Monday, 28 March 2016

கடவுள் பக்தி என்றால் என்ன?

Thanks to
Rajesh Muthu Samy SI
https://www.facebook.com/rajesh.muthu.92?fref=nf


பூலோகத்தில் ஒரே தெருவில் ஒரு செருப்பு விற்கும் தொழிலாளியும், ஒரு செல்வந்தரும் இருந்தனர். செருப்புத் தொழிலாளி தினமும் தான் செருப்புக் கடையின் ஓரத்தில் பெருமாள் படம் ஒன்றை வைத்து அதை வணங்கி வந்தான்.
செல்வம் இல்லாவிட்டாலும் சந்தோசமும் மன அமைதியுடனும் இருந்தார். செல்வந்தரோ தினமும் காலையில் குளித்துவிட்டு, பல மணி நேரம் பூஜை புனஸ்காரம் எல்லாம் செய்வார். பல தலைமுறைக்கு காணும் செல்வம் இருந்தும் நிம்மதியின்றி வாழ்ந்து வந்தார்.
ஒரு நாள் நாரத முனிவர் விஷ்ணுவைப் பார்த்து ”அந்தச் செல்வந்தர் மிகுந்த பக்திமானாக இருக்கிறார்; தினமும் உங்களுக்குப் பல மணி நேரம் பூஜை எல்லாம் செய்கிறார். அவர் நிம்மதியாய் வாழ, ஏதாவது செய்யக்கூடாதா?” என்றார்.
விஷ்ணுவும் அதற்குச் சம்மதித்துவிட்டு நாரதரை பூலோகத்துக்கு அனுப்பினார். போகும்போது நாரதரைப் பார்த்து, “நீங்கள் கீழே சென்று, ‘நான் நாரயணனிடமிருந்து வருகிறேன்,’ என்று செல்வந்தரரிடம் சொல்லுங்கள்.
அவர் ‘தற்பொழுது நாராயணன் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?’ என்று கேட்பார். அதற்கு நீங்கள் ‘நாராயணன் தற்போது ஓர் ஊசியின் காது வழியாக யானையை நுழைத்துக்கொண்டு இருக்கிறார்’ என்று பதில் சொல்லுங்கள்” என்று சொல்லி அனுப்பினார்.
”அப்படியே அந்தச் செருப்பு தைக்கும் தொழிலாளியையும் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிடுங்கள்” என்று சொல்லி அனுப்பினார் விஷ்ணு.
நாரதரும் முதலில் அந்தச் செல்வந்தரின் வீட்டுக்கு சென்றர். பூஜை எல்லாம் முடித்துவிட்டு வந்த செல்வந்தர், நாரதரிடம், “நீங்கள் யார்?” என்று கேட்க, நாரதர் தான் நாரயணரிடமிருந்து வருவதாகச் சொல்கிறார்.
அதற்கு அந்தச் செல்வந்தர் “தற்போது நாராயணன் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?” என்று கேட்க, நாரதரும், நாராயணன் ஒர் ஊசியின் காதுவழியாக யானையை நுழைத்துக்கொண்டு இருப்பதை பார்த்தாகச் சொல்கிறார். அதற்கு அந்த செல்வந்தர் “அது எப்படி முடியும்? இது என்ன நடக்கிற காரியமா?” என்று கேட்டார்.
நாரதர் அடுத்தது அந்தச் செருப்புத் தொழிலாளியைப் பார்க்கச் சென்றார்.
அவரிடமும் இதே சம்பாஷணை நடைபெற்றது. ஆனால் கடைசி பதிலுக்கு அந்தச் செருப்புத் தைக்கும் தொழிலாளி, “இதில் என்ன விந்தை? ஒரு பெரிய ஆலமரத்தை சின்ன விதையில் அடக்கியவர், பிரபஞ்சத்தை தன் வாயில் காண்பித்தவர், அவருக்கு யானையை ஊசியில் நுழைப்பது என்ன பெரிய விஷயமா?” என்று பதில் சொன்னார்.
அவர்கள் இருவரும் சொன்ன பதிலை நாராயணனிடம் வந்து சொன்னார் நாரதர். கடவுள் பக்தி என்பது, பூஜை, புனஸ்காரங்கள் செய்வது மட்டுமில்லை.
இறைவனின் பாதத்தை பூரண நம்பிக்கையுடன், நீயே சரணம் என்று பற்றுவதே ”உண்மையான பக்தி” இப்பொழுது தெரிகிறதா? ஏழையின் நிம்மதிக்கு காரணம் என்று பதிலளித்தார் நாராயணன்.
--- என்றும் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் சேவையில் --

சொல்லின் செல்வன் அனுமன்


Sri Prakash Sri Prakash's photo.

ராமபிரானும், லட்சுமணனும் சபரி சொன்ன வழியில் நடந்து, ரிஷியமூக மலையை அடைந்தனர். வாலிக்குப் பயந்து ஒளிந்துகொண்டிருந்த சுக்கிரீவன், இவர்கள் வாலியின் ஆட்கள் எனத் தவறாக எண்ணிக் குகையில் மறைய, அமைச்சனான அனுமன், சாதாரண வடிவில் சென்று உண்மையை அறிந்து வருகிறேன் என்று சுக்கிரீவனிடம் கூறிச் சென்றான்.
 
