .... உடையவரை நேருக்கு நேர் தரிசித்து அமர்ந்து வரைந்து எடுத்துச் சென்று அவரது திருத்தோற்றத்தை அச்சில் வார்த்துக் கொண்டு வந்து சமர்ப்பித்தார்....

"ஸ்வாமி... தங்கள் திருமேனி.... எப்படி இருக்கிறது என்று பார்த்துச் சொல்லுங்கள்" கந்தாடையாண்டான் முன்னால் வந்து திருவை ராமானுஜர் முன் நிறுத்தினார்.... அவர் திருமுகத்தில் புன்னகை விரிந்தது.....

"அடடே.... அப்படியே எம்மை ஒத்திருக்கிறதே....."

"அப்படியானல்... இதை ஸ்ரீபெரும்புதூரில் எழுந்தருளப்பண்ணலாம் அல்லவா ....?"

"ஒரு நிமிடம்.... அதை இப்படிக் கொடு...." உடையவர் கரம் நீட்ட.... கந்தாடையாண்டான்அத் திருவை( சிலை) அவர் அருகே எடுத்து வந்து நீட்டினார்....

ராமானுஜர் அதை வாங்கி அப்படியே தன் திருமார்போடு அணைத்துக் கொண்டார்...."

"ஸ்வாமிக்கு திரு அவ்வளவு பிடித்துவிட்டது போலும்...." என்று சுற்றியிருந்தவர்கள் நினைத்துக் கொண்டிருந்த போது உடையவர்.... அவர்கள் அறியாத வேறொரு செயலில் ஈடுபட்டிருந்தார்....

" காலக்கணக்கற்று.... பாற்கடலில் எம்பெருமானை தாங்கி நிற்கும் சக்தி.... (ஆதிசேஷன்) ஞானக் கிடங்காக சேகரித்த பெரும் சக்தி..... கருணைக் கடலாக ஊற்றெடுத்த சக்தி.... தவம்.... ஒழுக்கம்... சீலம் காத்து ஐம்பெரும் ஆச்சார்யர்களின் திருவடி நிழலில் தங்கிப் பயின்ற பெரும் பாடங்களின் மூலாதார சக்தி.... தானே ஆசார்யராகி... ஜகதாசார்யர் என்று வழங்கப்பட்டதன் பிண்ணனியில் இயங்கிய பரம்பொருளின் அருளாசி வடிவச் சக்தி.... அனைத்தையும் திரட்டி அந்தத் திருவுக்குள் செலுத்தினார்.... தன்மானசீகத்தில் அரங்கனை நெக்குருகி வேண்டிக் கொண்டு.... திருவை கந்தாடை யாண்டானிடம் நீட்டினார்....

"ஆண்டான்.... இனி இது மக்களுடையது.... இதில் யாம் இருக்கிறோம்.... இதன் வடிவில் என்றும் அவர்களோடு இருப்போம்"


"தானுகந்த திருமேனி " என்று பக்தர்கள் கொண்டாடிக் களித்தார்கள்.... உடையவரே அத் திருவை பிரதிஷ்டை செய்ய நாள் பார்த்துச் சொன்னார்...." தை மாதம் பூச நட்சத்திரத்தில் இது பிரதிஷ்டை ஆகட்டும்" என்றார்...

" அப்படியே ஸ்வாமி...." என்று திருவை வாங்கிக் கொண்டு கந்தாடையாண்டான் புறப்பட்டார்.....

ஒரு பெரும் வட்டம் சுற்றி வந்து நின்றாற்போல் இருந்தது ராமானுஜருக்கு.... நூற்றி இருபது வருட தேகயாத்திரை என்பது சிறிதல்ல....தேகமும்.... உள்ளமும் சலிக்காது ஒத்துழைக்காமல் இது சாத்தியமும் அல்ல.... ஒரு பிரமாண்ட கனவும் அதன் புனிதமும்.... மேலான மனிதகுலநேயமும் அதைச் சாத்தியமாக்கியது ....