தொலைவிலிருந்து இருவரையும் கண்ட அனுமன், இவர்கள் திரிமூர்த்திகளோவென்று ஐயமுற்றான். இவர்களுக்கு நிழல் பரப்பிப் பறவைகளும் பறந்து வருகின்றன. கொடிய விலங்குகளும் சாந்தமாகி இவர்களைத் தொடர்ந்து வருகின்றன. இவர்களது திருவடி பட்ட அளவில் சுடுகற்களும் மலர்போலக் குளிர்ந்து மென்மையாகின்றன. கம்பீரத்தில் இந்திரனிலும், நல்லொழுக்கத்தில் தருமனிலும், வடிவழகில் மன்மதனிலும் மேம்பட்டு விளங்குகின்றனர். தம் மனதுக்கியைந்த ஒரு பொருளைத் தேடி வருகின்றனர்.

பிறவித் துன்பங்களைப் போக்கி, அவைகளுக்குக் காரணமான, அறியாமையால் உண்டாகிற பழைய கருமத்தை ஒழித்து, வீடுபேற்றை அடையச் செய்யும் தேவர்கள் இவர்கள். இவர்களைக் கண்டது முதல் எனக்கு எலும்பும் கரைகிறது. அளவில்லாத பக்தி மேன்மேலும் மிகுகின்றது. இவர்களிடம் எனக்கு உண்டாகும் அன்புக்கு எல்லை இல்லை என்று உணர்ந்தான்.
அன்பு அடையாளம் காட்டும் முன்னொரு சமயம் வாயு பகவான் தன் மைந்தனான அனுமனிடம், “நீ திருமாலுக்கு அடிமை செய்” என்று கூற, அனுமன், “திருமாலை நான் அறிவது எப்படி?” எனக் கேட்க, “உனக்கு எவரைக் கண்ட மாத்திரத்தில் அளவில்லாத அன்பு உண்டாகிறதோ, அவரே திருமால் என்பதை அறியலாம்” என்று உபதேசித்திருந்தார். அந்நிலை தற்போது அனுமனுக்கு ஏற்பட்டது.என்பு எனக்கு உருகுகின்றது இவர்கின்றது அளவில் காதல் அன்பினுக்கு அவதி இல்லை அடைவென் கொல் அறிதல் தேற்றேன்
(கிட்கிந்தா காண்டம் - அனுபவபடலம் 15.)என்று இதனைக் கம்பனும் குறிப்பிடுகிறார்.

சூரிய பகவானிடம் நவ வியாக்கிரணங்களையும் கற்ற நுட்ப அறிவினனாகிய அனுமன், இருவரையும் மேலும் நெருங்கி, அவர்களின் உள்ளக் கருத்தையும் ஆழ்ந்து அறிந்தான். அப்போது அவர்களைச் சந்தித்து, “உங்கள் வரவு நல்வரவாகக் கடவது” என்றான் அனுமன். அதற்கு ராமபிரான், “நீ எங்கிருந்து வருகிறாய்? நீ யார்?” எனக் கேட்டார்.

அதற்கு அனுமன், “நீர் கொண்ட காளமேகம் போன்ற அழகிய திருமேனியுடைய பெருமாளே! உன் திருக்கண்கள் உன்னைத் தவறாக நோக்கும் பெண்களுக்கு நஞ்சுபோல் உள்ளன. சாதாரணத் தாமரை மலர் காலையில் மலர்ந்து மாலையில் பனி வந்ததும் வாடிவிடும்; ஆனால் உன் திருக்கண்களோ இன்பம், துன்பம் எது நேர்ந்தாலும் வாடாதவையாக உள்ளன. அப்படிப்பட்ட பெருமைக்குரிய திருக்கண்களை உடையவனே! நான் வாயு தேவனுக்கு அஞ்சனாதேவியின் வயிற்றில் பிறந்தவன். என் பெயர் அனுமன் என்பதாம். இம்மலையில் வசிக்கும் சுக்கிரீவன் உங்கள் வருகையைப் பார்த்துக் கலக்கமுற்று, விசாரித்து வருமாறு ஏவினான். அதனால் நான் வந்தேன்” என்று பணிவுடன் கூறினான்.

அனுமன் கூறிய இந்த விடை செய்யுள் 17-ல் வருகிறது. இதன் முதல் மூன்று அடிகள்தான் அவனுக்குச் `சொல்லின் செல்வன்` என்னும் பட்டத்தை ஸ்ரீராமர் வழங்கக் காரணமாயிருந்தன.
இத்திரு துறந்து ஏகு
மஞ்சு எனத் திரண்ட கோல மேனிய மகளிர்க்கெல்லாம்
நஞ்சு எனத் தகையவாகி நளிர் இரும் பனிக்குத்தேம்பாக்
கஞ்சம் ஒத்து அலர்ந்த செய்ய கண்ண.
சூர்ப்பனகை காமநோக்குடன் ராமனை நோக்கினாள். அது அவளுக்கு நஞ்சாயிற்று.சாந்தம் என்னும் மெய்ப்பாடு தசரதன், `ராமா மெய்த்திருப்பதம் மேவு` என்றான். கைகேயி, `இத்திரு துறந்து ஏகு` என்றாள். இவ்விரு நிலையிலும், சாந்தம் என்னும் மெய்ப்பாடு தோன்ற நின்றான் ராமபிரான். சாதாரணத் தாமரை போல் காலையில் மலர்தலும், மாலையில் கூம்பலும் இன்றி இன்பம் வந்தபோது மகிழாமலும், துன்பம் வந்தபோது துவளாமலும் ராமன் இருந்தான்.
இவற்றையெல்லாம் நுட்பமாக உணர்ந்த அனுமன் தன்னைப் பற்றிக் கூறுவதைக் கேட்ட ராகவன், தம்பியைப் பார்த்து, “தம்பி, இவன் கல்லாத கலையும், வேதக்கடலும் உலகில் இல்லாதனவே. யார் கொல் இச் சொல்லின் செல்வன்” என்று வியந்து பாராட்டினான். கண்டதும் கணப்பொழுதில், ‘சொல்லின் செல்வன்’ என்று ராமனிடம் இருந்து விருது பெற்றவன் அஞ்சனையின் மைந்தன் அனுமன்.

ஸ்ரீ கிருஷ்ணா உன் திருவடிகளே சரணம்

குருஷேத்திரத்தில் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும், பாண்டவர்களிடம் கௌரவர்கள் தோல்வியடைந்துவரவே, பெரிதும் கலக்க முற்ற துரியோதனன், மறு நாள் பீஷ்மர் எப்படியாவது அர்ச்சுனனைக் கொன்று விடவேண்டுமென்ற வாக்குறுதியைப் பெற்றுக்கொண்டான். பீஷ்மரும் அவ்வாறே சபதம் எடுத்துக் கொண்டார். பீஷ்மரின் சபதத்தையறிந்த கிருஷ்ணர், அவர் அதை நிறைவேற்ற முடியாமல் தடுக்க ஒரு திட்டம் போட்டார். கிருஷ்ணர் திரௌபதியிடம் “நீ எப்படியாவது பீஷ்மர் தங்கியிருக்கும் பாசறைக்குச் சென்று அவர் பாதங்களைத் தொட்டு நமஸ்கரித்து அவர் ஆசியைப் பெற்றுவிடு. நீ அங்கு செல்லும்போது காலணிகளை அணிந்து கொள்ளாதே. அப்படிச்சென்றால் வந்திருப்பது நீதான் என்பதை அவர் அறிந்து கொண்டுவிடுவார். என் திட்டமும் நிறைவேறாமல் போய்விடும்’’ என்று கூறி, திரௌபதியின் காலணிகளை வாங்கி வைத்துக் கொண்டார்.
கும்மிருட்டான இரவு நேரத்தில் பாசறையில், கட்டிலில் படுத்துக்கொண்டிருந்த பீஷ்மரின் பாதங்களைத் துழாவிக் கண்டுபிடித்த திரௌபதி, அவரது பாதங்களைத் தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டு நமஸ்கரித்து எழுந்தாள். இருட்டில் உருவம் தெரியாவிட்டாலும் தன் பாதங்களைத் தொட்டு வணங்கியவள் ஒரு பெண்மணி என்பதை அறிந்து உடனே பீஷ்மர், திரௌபதியை ஆசிர்வதித்து, தீர்க்க சுமங்கலி பவ! என்று சொல்லிவிட்டார். பிறகுதான் பீஷ்மர், விளக்கின் ஒளியைத் தூண்டிவிட்டு, தன்னிடம் ஆசிர்வாதம் வாங்கியவள் திரௌபதி என்பதை அறிந்தார். திரௌபதி தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டுமென்று பீஷ்மாச்சாரியரே ஆசிர்வதித்த பிறகு, இனி அவர் அர்ச்சுனனை எவ்வாறு கொல்ல முடியும்? முடியாதே!
இவ்வாறு, தன் சபதத்தை நிறைவேற்ற முடியாமல் ஸ்ரீ கிருஷ்ணர்தான் செய்திருப்பாரென்று ஊகித்து திரௌபதியுடன் வெளியே வந்த பீஷ்மர், கிருஷ்ணரை வணங்கினார். அவரது திருக்கரத்திலிருந்த திரௌபதியின் காலணிகளைக் கண்டு திடுக்கிட்டு ‘’பகவானே! இவ்வுலகமே தங்கள் திருவடிகளை வணங்கும்போது தாங்கள் திரௌபதியின் காலணிகளை ஏந்தி நிற்பதா?’’ என்று வினவ ‘’பீஷ்மரே! திரௌபதியும் அர்ச்சுனனும் என் பக்தர்கள். என் பக்தர்களுக்காக நான் எதையும் செய்வேன்!’’ என்று பதிலளித்தார்.
ஆம்! அது உண்மைதான் ! கிருஷ்ணர் தம்மையே சரணடையும் பக்தர்கள் யாராயிருந்தாலும் கைவிடாமல் தக்க சமயத்தில் துணையிருந்து காப்பாற்றுவார்.

Saturday, 19 March 2016

Thanks MR.Vijayaraghavan Krishnan From FB



                                   அரங்கன் திருஉருவப்படம் வரைந்த முதியவர் ....




இன்று கருட சேவையை முன்னிட்டு மிக அதிகப்படியான மக்கள் கோவில் முழுதும் காத்து கொண்டு இருந்தார்கள்.ஒரே ஒரு பெரியவர் மட்டும் மூடிய திரையை நோக்கி உரத்த குரலில் வேண்டிக்கொண்டு இருந்தார்..