சரணகதியே சர்வரோக நிவாரணி என்று அவர் முன்வைத்த தீர்வும்.... பேதமற்ற பேருலகு சார்ந்த பெரும் கனவும் மக்களைக் கவர்ந்தன.... தன்னலமற்ற சேவையில் விளைவது வைணவம்.... பேதம் காணாத விரிந்த மனமே அதன் அடையாளம்.... இங்கு வாழும் தேக யாத்திரையிலும் சரி ....தேகம் துறந்த ஆத்மயாத்திரையின் இறுதியில் அடையும் இடமானாலும் சரி....ஒளி பொருந்தியதாக ...... திருப்தி தருவதாக..... ( வாழும் போதும்.... வாழ்க்கைக்குப் பின்னும்) அர்த்தம் மிக்கதாக அமைய.... எளிய உபாயம் "சரணாகதி " என்ற குழப்பமற்ற வழி காட்ட லே அவர் வாழ்வின் சாரம்சமானது.....

போதுமே.....?இனியும் சுமந்து கிடக்க வேண்டாமே.... என்று அவருக்குத் தோன்றியது.... ஒரு கணம் தான்.... சட்டென்று அவர் திருமேனி நடுங்கித் தளர்ந்து போனது..... அது தை மாதம்..... அன்று பூச நட்சத்திரம்....

புரிந்துவிட்டது..... ஸ்ரீபெரும்புதூரில் அவரது சக்தி வடிவ திரு மேனித்திரு பிரதிஷ்டை நடந்து கொண்டிருந்தது..... மானசீகத்தில் அதை உணர்ந்த உடையவர்.... உடனே கிளம்பி கோயிலுக்குப் போனார்....

காஞ்சியை விட்டு வந்த நாளாகக் காத்து நிற்கும் கரிய பெருங் கடவுள்.... கண்ணழகன்..... கமல இதழழகன் .... அரவணைத்துக் காக்கும் கரத்தழகன்..... ஜீவநதியெனப் பொங்கும் கருணை குணத்தழகன்.... என்றும் பெரியவன்.... அனைத்திலும் பெரியவன்.....

சன்னதிக்குச் சென்று கரம் கூப்பி நின்றார்...." பெருமானே..... போது மே....?

என்ன கேட்டாலும் அடுத்தகணம் பதிலளிக்கும் அரங்கப் பெருமான் அன்று அமைதியாக இருந்தார்....

"கடமைப்பட்ட அனைத்தையும் செய்திருக்கிறேன்..... வைணவ தருமம் தழைக்கப் பொருத்தமான எழுபத்தி நான்கு சிம்மாசனாதிபதிகளை நியமித்திருக்கிறேன்.... அந்த தலைமுறை காலாகாலத்துக்கும் தொடரும்.... திருக்கோயில் நடைமுறைகள் ஒழுங்கு செய்து கொடுத்திருக்கிறேன்.... இதுவும் தழைக்கும்.... வைணவத் தல ஆக்கிரமிப்புகள் இனி இராது.... அப்படியே நிகழுமானால் தட்டிக் கேட்கவும் ... தடுத்துப் போரடவும்.... எதிர்வரும் தலைமுறை தயாராக இருக்கும்.... அதற்கான சித்தாந்த பலத்தை அளித்து.... ஆத்ம நிவேதன உபாயங்களைச் சொல்லித் தந்திருக்கிறேன்.....

இப்போதும் அரங்கன் அமைதியாகவே இருந்தார்.....

"எம்பெருமானே... தோள் துவண்டு யாம்... உம்மிடம் வந்து நிற்கவில்லை.... சுமக்க ஏராளமான தோள்கள் காத்திருக்கிறபோது ... விட்டுத் தந்து அழகு பார்க்க நினைக்கிறேன்.... கூரே சருக்கு கேட்டதும் கொடுத்தாயே...? அந்த பாக்கியம் அடியேனுக்கில்லையா... 

இப்போது.... அவன் குறிப்பால் உணர்த்தினான்...."சரி.... இன்னும் ஏழு தினங்கள் "

கரம் குவித்து.... வணங்கி விடைபெற்றார் ராமாநுஜர்.... மடத்துக்கு திரும்பும்போது மிகுந்த உற்சாகமாக இருந்தார்.... இன்னும் ஏழு தினங்களையும் அர்த்தமுள்ளதாகச் செய்ய வேண்டும்....." எம்பெருமான் திருவாசல் திறந்து விடுவான்"

தேசமெங்கும் பரவியிருக்கும் தமது சீடர்கள் அனைவரையும் திருவரங்கம் வரச் சொல்லி செய்தி அனுப்பினார் .....