நமது கோவில் கருட மண்டபத்தில் அரங்கன் கோவில் வரலாறு பற்றிய பெரிய பெரிய படங்களை பார்த்து இருப்பீர்கள்...அவற்றை வரைந்தவர் இவரே!! - 

திரு.முருகன் - ஸ்ரீ கணேசன் கலைக்கூடம் மலைவாசல் - மலைக்கோட்டையிலும் இவர் வரைந்த படங்கள் பல ஆனாலும் திருவரங்கத்திற்கும் உச்சிப்பிள்ளையாரும் உள்ள வரலாற்றின் தொடர்பை தத்ரூபமாக படம் வரைந்த முதல் சித்திர கலைக்கூடம் 
 
அதுமட்டுமன்றி பல கோவில்களில் பெரிய பெரிய (10 அடிக்கு 12 அடி) படங்களை வரைந்து வைத்தவர் ஹோட்டல் சரவணபவன் எல்லாவற்றிலும் இவர் எழுதிய பெரிய படங்களே இருக்கும்!!திருச்செந்தூர், திருபரம்குன்றம் போன்ற கோவில்களிலும் இவர் எழுதிய பெரிய படங்களே உள்ளன..

ஸ்ரீரங்கத்தில்அந்த படங்களை தற்போது கழட்டி விட்டனர்.. 
அதனால் வருத்தப்பட்டு அரங்கனிடம் கண்ணீர் மல்க வேண்டினார்.. 
அதை திரும்பவம் மாட்டி வைக்க!!! 
அந்த  ரங்கனிடம் நாமும் ப்ராத்திப்போமாக !!!!!




Source :
https://www.facebook.com/photo.php?fbid=10209247881811512&set=ms.c.eJxV00GOBSEIBNAbTawCBO5~%3BsSlXv3rTJi~_CgDYOzzJ7Jrio3D~%3B85DxJEwxQoMnVnguL2tOBjnKpJ8dEK~%3Bp6VBIY0uUWJsKkrvZUm9xtzMJEWbHHM~%3BcG1IfJZmHrl3nPSWC7XXTWDk2Ipj4uVCNMlwuesCgcRdGjgJbcjwwkHsVb5FiFiG0GrokmxqBHVQWjyqS1xqbLi9p2UT1q32SnmNdOf31rpYsyZVsUUc06VqF6WlakS4fEKlRPknTRvbO8d2YqT69Jvaj1qMni7XGJltzPnpVYntBbpb~%3BVJy25LppGh2XW0dozcNHt9H5Ed9pjc45RzZqbiX4MboaLdqz9g5vv9B07PakJHlpU3os3RhPdciDbZfVbXusrV0J~%3BUbo81e33pZG~_Tj4yemQz~%3B7EA2ZY~-.bps.a.10209247878691434.1073741943.1155614431&type=3&theater

பகவானே எல்லாம் உன் சித்தம் என்று சொல்வது ஏன் தெரியுமா?


மகாபாரத யுத்தத்தின் போது, ஜயத்ரதன் என்பவனை,சூரிய அஸ்தமனத்துக்குள் கொன்று விடுவேன் அல்லது தீக்குளிப்பேன் என சபதம் செய்தான் அர்ஜுனன்.


அன்று காலையிலிருந்தே மறைவாகவே இருந்தான் ஜயத்ரதன். துரியோதனன்,கர்ணன் போன்றோர் அவனுக்கு பாதுகாவலாக இருந்தனர்். அர்ஜுனனால் அவனை நெருங்கவும் முடியவில்லை.அவனிருக்கும் இடமும் தெரிய வில்லை.மாலை நேரமும் நெருங்கியது.

" என்ன கிருஷ்ணா...சூரியன் அஸ்தமிக்கும் நேரமாகிறதே.!...
ஜயத்ரதனை எப்படிக் கொல்வது,"என்றான் அர்ஜுனன்.


சக்ராயுதத்தால் சூரியனை மறைத்தார் ,பகவான்.இருள் சூழ ஆரம்பித்தது.இதைப் பார்த்த ஜயத்ரதன் குதூகலித்தான் "சூரியன் அஸ்தமித்து விட்டான்.இனி அர்ஜுனன் தீக்குளித்து விடுவான்"என்ற எண்ணத்தில் தலையை வெளியே நீட்டினான்.உடன் அர்ஜுனனைப் பார்த்து,
 

" அதோ ஜயத்ரதன் தலை தெரிகிறது ஒரே அம்பால் அவன் தலையைக் கொய்து,தலை கீழே விழாமல் ,அருகில் சமந்த பஞ்சகத்திலுள்ள விருத்தட்சரன் என்பவருடைய மடியில் தள்ளு." எனறார் கிருஷ்ணர்.

ஜயத்ரதனுடைய தகப்பனார் தான் விருத்தட்சரன். தனது கோரமான தவப்பயனால்,ஜயத்ரதனைப் பெற்றார். அவன் பிறக்கும் போது ஒரு அசரீரி ஒலித்தது."உன் புத்திரன் மகாவீரனாக எல்லோராலும் கொண்டாடப் படுவான். மிக்க கோபமும்,பராக்ரமும் உள்ள வீரன் ஒருவனால்,அவன் தலை அறுபட்டு மாள்வான்." என்றது.இதைக்கேட்ட விருத்தட்சரன்,தன் தவ வலிமையால்
  

"யுத்தகளத்தில் எவன் தன் பிள்ளையின் தலையை கீழே தள்ளுகிறானோ,அவன் தலை நூறு சுக்கலாகி வெடிக்கும்" எனறு சாபமிட்டிருந்தான்.

இந்த விபரத்தை அர்ஜுனனுக்கு சொல்லி
" உன்னால் அறுபட்டு இந்தத்தலை கீழே விழுந்தால்,உன் தலை வெடித்து விடும்.அதனால் அருகிலுள்ள அவன் தகப்பனார் விருத்தட்சரன் மடியில் அந்தத் தலையைத் தள்ளு ,"எனறார் கிருஷ்ணன்.


அர்ஜுனனும் அப்படியே செய்தான்.அந்த சமயம் விருத்தட்சரன் பூமியில் அமர்ந்து சந்தியோபாசனம் செய்து கொண்டிருந்ததால்,மடியில் தலை விழுந்ததை கவனிக்கவில்லை.
பிறகு அர்க்யம் கொடுப்பதற்காக எழுந்த போது, அவரது மடியில் ஏதோ கனமாக இருப்பதைக் கண்டு கீழே தள்ளினார். அது பூமியில் விழுந்தது. தன் மகன் தலையைக் கீழே தள்ளுபவனின் தலை நூறு சுக்கலாகி வெடிக்கும் என்ற சாபத்தால், விருத்தட்சரனின் தலை வெடித்துச் சிதறியது.
நாம் என்னதான் சூழ்ச்சி செய்தாலும்,சாமர்த்தியமாக நடந்து கொண்டாலும், அதைத் தீர்மானம் செய்வதும், நடத்திவைப்பதும் பகவான் தான். 

அதனால் எல்லாப் பொறுப்புகளையும்,பகவானிடம் ஒப்புவித்துவிட்டு, "பகவானே.! உன் சித்தம்.! எது நல்லதோ,அதைச் செய் என்று சொல்லி,அவனைச் சரணடைந்தால் போதும். நம்மைக் காப்பாற்ற வேண்டியது அவன் கடமை.அவன் செய்வான்....

"ஸ்ரீ கிருஷ்ணா உன் திருவடிகளே சரணம்"

திருநறையூர் என்னும் நாச்சியார்கோயில். பஞ்ச கிருஷ்ண க்ஷேத்ரங்களுள் முதலாவது.


முக்தி தரும் 12 தலங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.
திருமணதோஷ பரிகாரத் தலம் - மேதாவி மகரிஷியின் மகளாக அவதரித்த தாயாரை திருமால் திருமணம் புரிந்து கொண்ட தலம். செல்வவளம் - உற்சவர் தாயார் கையில் கிளியை ஏந்தி, இடுப்பில் "சாவிக்கொத்து" வைத்தபடி அருள்பாலிக்கிறாள். இவள்தான் அனைத்தையும் நிர்வாகம் செய்கிறாள் என்பதால் வணங்குவோர்க்கு அனைத்து வளமும் தருபவள்.கல்கருட மூலவரே உற்சவராகவும் திகழும் விசேஷம். இவரை கருவறையில் இருந்து வெளியே எடுத்துச் செல்லும்போது முதலில் நான்கு பேர் இவரை சுமந்து வருவர். பின் அப்படியே 8,16,32 எனப்பெருகி இறுதியில் பலர் இவரைச் சுமக்கிறார்கள். இவர் வெளியிலிருந்து மீண்டும் கருவறை நோக்கி வரும்போது அதே எண்ணிக்கையில் ஆட்கள் குறைந்து பின் கருவறையில் 4 பேர் மட்டுமாக வைக்கின்றனர்.

செம் மொழி வாய் நால் வேத வாணர் வாழும்
திருநறையூர் மணிமாடச் செங் கண் மாலைப்
பொய்ம் மொழி ஒன்று இல்லாத மெய்ம்மையாளன்
புல மங்கைக் குல வேந்தன் புலமை ஆர்ந்த
அம் மொழி வாய்க் கலிகன்றி இன்பப் பாடல்
பாடுவார் வியன் உலகில் நமனார் பாடி
வெம் மொழி கேட்டு அஞ்சாதே மெய்ம்மை சொல்லில்
விண்ணவர்க்கு விருந்து ஆகும் பெருந் தக்கோரே