"உய்ய ஒரே வழி உடையவர் திருவடி"

"எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்"

திருநின்றவூர் ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் திருவடிகளே சரணம் ... !!!மாசி ஸ்ரவணம் ..

ஶ்ரீராம காவியம்~~~~~~~~ராமர் கதை 06



ஸ்ரீராமர் கதை - கன்னடத்தில்
(கீழே தமிழ் விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது)
                              
      ஸ்ரீ ராம தேவர கதெ

     (தமிழ் எழுத்துக்களில்)
பகுதி - 6
(நேற்றைய பகுதியின் தொடர்ச்சி)

★ஆக கேசவ பட்டனு காசிகே ஹோகி பர்த்தேனந்த ஹேளி, தன்ன மகன்ன கூகி, "அப்பா! நானு காசிகே ஹோகி பர்த்தேனே. நீனு எரடு வேளையு நின்ன தாயிகேஸ்ரீ ராம தேவர கதையன்ன ஹேளு! " எந்து  ஹொரட்டு ஹோதனு.

★ஆ-மேலே நாராயண பட்டா ஸ்நான மாடி ஜபதபகளு ஆத மேலே தன்ன தாயன்ன கூகி, அம்மா! ஸ்ரீ ரா தேவர கதையன்ன ஹேளுதேனே கேளு பா! " எந்தனு. ஆக அவன தாயி,  அப்பா! மக்களிகே அன்ன ஹாக பேகு, கருவுகளிகே ஹுல்லு ஹாக பேகு, கெலசகளு இரவாகே கதை ஏனு பேகாகிதே! கதை பேடா, ஒந்து பேடா,  நீ ஊட்டக்கே பந்து கூடு " எந்தளு!

★ நாராயண பட்டனு தாயி மேலே சிட்டியிந்த (கோபதிந்த)  ஜெகிலி மேலே கூது கொண்டு புஸ்தக பாட மாடுதா இத்தா. 

★சாயங்கால வாகிது. சந்த்யாவந்தனகளு ஆதமேலே, மத்து தாயன்ன நோடி, அம்மா! ஸ்ரீராம தேவர கதையன்ன ஹேளுதேனே, ஈகாகிலு பந்து கேளு பா!" எந்தனு. 

★ஆக ஆ தாயி, மக்களிகே அன்ன ஹாக பேகு, கருவுகளிகே ஹுல்லு ஹாக பேகு, கருவு பிட பேகு! இஷ்டு கெலசகளு இரோவேளே கதை பேடா, ஒந்து பேடா,  நீனு ஊட்டா மாடி மலகு ஹோகு " எந்தளு.

★ நாராயண பட்டா தாயி மேலே சிட்டியிந்த ஊட்டவன்ன மாடி ஜெகிலி மேலே மலிகொண்டா!

★மறுதின பெளகாகிது. மனெயெல்லா காலியாகிது! மனேலி யாவ சம்பத்துகளு இல்லா. அவன தாயி மகன கூகி,  "அப்பா! மனெயெல்லி இத்த சம்பத்துகளெல்லா காணலில்லா. நமகே மத்து படதன பந்து.நீனு நாலகு மனெகே ஹோகி பிக்ஷக்கே பேடி பா!" எந்தளு! . 

★நாராயண பட்டா ஒடுகு தம்பிகே தொகண்டு பிக்ஷே பேடி பந்தா. தாயி அ-அக்கியன்ன வடது கஞ்சி காசி எல்லரிகே கொட்டு தானு குடதளு! ஹீகே கெலவு திவசவாயிது!.     

★ஆக, காசிகே ஹோத கேசவ பட்டனு பந்து சேரிதா!  நோடிதா,  மனெயெல்லா படதனவாகிதே, ஏனோ ஈ-அவஸ்தே,  இந்தா அவஸ்தே பந்து எஷ்டு திவசவாகிது , எந்து மகன்ன கூகி கேளிதா!


இதற்கான தமிழ்
விளக்கம்:-

அப்படியிருக்கும்போது ஒரு நாள் கேசவபட்டன் தான் காசிக்கு சென்றுவருவதாக அனைவரிடமும் கூறியபின் தன் மகனை அழைத்து "அப்பா! நான் காசிக்குச் சென்றுவருகிறேன்.நீ காலை மாலை ஆகிய இரண்டு வேளைகளிலும் உன்னுடைய தாயாருக்கு ஶ்ரீராமரின் கதையை மறவாமல் கூறு" எனக்கூறி விட்டு புறப்பட்டுச் சென்றான்.

அதன் பின்னர். கேசவபட்டன் மகன் நாராயணபட்டன் குளித்து முடித்து பூஜைகள் முதலானவற்றை செய்து தன் தாயாரை அழைத்து "அம்மா! ஶ்ரீராமஸ்வாமியின் கதையை கூறுகிறேன். கேட்க இங்கு வாருங்கள்"  என்றழைத்தான். அதற்கு"மகனே! நமது வீட்டு குழந்தைகளுக்கு சாப்பாடு வைக்க வேண்டும். மாடு, கன்றுகளுக்கு புல் போட வேண்டும். இன்னும் நிறைய வேலை இருக்கும்போது கதை என்ன வேண்டியிருக்கிறது. கதையும் வேண்டாம்.ஒன்றும் வேண்டாம்.நீ வந்து சாப்பிட உட்கார்" என அவன் தாயார் பதிலுரைத்தார்.

நாராயணபட்டன் தாயாரின் மேல் வருத்தம் கொண்டு திண்ணை மேலமர்ந்து புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தான்.

மாலைநேரமாயிற்று. மறுபடி ஸ்நானஸந்தியாவந்தனங்கள் முடிந்தபின் தாயைப் பார்த்து"அம்மா! ஶ்ரீராமரின் கதையை கூறுகிறேன். இந்த சமயத்திலாவது இங்கு வந்து கதையை கேட்க வாருங்கள்" என்றான்.

அப்போது அவனின் தாய் "குழந்தைகளுக்கு சாப்பாடு போட வேண்டும். மற்றும் மாடுகளுக்கு புல் போட வேண்டும். கன்றுக்குட்டியை பால் குடிக்க விடவேண்டும். இவ்வளவு வேலைகள் இருக்கும்போது கதையும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம். நீயும் சாப்பிட்டு விட்டு போய் தூங்கு" என்றாள்.

நாராயணபட்டன் தன் தாயின் மேல் கோபமுற்று சாப்பிட்டு விட்டு திண்ணைமேல் படுத்து உறங்கினான்.

மறுநாள் காலை விடிந்தது. வீட்டில் எந்தப் பொருட்களும் இல்லை. காணவில்லை. நாராயணபட்டனின் தாய் மகனை கூப்பிட்டு வீட்டில் இருந்த அனைத்து சம்பத்துகளும் காணோம். நாம் மீண்டும் ஏழைகள் ஆகி விட்டோம். ஆகவே நீ நான்கு வீடுகளுக்குச் சென்று பிட்சை வாங்கி வா என்றாள்.

நாராயணபட்டன்   அங்கிருந்த ஒரு நசுங்கிய சொம்பை எடுத்துக் கொண்டு பிட்சை கேட்டு வந்தான். அவனது தாயார் அந்த அரிசியை உடைத்து குருணை ஆக்கி அதைக் கொண்டு கஞ்சி  காய்ச்சி அனைவருக்கும் கொடுத்து தானும் சிறிது உண்டாள். இப்படியே சிலகாலம் கழிந்தது.  

அப்போது காசிக்குச் சென்ற கேசவபட்டன் திரும்பி வந்தான். பார்த்தான். தன் வீடெல்லாம் ஏழ்மை சூழ்ந்து இருப்பதைக் கண்டான். ஏன் இந்த கஷ்டமான நிலமை. எவவளவு நாட்களாக இந்த கஷ்டத்தில் இருக்கிறீர்கள் என்று மகனை அழைத்துக் கேட்டான்.

நாளை..................