திருமண் மகிமை



கண்ணன் என்பவர் ஒரு கிராமவாசி. மூட்டை தூக்கும் தொழிலாளி. காலையில் வேலைக்கு போனால் இரவு நேரமாகி தான் வீட்டுக்கு வருவார். வேலை இருந்தால் தான் கூலி. அதுவும் சொற்ப அளவே! கண்ணன் மனைவி சீதை நரசிம்மபக்தை.அவள், தினமும் நரசிம்மர் ஆலயம் சென்று வணங்கி வருவாள்.நெற்றியில் திருமண் இடுவாள் அவள் தெருவில் நடந்தால் காண்பவர்கள் கையெடுத்து வணங்கி விட்டு போவார்கள்.ஏழைத் தொழிலாளியின் மனைவியானாலும், வறுமையை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டான்.தன் கணவரிடம், ""என்னங்க! நீங்க வேலைக்கு கிளம்புறதுக்கு முன்னாடி திருமண் இட்டுட்டு கிளம்புங்களேன், என்பாள்.கண்ணன் கேட்க மாட்டார். ""அடி போடி பைத்தியமே! நீ வேற! மனுஷன் காலையில் மண்டிக்கு போனா தான் மூட்டை இறக்க வாய்ப்பாச்சும் கிடைக்கும்.தாமதமா போனா இருக்கிற ஜீவனமும் போயிடுமே! என்பார்.இதன் பின் அவ்வூருக்கு ஒரு மகான் வந்தார்.அவர் திருமண் அணிவதின் மகிமை பற்றி பேசினார். இதைக் கேட்ட சீதை, கணவனிடம் இன்னும் பக்குவமாக எடுத்துச் சொன்னாள்.""நீங்க! திருமண் கூட இட வேண்டாம். காலையில், வேலைக்கு போகும் வழியில் திருமண் இட்டு யாராவது ஒருவர் முகத்திலாவது விழிச்சிட்டு போங்க, என்றாள்.கண்ணன் ஒப்புக்கொண்டதுடன் மனைவிக்கு இதுபற்றி சத்தியமும் செய்து கொடுத்தார்.அவ்வூரில் கோவிந்தன் என்ற விவசாயி தினமும் காலையில் நீராடி நெற்றி நிறைய திருமண் அணிந்து அதிகாலையே ஏர் சுமந்து வயலுக்கு செல்வதை கண்ணன் அடிக்கடி பார்த்துள்ளார்.
அவர் வரும்போது, கண்ணன் அவர் முகத்தைப் பார்த்து விட்டு, வேலைக்கு கிளம்புவார்.ஒருநாள் காலையில் கோவிந்தனைக் காணவில்லை. கண்ணன் திண்டாடி விட்டார். தாமதமா போனா வேலை கிடைக்காதே...என்ன செய்றது. ஒருவேளை கோவிந்தன் முன்கூட்டியே வயலுக்கு போயிருப்பாரோ என எண்ணி, வயலுக்கு ஓடினார்.அன்று ஏகாதசி என்பதால் காலையே கோவிந்தன் நரசிம்மர் தரிசனம் முடித்து விட்டு வயலுக்கு போய் ஏரைப் பிடித்தார்.ஏதோ ஒன்று தட்டவே, அவ்விடத்தை தோண்டி உள்ளிருந்து ஒரு இரண்டு புதையல் பாத்திரத்தை எடுக்கவும், கண்ணன் அங்கு போய் சேரவும் சரியாக இருந்தது.
தான் புதையல் எடுத்ததை கண்ணன் கவனித்து விட்டதைக் கண்ட, கோவிந்தன் கண்ணனிடம் ஒரு பாத்திரத்தைக் கொடுத்து சமஅளவில் இருவரும் வைத்துக் கொள்ளலாம் என்றார்.கண்ணன் அதற்கு ஒப்புக்கொள்ள வில்லை.திருமண் இட்டிருக்கும் உமது நெற்றியை பார்க்கவே வந்தேன்.மேலும் புதையல் அரசாங்கச் சொத்து. இதை மன்னனிடம் கொடுப்போம். அவனாக ஏதும் தந்தால், பிரித்துக் கொள்ளலாம், என்றார். இருவரும் மன்னனிடம் சென்றனர்.அவர்களின் நேர்மையை பாராட்டிய மன்னன், நடந்தது கேட்டு நாட்டு மக்கள் அனைவரும் திருமண் இட உத்தரவிட்டான்.அவர்களின் வறுமை நீங்கியது. நல்ல பழக்கங்கள் ஒருவரை வாழ்வில் உயர்த்தும்.நல்லதை செய்தால் மட்டுமல்ல, நல்ல பழக்க வழக்கமுடையவர்களை பார்த்தால் கூட வாழ்வின் நிலை உயர்ந்து விடும்........
"கோவிந்தன் திருவடிகளே சரணம்"

Friday, 11 March 2016

அனுமனுக்கும் நரஸிம்மத்துக்கும் உள்ள பலவிதமான ஒற்றுமைகள்.

இந்திரா செளந்திரராஜனின் அனுமன் மகிமையிலிருந்து.
 
எல்லா நரஸிம்மர் ஆலயத்திலும் அனுமனின் திருச்சந்நிதி கட்டாயம் இருக்கும். காரணம், 

அனுமனுக்கும் நரஸிம்மத்துக்கும் உள்ள பலவிதமான ஒற்றுமைகள்.

  • இருவருமே விலங்கு முகமும் மனித உடலுமானவர்கள்.
  • இருவருமே பெரும் வரசித்தி உடையவர்கள.
  • இருவருமே அசுரவதம் புரிந்தவர்கள்.
  • நரஸிம்மம் அழித்தது ஹிரண்யனை என்றால் , அனுமன் அழித்தது ராவண சேனையை..
  • நரஸிம்மம் ப்ரஹலாதனால் குளிர்ந்தது.. ஸ்ரீராமன் அனுமனால் குளிர்ந்தான்.
  • நரஸிம்ம மூர்த்திக்கும் யோகநிஷ்டை உண்டு. அனுமனும் யோகநிஷ்டை உடையவன்.
  • இருவருமே பெரும் பலசாலிகள். இதனாலேயே இருவரையும் ஒரே ஆலயத்தில் 'ப்ரதானம்-உபம்' என்று ஸ்தாபித்தார்கள்.
  • நரஸிம்மம் நல்ல வழி காட்டும். தீய சக்திகளை விரட்டும். அனுமன் மனோபலம் தருவான்.
  • நம்மை பலவீனப்படுத்தும் தீயசக்திகளையழித்து நல்வழியில் நாம் நடக்க மனோபலம் பெரிதும் தேவைதானே?

Thursday, 3 March 2016

நல்ல பிள்ளைகள் அமைந்தால் பெற்றவர்களுக்கு மட்டுமில்லை. அவர்களது வருங்கால சந்ததிக்கும் நல்லது.

 Thank to :
Sri Prakash Sri Prakash
மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்...
இரண்யனைக் கொல்வதற்காக நரசிம்மர் தூணில் இருந்து வெளிப்பட்டார். அதிபயங்கர உருவம். சிங்க முகம்...மனித உடல்...இதுவரை பார்க்காத வித்தியாசமான அமைப்பு. இதைப் பார்த்தார்களோ இல்லையோ...இரண்யனின் பணியாட்கள் தங்கள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு ஓடிவிட்டனர்.
தனிமையில் நின்ற இரண்யனை மகாவிஷ்ணு அப்படியே தூக்கி மடியில் வைத்தார். குடலைப் பிடுங்கி மாலையாகப் போட்டார். இதைக் கண்டு வானவர்களே நடுங்கினர். அவர்கள் நரசிம்மரைத் துதித்து சாந்தியாகும்படி வேண்
டினர். பயனில்லை. மகாலட்சுமி கூட அவர் அருகில் செல்ல பயந்தாள்.
""என் கணவரை இப்படி ஒரு கோலத்தில் நான் பார்த்ததே இல்லை. முதலில் யாரையாவது அனுப்பி அவரை சாந்தமாக்குங்கள், பிறகு நான் அருகில் செல்கிறேன்,'' என்றாள்.
அவர் அருகில் செல்லும் தகுதி, பக்தனான பிரகலாதனுக்கு மட்டுமே இருந்தது. தேவர்கள் அவனை நரசிம்மர் அருகில் அனுப்பினர். பிரகலாதன் நரசிம்மரைக் கண்டு கலங்கவில்லை. அவனுக்காகத்தானே அவர் அங்கு வந்திருக்கிறார்!
தன்னருகே வந்த பிரகலாதனை நரசிம்மர் அள்ளி எடுத்தார். மடியில் வைத்து நாக்கால் நக்கினார்.
""பிரகலாதா! என்னை மன்னிப்பாயா?'' என்றார்.
அவனுக்கு தூக்கி வாரிபோட்டது.
""சுவாமி! தாங்கள் ஏன் இவ்வளவு பெரிய வார்த்தையைச் சொல்லுகிறீர்கள்?'' என்றான்.
""உன்னை நான் அதிகமாகவே சோதித்து விட்டேன். சிறுவனான நீ, என் மீது கொண்ட பக்தியில் உறுதியாய் நிற்பதற்காக பல கஷ்டங்களை அனுபவித்து விட்டாய். உன்னைக் காப்பாற்ற மிகவும் தாமதமாக வந்திருக்கிறேன். அதற்காகத்தான் மன்னிப்பு,'' என்றார்.
இதைக்கேட்டு பிரகலாதனுக்கு கண்ணீர் வந்துவிட்டது.
""மகனே! என்னிடம் ஏதாவது வரம் கேள்,'' என்ற நரசிம்மரிடம், பிரகலாதன்,""ஐயனே! ஆசைகள் என் மனதில் தோன்றவே கூடாது,'' என்றான்.
பணம் வேண்டும், பொருள் வேண்டும் என அந்த மன்னாதி மன்னன் கேட்டிருக்கலாம். ஆனால், ஆசை வேண்டாம் என்றான் பிரகலாதன்.
குருகுலத்தில் அவன் கற்றது சம்பாதிக்க அல்ல! பண்பாட்டை வளர்த்துக் கொள்வதற்கு! பிரகலாதனின் இந்தப் பேச்சு நரசிம்மரின் மனதை உருக்கிவிட்டது. பகவானைக் கண்டு பக்தன் தான் உருகுவான். இங்கோ கோபமாய் வந்து, வேகமாய் இரண்யனின் உயிரெடுத்த பகவான் பக்தனைக் கண்டு உருகி சாந்தமாகிப் போனான் நரசிம்மப் பெருமான்.
""இந்த சின்ன வயதில் எவ்வளவு நல்ல மனது! ஆசை வேண்டாம் என்கிறானே!'' ஆனாலும், அவர் விடவில்லை. விடாமல் அவனைக் கெஞ்சினார், ""இல்லையில்லை! ஏதாவது நீ கேட்டுத்தான் ஆக வேண்டும்,''.
பகவானே இப்படி சொல்கிறார் என்றால், "தன் மனதில் ஏதோ ஆசை இருக்கத்தான் வேண்டும்' என்று முடிவெடுத்த பிரகலாதன், ""இறைவா! என் தந்தை உங்களை நிந்தித்து விட்டார். அதற்காக அவரைத் தண்டித்து விடாதீர்கள். அவருக்கு வைகுண்டம் அளியுங்கள்,'' என்றான்.
நரசிம்மர் அவனிடம்,""பிரகலாதா! உன் தந்தை மட்டுமல்ல! உன்னைப் போல நல்ல பிள்ளைகளைப் பெற்ற தந்தையர் தவறே செய்தாலும், அவர்கள் பரமபதத்திற்கு வந்துவிடுவார்கள். அவர்களின் 21 தலைமுறையினரும் புனிதமடைவர்,'' என்றார்.

லக்ஷ்மி வசிய கலசம்:


நாம் அனைவருமெ நம் வீட்டில் லக்ஷ்மி குடியிருந்து அருள ஆசைப்படுவோம், ஆனால் அதற்குரிய முறையை செய்வதில்லை, அதை முறையாகவும் செய்வதில்லை.
ஒரு சிறிய மண்கலசம்(மூடியுடன்) எடுத்து அதில் சிறிது உப்பு, சர்க்கரை, பச்சரிசி, புளி, பருப்பு, நவ தான்யம், புனுகு, குங்குமப்பூ, கஸ்தூரி, ஜவ்வாது, ஐம்பொன், சிறிய வலம்புரிசங்கு, வெற்றிலை பாக்கு,
இவை அனைத்தும் வியாழக்கிழமையெ வாங்கி வைத்துக்கொண்டு, வெள்ளிக்கிழமை காலை 6 to 7 மணிக்குள் மேல் கூறிய அனைத்தையும் மண்கலசத்தில் வைத்து, கலசத்திற்க்கு பட்டை, சந்தனம், பொட்டு இட்டு உங்கள் பூஜையறையில் வைத்து மஹாலக்ஷ்மியை மனதாற நினைத்து தாயெ நீ என்றும் எங்கள்வீட்டில் இருந்து அருளவேண்டும் என பிராத்தனை செய்து தூபதீபம் காட்டி பின் வரும் மந்திரத்தை 108 முறை கூறி பின் கலசத்தை மூடிவைக்கவும்.
இதனை வெள்ளிதோறும் 108 முறை சொல்லி வணங்கவேண்டும், கலசம் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.
அடுத்த வெள்ளிக்குள் பணவரவு உயர்வதை கண்கூடாக உணரலாம்.
இந்த எளிய பரிகாரத்தை செய்து அணைவரும் வலமடைய வேண்டுகிறேன்.
 
மந்திரம் :
 
ஓம் தன தான்ய லஷ்மியை வசி வசி
வசியை நமஹ..
இதனை முறைபடி செய்வதெ பலன் கொடுக்கும்.

துளசியின் மகத்துவம்


          கிருஷ்ணர் மீது பாமா, ருக்மணி இருவருக்கும் கொள்ளை ஆசை. ஆனால், பாமா அவரைத் தன்னுடன் மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பாள். இதற்காக நாரதரின் உதவியை நாடினாள்.
கடவுளை யாரும் தனக்குச் சொந்தமென உரிமை கொண்டாட முடியாது. அவர் எல்லோருக்கும் பொதுவானவர். இது நாரதருக்குத் தெரியும். இருப்பினும், பாமாவிடம் நேரில் சொன்னால் புரிந்து கொள்ளமாட்டாள்.
ஏதாவது உபாயம் செய்து, அவளுக்குப் புரிய வைக்க வேண்டுமென முடிவு செய்தார்.
                           ""பாமா! நீ கிருஷ்ணனை யாருக்காவது தானம் செய்து விட வேண்டும். பிறகு, ஒரு தராசுத்தட்டில் கிருஷ்ணனை இருக்கச் செய்து, மறுதட்டில் அவரது எடைக்கு எடை தங்கம் வைக்க வேண்டும். அதைத் தானம் பெற்றவரிடம் கொடுத்து மீட்டுக் கொள்ள வேண்டும். இப்படி செய்தால் கிருஷ்ணன் எப்போதும் உன் சொந்தம் தான்,'' என்றார் அந்த கலகக்கார முனிவர் கூறினார்.
பாமாவும் அதை நம்பி தங்கத்தைக் கொண்டு வந்து கொட்டினாள்.தராசு முள் அசையவே இல்லை. நேராக ருக்மணியின் அறைக்கு ஓடினாள். நிலைமையைச் சொன்னாள்.
                                ருக்மணி அங்கு வந்து "கிருஷ்ணா' என மனதார சொல்லிக்கொண்டு, ஒரே ஒரு துளசி இலையை எடுத்து வைத்தாள்.
ருக்மணியின் அன்பு, பக்தி, தூய மனம் ஆகியவற்றிற்கு கட்டுப்பட்டார் கிருஷ்ணர். எடை சமமாகி விட்டது.
இந்த கதை நமக்கு, பகவான் மீது அளவற்ற அன்பு கொண்டு பிராத்தனை செய்தால் அவர் திருவருள் என்றும் உண்டு என்பதனும், தனக்கு பிரியமான துளசி சமர்ப்பணமே அனைத்திருக்கும் மேலோங்கியது என்பதை உணர்த்துகிறது.
ஹரி ஓம்.